தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கம் கூடிய கூட்டம் அங்கு கலந்து கொண்ட அமைச்சர்கள் என மொத்தமாக மேடையில் சனாதனத்திற்கு எதிராக குரல் கொடுத்தவர்களுக்காக தற்பொழுது அதன் பின்விளைவாக கடுமையான சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதுவும் இந்த வழக்கில் தீர்ப்பு உதயநிதிக்கு மற்றும் உதயநிதியுடன் சேர்த்து பேசியவர்களுக்கு எதிராக வரும் பட்சத்தில் தேர்தலில் நிற்பது முதல் பேசுவது வரை பல்வேறு விவகாரங்களில் சிக்கல் உண்டாகும் என தெரிகிறது.ஒருபுறம் உதயநிதி பேசியதற்காக இந்தியா கூட்டணியில் இருந்து திமுகவை விரட்டி விட தேசிய அளவில் திட்டமிடப்பட்டு வருவதாக தகவல்கள் கிடைத்துள்ள நிலையில் உதயநிதி அமைச்சர் பதவிக்கும், அவர் பேச்சுக்கும் வேறு தற்போது சிக்கல் ஏற்பட்டுள்ளது. இந்த சிக்கல் உதயநிதிக்கு மட்டுமல்ல ஆ ராசாவிற்கும், திருமாவளவனுக்கும் சேர்த்து தான் என்கின்ற புது தகவல் கிடைத்துள்ளது.
உச்சநீதிமன்றத்தில் உதயநிதிக்கு எதிராக ஜெகந்நாத் என்பவரும் வழக்கு தொடர்ந்துள்ளார். அவரது மனுவை விசாரித்த நீதிபதிகள் அனிருத்தா போஸ், திரிவேதி பெஞ்ச், ஏன் சென்னை உயர்நீதிமன்றத்தை அணுகக் கூடாது என கேள்வி எழுப்பினர். அப்போது மனுதாரர் சார்பில் ஆஜரான வழக்கறிஞர், ஒரு தனிநபர் மதத்துக்கு எதிராக பேசவில்லை. மாநில அரசின் அமைச்சர்கள் இந்த மாநாட்டில் பங்கேற்றுள்ளனர் என வாதிட்டனர். மேலும் மனுதாரர் ஜெகந்நாத் தமது மனுவில், தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் மகன் உதயநிதி ஸ்டாலின், ஆ.ராசா, தொல்.திருமாவளவன், பீட்டர் அல்போன்ஸ் ஆகியோரும் அவரது ஆதரவாளர்களும் சனாதன தர்மம் அல்லது இந்து மதத்துக்கு எதிராக பேச தடை விதிக்க வேண்டும் எனவும் வலியுறுத்தி இருக்கிறார். அத்துடன் செப்டம்பர் 2-ந் தேதி சனாதன ஒழிப்பு மாநாட்டில் அமைச்சர்கள் பங்கேற்றது அரசியல் சாசனத்துக்கு விரோதமானது என உத்தரவிட வேண்டும் எனவும் கோரியுள்ளார்.
இப்படி மனுதாரர் கோரி உள்ள விவகாரம் தொடர்பாக மனுதாரருக்கு ஆதரவாக நீதிபதிகள் தீர்ப்பளிக்கும் பட்சத்தில் அடுத்த கட்ட நடவடிக்கையாக உதயநிதிக்கு மட்டுமல்லாது ஆ.ராசா, திருமாவளவன் மற்றும் பீட்டர் அல்போன்ஸ் ஆகியோர்களுக்கும் சேர்த்து மிகப்பெரிய எதிர்வினையை ஏற்படுத்தும் எனவும் அவர்கள் பதவி வகிக்கவும் தேர்தலில் போட்டியிடவும் வேறு இந்த விவகாரம் சிக்கலை ஏற்படுத்தும் எனவும் சட்ட வல்லுநர்கள் கூறுகின்றன. இது மட்டுமல்லாமல் அரசியலமைப்பு சட்டத்தின் படி தேர்தலில் வெற்றி பெற்று உறுதிமொழி எடுத்த இந்த மூவரும் இப்படி பேசி இருப்பது அதுவும் குறிப்பாக ஒரு மதத்திற்கு எதிராக கூட்டப்பட்ட ஒரு கூட்டத்தில் சென்று சனாதன தர்மத்தை ஒழிக்க வேண்டும் என பேசி இருப்பது சாதாரண விஷயம் இல்லை இதில் மிகப்பெரிய விஷயம் இதன் விபரீதம் புரியாமல் திமுக கூட்டணி இருந்து வருகிறது எனவும் வேறு சில அரசியல் பார்வையாளர்கள் கூறுகின்றனர்.
இதில் குறிப்பிடத்தக்க விஷயம் என்னவென்றால் உதயநிதியாவது எம்எல்ஏவாக இருக்கிறார் ஆனால் ஆ.ராசா மற்றும் திருமாவளவன் எம்பி ஆக இருக்கின்றனர், இன்னும் ஐந்து மாத காலத்தில் தேர்தல் வரவிருக்கும் நிலையில் இந்த வழக்கு வேகம் எடுத்திருப்பது ஆ.ராசா மற்றும் திருமாவளவனுக்கு நல்லது இல்லை எனவும் வேறு அரசியல் பார்வையாளர்கள் கூறுகின்றனர் தேர்தல் சமயத்தில் இந்த ஒரு பேச்சு, இந்த ஒரு வழக்கை வைத்தே கண்டிப்பாக இருவரும் எம்பி பதவிக்கு நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடுவதற்கு சிக்கலை ஏற்படுத்தலாம் என வேறு கூறி வருகின்றன. எப்பொழுது இந்த சனாதன பேச்சு விவகாரம் பூதாகரமாக வெடிக்குமோ என ஆ.ராசா மற்றும் திருமாவளவன் அஞ்சு நடுங்கி வருவதாகவும் சில தகவல்கள் கிடைத்துள்ளன.