24 special

தேவையில்லாமல் சனாதனத்தை தொட்ட உதயநிதி...! ஆணிவேர் வரைக்கும் அசைக்க துவங்கியது வினை...!

mk stalin, udhayanithi
mk stalin, udhayanithi

தமிழ்நாடு எழுத்தாளர் முற்போக்கு சங்கம் சார்பில் நடத்தப்பட்ட மாநாட்டில் உதயநிதி பேசிய சனாதன சர்ச்சை பேச்சு தான் தற்பொழுது திமுக அரசையே ஆட்டிப் படைக்க ஆரமித்துள்ளது.. சனாதன எதிர்ப்பு மாநாட்டில் பேசிய உதயநிதி 'சனாதனத்தை எதிர்க்கக் கூடாது ஒழிக்க வேண்டும், டெங்கு மலேரியா போல் சனாதன தர்மம் ஒழிக்கப்படவேண்டும்' என பேசியது வட இந்தியாவில் திமுகவிற்கு கூட்டணி ரீதியிலான பெரிய அடிகளை கொடுத்தது, இது மட்டுமல்லாமல் தென்னிந்தியாவில் மற்ற கட்சியினர் பேச தயங்கும் விஷயத்தை உதயநிதி பேசிய காரணத்தினால் இந்த விவகாரத்தில் 'உதயநிதிக்கு பக்குவம் போதவில்லை! புரிதல் இல்லை' என கூட்டணி கட்சியான காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் சொல்லும் அளவிற்கு அமைந்தது. 


இந்த நிலையில் 'உதயநிதி அவரது அப்பா பேச்சை மட்டும் தான் கேட்கிறார், ஆபத்து தெரியாமல் பேசி விடுகிறார்' என திமுகவின் நாடாளுமன்ற நிலைக்குழு தலைவரும், பொருளாளருமான டி.ஆர்.பாலுவே முதல்வர் ஸ்டாலினை மேடையில் வைத்துக்கொண்டு  பேசும் வகையில் இருந்தது உதயநிதியின் பேச்சு. இப்படி உதயநிதி பேசியது அரசியல் ரீதியாக அவருக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்திய நிலையில் தற்போது சட்ட ரீதியில் உதயநிதிக்கு எதிராக அதிரடி நடவடிக்கை ஒன்று பாய்ந்துள்ளது.சென்னையை சேர்ந்த வழக்கறிஞர் ஜெகநாத் சார்பில் உதயநிதி ஸ்டாலினின் சனாதன தர்மம் பேச்சுக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. அதில், “அதில் இந்து மதம், சனாதன தர்மத்தை குறி வைத்து தகாத முறையில் பேசி அவமதிக்கும்  வகையில் சனாதன ஒழிப்பு மாநாடு நடத்தப்பட்டுள்ளது. தமிழ்நாடு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசியுள்ளார். தமிழக அமைச்சர்கள் உதயநிதி ஸ்டாலின், சேகர் பாபு பங்கேற்றது அரசமைப்பு சாசனத்தின் 25,26 பிரிவுகள் மீறப்பட்டதாகும். இந்த மாநாட்டிற்கு தமிழீழ விடுதலை புலிகள் போன்ற பயங்கரவாத இயக்கம் மூலம் நிதி வழங்கப்பட்டுள்ளதா என்பதை சிபிஐ விசாரணை செய்ய உத்தரவிட வேண்டும்.” என கோரப்பட்டிருந்தது.

இப்படி உதயநிதி பேசியது அரசியலமைப்பு சாசனத்திற்கு முரணானதாகும், மேலும் விதிகளை மீறப்பட்டதாகவும் எனவும் விடுதலைப்புலிகள் போன்ற பயங்கரவாத இயக்கம் மூலம் நிதி வழங்கப்பட்டுள்ளதா என சிபிஐ விசாரணை விட வேண்டும் என பல்வேறு சர்ச்சையான விஷயங்களை சேர்த்து நீதிமன்றத்தில் அந்த மனு கோரப்பட்டு இருந்தது திமுக தலைமையை அதிர்ச்சி அடைய வைத்தது.இந்த மனுவானது, உச்ச நீதிமன்ற நீதிபதிகள் அனிருதா போஸ், பேலா எம். திரிவேதி ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, மனு குறித்து பதிலளிக்க உதயநிதி ஸ்டாலினுக்கும், சனாதன ஒழிப்பு மாநாட்டில் அமைச்சர்கள் ஏன் பங்கேற்றார்கள் என்பது குறித்து பதிலளிக்க தமிழ்நாடு அரசுக்கும் உத்தரவிட்டுள்ளது. முதலில் இந்த வழக்கை ஏன் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யக்கூடாது என கேட்ட நீதிபதிகள் பின்னர் வழக்கின் தன்மையை பார்த்து நோட்டீஸ் பிறப்பித்து உத்தரவிட்டுள்ளனர்.

இப்படி நோட்டீஸ் வரும் பட்சத்தில் திமுக அரசு குறிப்பாக உதயநிதி தரப்பு இதற்கான முழு விளக்கம் கொடுக்க வேண்டும் அப்படி கொடுக்கவில்லை என்றால் நீதிமன்ற அவமதிப்பு போல் ஆகிவிடும் அப்படி நீதிமன்ற அவமதிப்பு செய்தால் ஏற்கனவே ராகுல் காந்தி வழக்கில் பிரதமர் மோடியை விமர்சிக்கிறேன் என்ற பெயரில் ஒரு குறிப்பிட்ட சமுதாயத்தை குறித்து பேசியது சர்ச்சையான நிலையில் அவரது பதவி பறிக்கப்பட்டு, தேர்தலில் போட்டியிட தடை விதிக்கப்பட்ட போது என்ன நடந்ததோ அது போன்று உதயநிதி வழக்கிலும் ஏற்படுவதற்கு வாய்ப்புகள் நிறைய இருப்பதாக சட்ட வல்லுனர்கள் கூறுகின்றனர். சனாதானத்தை தொட்டு உதயநிதி சாம்ராஜ்யம் சரி துவங்கியுள்ளது என அரசியல் விமர்சனங்கள் எழுந்துள்ளன.