24 special

அழைச்சிட்டு வந்து கொண்டாட்டம் எல்லாம் செஞ்சோமே நீங்களுமா..? உடன்பிறப்புகளை கதறவிட்ட தோனி...!

mk stalin, ms dhoni
mk stalin, ms dhoni

நாட்டின் ஒவ்வொரு பகுதிகளில் ஒவ்வொரு விதமான நிகழ்வுகள் நடந்து பிரச்சனைகள் வெடிக்கின்ற வேலையில் தற்போது நாட்டின் பெயரை வைத்து ஒரு பிரச்சனை எழுந்துள்ளது. அதாவது வருகின்ற செப்டம்பர் 9 மற்றும் 10 ஆகிய நாட்களில் ஜி20 மாநாட்டின் உச்சி மாநாடு டெல்லியில் நடைபெற உள்ளது இந்த மாநாட்டில் உலக தலைவர்கள் கலந்து கொள்ள உள்ளனர். அவர்களுக்கு குடியரசு தலைவர் திரௌபதி முர்மு இரவு விருந்து அளிக்க உள்ளார். இந்த இரவு விருந்துருக்கான அழைப்பிதழில் பிரசிடெண்ட் ஆப் இந்தியா என்ற அச்சிடப்படுவதற்கு பதிலாக பிரசிடெண்ட் ஆப் பாரத் என்று அச்சிடப்பட்டிருக்கிறதாக தகவல்கள் வெளியானது. இப்படி நாட்டின் பெயர் மாற்றப்பட்டதற்கு பின்னணியில் காரணம் உள்ளதாக விமர்சனங்களை இடதுசாரி கட்சிகள் முன்வைத்துள்ளது. அதாவது இது பற்றிய கருத்தை காங்கிரஸ் கட்சியின் சேர்ந்த செய்தி தொடர்பு பொதுச் செயலாளர் ஜெயராம் ரமேஷ் தனது எக்ஸ் பக்கத்தில் விமர்சனம் செய்தார். 


இவரை அடுத்து தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் பாஜக ஆட்சியை வீழ்த்தும் கூட்டணிக்கு இந்தியா என்ற பெயர் சூட்டப்பட்டுள்ளதால் பாஜகவிற்கு இந்தியா என்ற பெயர் கசந்து விட்டதாகவும் இந்தியாவை வளர்ச்சி மிக்க இந்தியாவாக மாற்ற போகிறோம் என்று சொல்லிக் கொண்டிருந்த பிரதமர் நரேந்திர மோடிக்கு ஒன்பது ஆண்டுகளில் அதன் பெயரை மட்டுமே மாற்ற முடிந்தது என்று பிரதமர் நரேந்திர மோடியையும் தேர்தலில் இந்தியா என்ற சொல்லை பாஜகவை விரட்டும் என்று பாஜகவையும் விமர்சனம் செய்துள்ளார். இவருக்கு அடுத்து அரவிந்த் கெஜ்ரவால், சீத்தராமையா போன்றோர் பாரத் என்ற பெயருக்கு எதிர்ப்புகளை தெரிவித்து வந்த சமயத்தில் மத்திய அமைச்சர்களும் ஆர்எஸ்எஸ் தலைவர் மற்றும் பல பிரபலங்கள் இந்த பெயரை ஏற்றதோடு அதனை வரவேற்றும் வருகின்றனர். இப்படி இடதுசாரிகள் மத்தியில் குறிப்பாக திமுகவின் கூட்டணிக்கு பாரத் என்ற பெயர் குறித்த விவகாரம் சமூக வலைதளத்தில் பேசு பொருளாக மாறி வந்தது.

அதாவது இந்த பாரத் என்ற பெயரை கேலி செய்வதும் இனி நான் ஆன்ட்டி இந்தியன் அல்ல ஆன்ட்டி பாரத் என்று மீம்ஸ்கள் பறக்க விடுவதை திமுகவை சார்ந்த சமூக வலைதள ஐடிகள் செய்து வந்தனர். இந்த நிலையில் கிரிக்கெட் வீரர் சேவாக், பாலிவுட் நடிகர் அமிதாப் போன்றோர் பாரத் என ஆதரவு கொடுத்ததற்கு உங்களை எல்லாம் சின்ன பிள்ளைகளில் இருக்கும் பொழுது கொண்டாடினோமே என்று திமுகவைச் சார்ந்த ஐடிகள் பதிவிட்டு வந்தனர். இந்த நிலையில் கிரிக்கெட் வீரர் டோனி பாரத் பெயருக்கு ஆதரவாக தனது சமூக வலைதளம் பக்கத்தின் முகப்பையும் பெயரையும் மாற்றியுள்ளார். அதாவது இந்திய கொடியின் பின்னணியில் இந்தி மற்றும் ஆங்கிலத்தில் ஐஎம் பிளஸ் டூ பி எ பாரத்யா என்று குறிப்பிட்டதோடு அதனை தனது இன்ஸ்டாகிராம் ப்ரொபைல் பிச்சர் ஆகவும் மாற்றியுள்ளார்.

இப்படி தோனியும் பாரத்திற்கு ஆதரவாக சமூக வலைதளத்தில் ப்ரொபைல் பிக்சரை மாற்றியதற்கு திமுக தோனியை குறிப்பிட்டு நீங்களுமா..? 'யூ டூ புரூட்டஸ்' என தோனியை விமர்சித்து பதிவிட்டு வருகின்றனர். மேலும் சமூக வலைதள பதிவில் சிஎஸ்கே கூட்டங்கள் நடக்கும் பொழுதும் சரி உங்கள் படம் திரையிடப்படும் பொழுதும் சரி சென்னை சேப்பாக்கத்தில் கருணாநிதியின் கேலரியை திறக்கும் பொழுதும் சரி என அனைத்து பொது நிகழ்வுகளுக்கும் உங்களை தான் அழைத்து திறக்க வைத்தோம் ஆனால் இப்படி நீங்களே செய்வீர்கள் என்று எதிர்பார்க்கவில்லை என உடன்பிறப்புகள் பதிவிட்டு வருகின்றனர்.