24 special

560 கோடி...! சரிந்த 'டெல்டாகாரன்' இமேஜை தூக்கி நிறுத்த செலவழிக்கும் திமுக அரசு...!

mk stalin
mk stalin

கடந்த தேர்தலில் திமுக தமிழகத்தில் ஆளும் அரசாக பொறுப்பேற்றதற்கு முக்கிய காரணமாக இருந்த டெல்டா பகுதியில் தற்போது திமுக அரசுக்கு எதிரான மற்றும் அதிருப்தியான சூழ்நிலைகள் நிலவுவதாக தகவல்கள் வெளியானது. ஏனென்றால் அப்பகுதி முழுவதும் முக்கிய வாழ்வாதாரமாக உள்ள காவிரி நீர் விவசாய பாசனத்திற்கு சரிவர வராததும் அதற்கான நடவடிக்கைகள் தமிழக அரசு தரப்பில் தீவிரமாக எடுக்கப்படாததும் விவசாயிகள் மத்தியில் கடும் கோபத்தை கிளப்பியது என கள நிலவரங்கள் தெரிவிக்கின்றன. அதனை மடை மாற்றுவதற்காகவே முதல்வர் மு க ஸ்டாலின் சில தினங்களுக்கு முன்பு சுற்றுப்பயணத்தை டெல்டா மாவட்டங்களான திருவாரூர் மற்றும் நாகை போன்ற மாவட்டங்களில் மேற்கொண்டார். 


அப்படி மேற்கொள்வதற்கு மற்றொரு காரணமும் முக்கியமாக கூறப்பட்டது அதாவது அண்ணாமலை தனது பாதயாத்திரை ராமேஸ்வரத்தில் தொடங்கி கிட்டதட்ட தென் தமிழக முழுவதும் தன் பக்கம் திருப்பி விட்டார் பிறகு அடுத்தடுத்த கட்ட நடை பயணத்தில் பெரும்பான்மையான இடங்களாக டெல்டா உள்ளது என்று தகவல் வெளியானதை அடுத்து இந்த சுற்றுப்பயணத்தை முதல்வர் மேற்கொண்டுள்ளார் என்றும் அரசியல் வட்டாரங்களில் கிசுகிசுக்கப்பட்டது. அதற்கு ஏற்றார் போல் முதல்வரும் சுற்றுப்பயணத்தை மேற்கொண்டாரே தவிர காவிரி நீரை கொண்டு வருவதற்கான நடவடிக்கைகள் பெருமளவில் எடுக்கப்படாமல் இருந்தது விவசாயிகள் தரப்பில் அதிருப்தியை ஏற்படுத்தியது. இந்த நிலையில் இரண்டு தினங்களுக்கு முன்பு காவிரி ஆற்றில் இருந்து வரப்படும் தண்ணீர் இந்த முறை கிடைக்காத காரணத்தினால் 20 ஆயிரம்  ஏக்கர் வரை சாகுபடி செய்யப்பட்டவை பாதிக்கப்பட்டுள்ளதாகவும், அதற்காக தமிழக அரசு ஏக்கருக்கு 30,000 வரை இழப்பீடு தர வேண்டும் என்றும் விவசாயிகள் தரப்பில் கோரிக்கை முன்வைக்கப்பட்டது.

மேலும் காவிரியில் இருந்து நீர் திறந்து விட வேண்டும் என்பதற்கான போராட்டங்களும் ஆங்காங்கே வெடித்து வருகிறது, இந்த நிலையில் விவசாயிகள் அனைவரும் இழப்பீடு கோரி போராட்டத்தில் ஈடுபட்டது தமிழக அரசுக்கு அறிக்கையாக சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக கடந்த முறை நாம் ஆட்சி அமைப்பதற்கு முக்கிய பங்காற்றிய டெல்டா பகுதி மக்கள் மத்தியில் பின்னடைவை சந்திக்கும் என்ற ஒரு அறிக்கையும் சென்றதால் தற்பொழுது ரூபாய் 560 கோடி இழப்பீட்டுத் தொகையை முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். அதாவது 2022 - 2023 ஆண்டின் இடைப்பட்ட காலத்தில் இயற்கை இடர்பாடுகளால் சம்பா பயிர் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது என்றும் சம்பா மகசூல் இழப்பிற்காக ரூபாய் 560 கோடியை இழப்பீட்டு தொகையாக விவசாயிகளுக்கு வழங்கி உத்தரவிட்டுள்ளார் முதல்வர் மு க ஸ்டாலின்.

இப்படி விவசாயிகளுக்கு இந்த நிவாரணத் தொகை கிடைக்கும் பட்சத்தில் தற்போது திமுக விற்கும் முதல்வர் மு க ஸ்டாலினுக்கும் ஏற்பட்டுள்ள பின்னடைவு சரிகட்டப்படும் என்றும், இதனால் சிறிது காலத்திற்கு காவிரி நீர் குறித்த போராட்டத்தில் மக்கள் கவனம் செலுத்தாமல் இருப்பார்கள் என்பதையும் கருத்தில் கொண்டு இந்த இழப்பீடு தொகை அறிவிக்கப்பட்டுள்ளதாக விமர்சனம் எழுந்துள்ளது.. மேலும் டெல்டா பகுதியில் சரிந்து கொண்டிருக்கும் திமுக வாக்கு வங்கியை நிலை நிறுத்துவதற்கு இந்த இழப்பீடு தொகை உதவியாக இருக்கும் என்ற வகையில் அறிவாலயம் இந்த திட்டத்தை பற்றி ஆலோசனையில் ஈடுபட்டு இதில் இறங்கி உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இன்னும் 5 மாத காலத்தில் தேர்தல் வரவுள்ளதால் ஏற்கனவே ‘டெல்டாகாரன்’ என கூறி இமேஜை ஏற்படுத்திவிட்டோம், இப்பொழுது இந்த தொகையும் திமுக வாக்குகள் டெல்டாவில் சரியாமல் நமக்கு கிடைத்துவிடும் என அறிவாலயம் இதனை திட்டமிட்டு செயல்படுத்துவதாக வேறு சில தகவல்கள் கசிந்துள்ளன.