அதிமுக 52ம் ஆண்டு தொடக்கவிழாவில், சனாதனம் என்றால் என்னனு தெரியுமா? அமைச்சர் உதயநிதியயை கடுமையாக சாடினார் நடிகை விந்தியா. கோயம்பத்தூர் கவுண்டம்பாளையம் பகுதியில் நேற்று அதிமுகவின் 52ம் ஆண்டு பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்த பொதுக்கூட்டத்தில் அதிமுக தலைமை கழக பேச்சாளரான நடிகை விந்தியா சிறப்பு அழைப்பாளராக பங்கேற்றார். அப்போது பேசிய அவர்,திமுக தேர்தல் வாக்குறுதியில் கொடுத்த எந்த திட்டங்களையும் நிறைவேற்றவில்லை என திமுக அரசை குற்றம் சாட்டினார். திமுகவில் இருக்கும் பால்ட்டாயில் அமைச்சர் உதயநிதி அதிமுகவினர் நாற்காலிக்காக சண்டை போடுவதாக கூறுவது.
உண்மை தன்மை தெரியாமல் பேசி வருகிறார். இதற்கிடையில் கடந்த 10 நாட்களுக்கு முன்பாக பொது நிகழ்ச்சி ஒன்றில் முதலமைச்சர் மு க ஸ்டாலின் அருகில் பாராளுமன்ற உறுப்பினர் ஆ.ராசா அமர்ந்திருந்த நிலையில் அவரை தட்டி எழுப்பி அந்த இடத்தில் தனது மகனான உதயநிதி ஸ்டாலினை அமர வைத்ததாகவும் அதே நாற்காலியில் மற்ற அமைச்சர்கள் உட்கார்ந்து இருந்தால் அவர்களை எழுப்புவார்களா என கேள்வி எழுப்பியத்துடன் ஒடுக்கப்பட்ட சமூகத்தைச் சார்ந்தவர் என்பதால் அவர் எழுப்பப்பட்டதாகவும் இவர்களெல்லாம் சமூக நீதி பேசுகிறார்கள் எனவும் விமர்சித்தார்.
செந்தில் பாலாஜி கைதின்போது மட்டும் சீண்டி பார்க்காதீர்கள் தாங்க மாட்டீர்கள் என முதலமைச்சர் ஸ்டாலின் வீடியோ வெளியிட்டதாகவும் ஒருமுறை சீண்டிப் பார்க்காதீர்கள் என சொன்னதற்கே அவர்கள் நோண்டி பார்த்து விட்டதாகவும் இதற்கு மேல் அவர் பேசினால் அனைவருக்குமே ஆபரேஷன் தான் எனவும் நகைப்புடன் கூறினார்.சனாதனத்திற்கும் உதயநிதிக்கும் என்ன சம்பந்தம் எனவும் உதயநிதி ஸ்டாலினுக்கு "சனா என்றால் சனாக்கானையும் தனா என்றால் தமன்னாவையும்" தான் தெரியும்., ஆனால் அவர் சனாதனத்தை பற்றி பேசுகிறார் எனவும் கூறினார்.
சனாதனம்,பகுத்தறிவு,சமூக நீதி என பேசிவிட்டு குஷ்புவுக்கு கோயில் கட்டினாலும் பால் குடத்தை தூக்கிக்கொண்டு முதல் ஆளாக திமுகவினர் நிற்பார்கள் எனவும் திமுக விடமிருந்து கோவிலையும் காப்பாற்ற முடியாது கடவுளையும் காப்பாற்ற முடியாது எனவும் தெரிவித்தார்.ஆயுத பூஜைக்கு எழுதும் பேனாவை பூஜையில் வைத்து கும்பிட்டால் பைத்தியக்காரர்கள் என்று சொல்லும் திமுக, எழுதாத பேனாவிற்கு 80 கோடி செலவு செய்து கடலில் சிலை வைக்கிறார்கள் என்றும் ஆனால் பகுத்தறிவு நாத்திகர்கள் என கூறி யாரை முட்டாளாக்க பார்க்கிறார்கள் என்றார்.
திமுக ஆட்சி அமைத்து இரண்டரை ஆண்டுகள் ஆகியும் மைனாரிட்டி மக்களுக்காக என்ன செய்தார்கள் என மக்கள் சிந்திக்க வேண்டும் எனவும் 20 ஆண்டுகளுக்கு மேலாக சிறையில் உள்ள இஸ்லாமிய கைதிகளை விடுதலை செய்தார்களா எனவும் வினா எழுப்பியதுடன், ஆளுநருக்கு கோரிக்கை வைத்திருப்பதாகவும் பிரச்சனை வந்தால் பழியை தூக்கி ஆளுநர் மீது போடுவதற்காக முதலமைச்சர் ஸ்டாலின் செய்யும் அரசியல் இது எனவும் குற்றம் சாட்டினர்.விவவசாயத்தையும் டாஸ்மாக் மதுபான கடையையும் ஒப்பிட்டு அடுக்கு மொழியில் பேசி திமுகவை விமர்சித்த விந்தியா அதிகார பலத்திலும் பண பலத்திலும் திமுக தள்ளாடிக் கொண்டிருக்கிறது ஆனால் தமிழக மக்களை மட்டும் உண்மையான போதையில் மட்டும் தள்ளாட வைக்கிறது என்றும் திமுக அரசை கடுமையாக தாக்கி பேசினார்.