24 special

அமித்ஷா ரேடாரில் உதயநிதி....! இனிதான் அரசியல் ஆட்டமே சூடு பிடிக்க போகிறது....!

amitshah, udhayanithi
amitshah, udhayanithi

உதயநிதி ஸ்டாலின் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம் சார்பில் நடைபெற்ற சனாதன ஒழிப்பு மாநாட்டில் கலந்து கொண்டு பேசிய போது கொசுக்களால் கொரோனா டெங்கு மலேரியா போன்றவை எப்படி பரவுகிறது அதேபோல இந்த  சமூகத்திற்கு கேடு ஏற்படுத்துவது இந்த சமாதான தர்மம் தான் என்று கூறினார் எப்படி கொசுக்களை ஒழித்து கட்டுவோமோ  கட்டுவோமோ அதேபோல சனாதன தர்மத்தையும் இந்திய நாட்டிலிருந்து ஒழிப்போம் என்று கூறியுள்ளது தற்போது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது, இந்த விவகாரத்தின் காரணமாக அமித்ஷாவின் பார்வை உதயநிதி மீது பதிந்துள்ளது.இந்தியா என்ற கூட்டணியில் ஒருங்கிணைந்துள்ள கூட்டணி கட்சிகளில் முக்கியமான கட்சியாக விளங்கும் திமுக தற்போது இதன் காரணமாக பெரும் சர்ச்சையில் சிக்கியுள்ளது. முதல்வர் ஸ்டாலின் மகனும், அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் சனாதனத்தை விமர்சித்து பேசியதை கண்டித்து உள்துறை அமைச்சர் அமித்ஷா தனது கண்டனத்தை தெரிவித்துள்ளார்.


ராஜஸ்தான் மாநிலத்தில் சட்டமன்ற தேர்தல் வர இருப்பதால் ஆட்சியை கைப்பற்ற வேண்டும் என்ற நோக்கில் பாஜகவும் காங்கிரஸ் கட்சியும் போட்டியிட்டுக் கொண்டு பிரச்சாரங்களை மேற்கொண்டு வருகின்றனர் இந்நிலையில் நிலையில் துர்காபூர் பகுதியில் இருந்து பரிவர்தன் யாத்திரையை மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா துவங்கி வைத்தார்  அப்போது பேசிய அமித்ஷா தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் மகன் உதயநிதி ஸ்டாலின் சனாதன தர்மம் குறித்து பேசியதை சுட்டிக்காட்டி இந்து மதத்தை இந்தியா கூட்டணி எந்த அளவிற்கு வெறுக்கிறது என்பதை உதயநிதியின் பேச்சு உணர்த்துகிறது என்று கூறியுள்ளார்மேலும் இது குறித்து அமித்ஷா கூறுகையில் இந்திய கூட்டணி கட்சியில் மிக முக்கிய கட்சிகளாக விளங்கும் திமுகவும் காங்கிரசும் சனாதானத்தை முற்றிலும் ஒழிக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் செயல்பட்டு வருகிறார்கள் இது இந்திய நாட்டின் கலாச்சாரத்தையும் இந்துத்துவத்தையும் அவமதிப்பதாக இருக்கிறது என்று குற்றம் சாட்டியுள்ளார் மேலும் இவர்கள் இப்படி செய்வதற்கு முக்கிய காரணமே மக்களிடம் இருந்து வாக்கு  வாங்குவதற்காக மட்டுமே இது மட்டுமல்லாமல் காங்கிரஸ் கட்சிக்கு காந்தி வம்சாவளியை  சேர்ந்தவர்கள் மட்டுமே நாட்டை ஆள வேண்டும் என்று அகங்காரமும் தர்மமும் இருப்பதால் தான் இவர்கள் இப்படி செயல்படுகிறார்கள் என்று கூறினார்

மேலும் முன்னாள் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி 2010 ஆண்டு லஸ்கர் இ தொய்பா என்ற தீவிரவாத அமைப்பை இந்த அமைப்புடன் ஒப்பிட்டு பேசியதை சுட்டிக்காட்டி உள்துறை அமைச்சர் அமைச்சர் சனாதன தர்மம் என்பது மக்களின் இதயங்களில் இருந்து வெளிப்படுகிறது ஒரு நாடாளுமன்ற தேர்தலில் பாரத பிரதமர் நரேந்திர மோடி வெற்றி பெறும் பட்சத்தில் சனாதன ஆட்சி வரும் மேலும் சனாதன தான் மக்களும் விரும்புகின்றனர் என்று கூறியதுடன் அரசியல் அமைப்பு சட்டப்படி இந்தியா இயங்கும் என்று பிரதமர் மோடி கூறியதை எடுத்துக்காட்டி பேசினார். ராமர் கோயில் கட்டுவதை காங்கிரஸ் எதிர்த்து வருவதாகவும் பிரதமர் மோடி ஆட்சியில் எப்படி ஆவது ராமர் கோயிலை கட்டுவோம் என்று உள்துறை அமைச்சர் அமித் ஷா உறுதி  அளித்தும் பேசியுள்ளார்சனாதன தர்மத்தை உள்துறை அமைச்சர் அமித்ஷா எப்போதும் மதிப்பவர் சனாதன கொள்கை படியே இருக்க வேண்டும் என்றும் நினைப்பவர் இந்த நிலையில் உதயநிதி இவ்வாறு பேசியது அமித்ஷாவை மட்டுமல்ல ஒட்டுமொத்த பாஜகவினரையும் சீண்டியதாக தெரிகிறது. மேலும் இந்த விவகாரத்தை அமித்ஷா லேசில் விடமாட்டார் எனவும் அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர்.