கடந்த மூன்று தினங்களுக்கு முன்பு மகளிர் உரிமை மாநாட்டிற்கு காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியா காந்தி சென்னை வந்து சென்றார், அப்பொழுது சோனியா காந்தியிடம் திமுக காங்கிரஸ் கூட்டணிக்கு ஒதுக்கப்படும் தொகுதி எண்ணிக்கை குறித்து சோனியா காந்தி தங்கி இருந்த ஐடிசி கிராண்ட் ஹோட்டலில் பேச்சுவார்த்தையை கனிமொழி நடத்தியதாக சில தகவல்கள் வெளியானது. அந்த பேச்சு வார்த்தையின் போது திமுக காங்கிரசுக்கு ஐந்து தொகுதிகள் கொடுக்க இருப்பதாக தகவலை சோனியா காந்தியிடம் கனிமொழி முன்வைத்த பொழுது சோனியா காந்தி அதற்கு ஒப்புக்கொள்ளவில்லை எனவும் இதன் காரணமாக நாங்கள் வேறு வழியை பார்த்துக் கொள்கிறோம் என்கின்ற ரீதியில் ஒரு பதிலை சொல்லிவிட்டு சென்றதாகவும் வேறு தகவல்கள் கசிந்தன.
மேலும் சோனியா காந்தி தமிழக காங்கிரசாரை அழைத்து நமக்கு குறைந்தபட்சம் இரட்டை இலக்க அளவிலான தொகுதிகள் வேண்டும் அதற்கு கம்மியாக திமுக கொடுத்தால் நாம் வேறு வழியை பார்த்துக் கொள்ள நேரிடும் தயாராக இருங்கள் என கூறிவிட்டு சென்றதாக வேறு சில தகவல்கள் கசிந்தன. இந்த நிலையில் திமுக காங்கிரஸ் கூட்டணி தேர்தல் வரை நீடிக்குமா என பல்வேறு விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டது, இப்பொழுது அதனை உறுதிப்படுத்தும் விதமாக பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் திமுக காங்கிரஸ் கூட்டணியின் முதல் சண்டையை ஆரம்பித்து வைத்து பிள்ளையார் சுழி போட்டு வைத்துள்ளார். திமுக கூட்டணியில் திருவாடானை தொகுதி காங்கிரஸ் கட்சிக்கு தொடர்ந்து ஒதுக்கப்பட்டு வருகிறது, திருவாடானை தொகுதியை பொருத்தவரை கரியமாணிக்கம், கே ஆர் ராமசாமி, கருமாணிக்கம் என ஒரே குடும்பத்தைச் சேர்ந்த தாத்தா, அப்பா, மகன் என மூன்று தலைமுறையை சேர்ந்தவர்கள் கடந்த 10 தேர்தலில் சட்டமன்ற உறுப்பினராக இருந்துள்ளனர்.
இப்போதைய காங்கிரஸ் எம்.எல்.ஏ கருமாணிக்கத்தின் தாத்தா கரியமாணிக்கத்திற்கு தொகுதியில் ஒரு காலத்தில் தனி பெரும் செல்வாக்கு இருந்தது, இப்படி பரம்பரை பரம்பரையாக திருவாடானை தொகுதி என்பது காங்கிரசுக்கு செல்வாக்கு மிகுந்த தொகுதியாக இருந்து வரும் நிலையில் அனைவரும் காங்கிரஸ் கட்சியின் கை சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்றனர். இந்த நிகழ்ச்சிகள் சமீபத்தில் திருவாடானையில் அமைச்சர் ராஜகண்ணப்பன் பங்கேற்ற நிகழ்ச்சிக்கு காங்கிரஸ் எம்எல்ஏ மாணிக்கம்வரவில்லை என தெரிகிறது, இதன் காரணமாக கடுப்பில் அமைச்சர் ராஜா கண்ணப்பன் இருந்ததாகவும் அதே கடுப்பில் அந்த கூட்டத்தில் அமைச்சர் ராஜகண்ணப்பன் பேசும்பொழுது 'திருவாடானை தொகுதி நல்ல தொகுதி என்றும் நல்லவர்களுக்கு ஓட்டு போட மக்கள் தயங்கவே மாட்டார்கள்' என்று பேசினார் எனவும் தெரிகிறது.
மேலும் அவர் கூறிய விவகாரம் தான் காங்கிரஸ் திமுக கூட்டணிக்கு முதல் விரிசலை ஏற்படுத்தியுள்ளது, 'இந்த தொகுதியை கூட்டணிக்கு கொடுப்பதாக இல்லை இனி நாங்க தான் போட்டியிடுவோம்' எனக் கூறி அமைச்சர் ராஜகண்ணப்பன் காங்கிரஸ் கட்சியை அதிர வைத்துள்ளார். மேலும் பேசிய அவர் 'ராமநாதபுரம் மாவட்டத்திற்கு தான் 2012 கோடி முதலமைச்சர் வழங்கி இருக்கிறார், அதில் திருவாடானை தொகுதியும் அடங்கும், காங்கிரஸ் எம்எல்ஏ வருகிறார் வரவில்லை என்பதை பற்றி எல்லாம் நான் கவலைப்பட மாட்டேன்' என அமைச்சர் ராஜ கண்ணப்பன் பேரு கூறியது சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது. இது குறித்து காங்கிரஸ் தரப்பில் இருந்து இதுவரை எந்த ஒரு அறிவிப்பு, அறிக்கையோ வரவில்லை என்பதும் என்பதும் குறிப்பிடத்தக்கது, ஏற்கனவே சோனியா காந்தி வந்து சென்ற பொழுது கூட்டணியில் தொகுதிகள் குறைவாக கொடுத்தால் மறுபரிசினை செய்ய வேண்டும் என்றதும் தற்பொழுது காங்கிரஸ் எம்.எல்.ஏ அமைச்சர் ராஜாகண்ணப்பன் நிகழ்ச்சிக்கு மதிக்காமல் வராமல் இருந்ததும் அமைச்சர் ராஜகண்ணப்பன் இனி நாங்கள் தான் போட்டியிடுவோம் என கூறியதும் வைத்து பார்க்கும் பொழுது காங்கிரஸ்-திமுக கூட்டணியின் சச்சரவுகள் ஆரம்பமாகிவிட்டது என தெரிகிறது என்று அரசியல் பார்வையாளர்கள் கூறுகின்றனர்.