சென்னையில் சனாதன ஒழிப்பு மாநாடு கூட்டத்தில் கலந்துகொண்டு பேசிய விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசியது, தமிழ்நாடு கட்சிகள் மட்டுமின்றி இந்திய கூட்டணியில் இருக்கும் கட்சியினரிடையே அவமதிக்கும் செயலலில் திமுக அமைச்சர் பேசிவருவதாக குற்றம் சாட்டினர். இத்தகைய பேச்சிக்கு உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு திமுக அரசும், அமைச்சர் உதயநிதி நவம்பர் 10ம் தேதிக்குள் பதிலளிக்க உச்சநீதிமன்றம் நோட்டிஸ் பிறப்பித்துள்ளது.அந்த மாநாட்டில் சனாதன எதிர்ப்பு மாநாடு என்று போடாமல் "சனாதன ஒழிப்பு மாநாடு" என்று வைத்ததற்கு உதயநிதி ஆதரவு தெரிவித்தார். தொடர்ந்து அவர் பேசிய பேச்சு தேசிய அளவில் விவாதங்களை ஏற்படுத்தி உள்ளது. அவரின் பேச்சுக்கு எதிராக பலரும் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். இந்து மக்களை அவமதிக்கும் வகையில் விளையாட்டு துறை அமைச்சர் பேசிவருவதாக பாஜகவினர் போர்க்கொடி தூக்கினர்.
முன்னதாக உதயநிதி பேசியதற்கு மன்னிப்பு கேட்க விடும் என்று பல கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்நிலையில் உதயநிதியின் தலைக்கு உத்தரப் பிரதேசத்தின் அயோத்தியை சேர்ந்த சாமியார் பரமஹம்ச ஆச்சார்யா ரூ.10 கோடியை அறிவித்திருந்தார். அதேபோல் வடக்கில் ஒரு கோவிலின் வெளியில் உதயநிதியின் புகைப்படத்தை கீழே போட்டு மிதித்து சென்று தங்களது ஆதங்கத்தை வெளிப்படுத்தினர்.இதுகுறித்து தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை பேசியது: சனாதன ஒழிப்பு மாநாடு என்ற பெயரில் பிழைப்புவாதிகள் நடத்திய கூட்டமொன்றில் பேசிய திராவிடர் கழகத் தலைவர் வீரமணி, இந்து மதமும் சனாதன தர்மமும் வேறுவேறல்ல, இரண்டும் ஒன்றுதான். இந்து மதத்தை ஒழிக்க வேண்டும் என்று இவர்கள் பேசிய அதே கூட்டத்தில், இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு கலந்து கொண்டதும், இவர்கள் பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவிக்காமல் இருந்ததும் அதிர்ச்சியளிக்கிறது. அதேநேரத்தில், சனாதன தர்மம் குறித்த உதயநிதி ஸ்டாலினின் பேச்சுக்கு ‘இண்டியா’ கூட்டணி மன்னிப்பு கேட்க வேண்டும் என்று பாஜக மூத்த தலைவரும், பாதுகாப்புத் துறை அமைச்சருமான ராஜ்நாத் சிங் வலியுறுத்தினர்.
கூட்டணி காட்சிகள் எதிர்ப்பு?இந்திய கூட்டணியில் இருக்கும் திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் மம்தா பானர்ஜி "பொடிபையன் போல் உதயநிதி பேசுகிறார் ஒவ்வொரு மதமும் சமமாக மதிக்கப்பட வேண்டும் என்று ஒரு பிரிவு மக்களின் உணர்வுகளையும் பாதிக்கும் செயல்களில் நாம் ஈடுபட கூடாது என அறிவுறுத்தினார். இவரை போல் ஆம் ஆத்மீ கட்சி தலைவர், டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தாம் ‘சனாதன தர்மத்தை’ சேர்ந்தவர் என்றும், எல்லா மதத்தை மதிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார். இப்படி கூட்டணியில் இருக்கும் கட்சி தலைவர்களே உதயநிதி பேசியதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். ஆளும் கூட்டணி கட்சியும், எதிர் கட்சியும் திமுக அரசை விமர்ச்சித்தனர்.
இந்நிலையில் நேற்று தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி-யை விஸ்வ இந்து பரிஷத்தின் தேசிய செயல் தலைவர் அலோக் குமார், அகில பாரதிய சந்த் சமிதியின் பொதுச் செயலாளர் தண்டி சுவாமி ஜீதேந்திரானந்த சரஸ்வதி உள்ளிட்டோர் சந்தித்து சனாதன ஒழிப்பு மாநாட்டில் பேசிய உதயநிதியும், இதில் இந்து சமய அறநிலையத் துறையின் அமைச்சர் சேகர்பாபு பங்கேற்றது மிக மோசமான செயல் வேண்டும் உடனே அவர்களை அமைச்சர்கள் பதவியில் இருந்து நீக்க மனுவை ஆளுநரிடம் வலியுறுத்தினர். இத்தகைய பேச்சுக்கு சமூக தளத்தில் நான்கு படங்களை நடித்தவர்க்கு அரசியல் பற்றி என தெரியும், விளையாட்டு துறை அமைச்சர் விளையாட்டாகவே எல்லாத்தையும் செய்து வருகிறார் என சூசகமாக சாடி வருகின்றனர்.