அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கடந்த சில நாட்களாகவே அரசியல் செய்கிறேன் என்ற பெயரில் சில செயல்களை செய்து வருகிறார்.அந்த வகையில் நீட் தேர்விற்கு எதிராக கடந்த ஆகஸ்ட் மாதம் போராட்டம் நடத்தி அனைவரையும் அதில் கலந்து கொள்ளுமாறு வலியுறுத்தினார் ஆனால் நீட் விவகாரம் உதயநிதிக்கு கைகொடுக்கவில்லை ஏனென்றால் நீட் தேர்வை எதிர்கிறேன் என்ற பெயரில் ஆளுநர் மற்றும் பாஜாக அரசை கடுமையாக விமர்சித்து பேசியது அரசியல் ரீதியாக உதயநிதிக்கு பின்னடைவை ஏற்படுத்தியது.இதனால் உதயநிதிக்கு மக்கள் மத்தியில் செல்வாக்கு குறைய ஆரம்பித்தது இதனை உணர்ந்து கொண்ட உதயநிதி அடுத்த சர்ச்சையில் தாமாகவே வந்து மாட்டிக்கொண்டார் என அரசியல் பார்வையாளர்கள் கூறும் அளவிற்கு தற்போது அடுத்த சர்ச்சையில் சிக்கியுள்ளார்.
தமிழ்நாடு முற்போக்கு எமுத்தாளர் சங்கம் சார்பில் நடைபெற்ற சனாதன ஒழிப்பு மாநாட்டில் கலந்து கொண்டு பேசிய உதயநிதி ஸ்டாலின் சனாதன தர்மம் என்பது ஒரு முற்போக்கு கருத்து என்றும் சமூக நீதிக்கு எதிராக இருப்பது என்றும் கூறியதோடு திராவிட மாடல் ஆட்சியில் எல்லோர்க்கும் எல்லாமும் கிடைக்கும்.ஆனால் சனாதன தர்மம் என்பது மக்களின் நலனை கெடுக்கும் என்பதால் டெங்கு மலேரியா போன்ற நோய்களை எப்படி விரட்டுவோமோ அதே போல். இந்தியாவில் இருந்து சனாதன கொள்கையை விரட்ட வேண்டும் என்று கூறினார்.உதயநிதியின். இந்த பேச்சு இந்துக்களுக்கு எதிரான கருத்தாக அமைந்ததால் மக்கள் மத்தியில் உதயநிதிக்கு கடும் அவப்பெயர் ஏற்பட்டுள்ளது என கூறப்படுகிறது.
மேலும் உதயநிதியின் பேச்சுக்கு உள்துறை அமைச்சர் அமித்ஷா உள்பட பாஜாகாவில் உள்ள அனைவரும் கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளனர் ஏன் உத்திர பிரதேச மாநிலத்தில் உள்ள சாமியார் பரகாம்ச ஆச்சார்யா வரை இந்த செய்தி பரவியதால் அவர் உதயநிதியின் தலையை சீவுவதற்கு பத்து கோடி அறிவித்துள்ளார் என்ற செய்தியும் வெளிவந்தது இவ்வாறு சனாதன கொள்கையை உயர்வாக அனைவரும் மதித்து வரும் நிலையில் சனாதனத்தை காலில் போட்டு மிதிப்பது போன்றும் இந்துத்துவத்திற்கு எதிராகவும் உதயநிதியின் பேச்சு அமைந்ததால் உத்திரபிரதேச மாநிலத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
ஆனால் தான் பேசியது தப்பு என்று உணராமல் உதயநிதி மறுபடியும் சர்ச்சைக்குரிய வகையில் நான் பேசியது சரிதான் என்றும் மேலும் இப்படி தான் பேசுவேன் என்று கூறியதோடு மட்டுமல்லாமல் இதனால் வரும் விளைவுகளை சட்ட படி சந்திக்க தயார் என பேசிவிட்டு பயந்து கொண்டு தன் வீட்டு வாசலில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போட்டுள்ளார் என்ற செய்தியும் வெளியாகி உள்ளது இந்நிலையில் உதயநிதியின் சனாதனம் குறித்த சர்ச்சை பேச்சுக்கு அவருக்கு ஆதரவு தெரிவித்து பேசுபவர்கள் மீதும் வழக்கு பதிவு செய்ய உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது, அந்த வகையில் உத்திர பிரதேச மாநிலத்தில் அமைந்துள்ள ராம்பூர் சிவில் லைன்ஸ் காவல் நிலையத்தில் வழக்கறிஞர் கொடுத்த புகாரின் அடிப்படையில் உதயநிதி ஸ்டாலின் மீது வழக்கு பதிவு செய்தது மட்டுமல்லாமல் உதயநிதியின் கருத்துக்கு ஆதரவாக பேசிய கர்நாடக அமைச்சர் பிரியங் கார்கே மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் தமிழகத்தில் உதயநிதிக்கு ஆதரவாக பேசிய விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் மற்றும் எம்பி எம்எல்ஏக்கான செல்ல பெருந்தகை தயாநிதி மாறன் சேகர் பாபு மற்றும் அமைச்சர் பொன்முடி ஆகியோர் மீதும் வழக்கு பாயும் என்ற தகவலும் வெளியாகி உள்ளது. மேலும் இந்த வழக்குகளுக்கு நடவடிக்கை எடுக்கப்பட்டால் பதவி பறிப்பு போன்ற அடுத்த கட்ட நடவடிக்கைகளும் பாயும் என கூறப்படுகிறது...