தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் சார்பாக சென்னை காமராஜர் அரங்கத்தில் செப்டம்பர் மூன்றாம் தேதி சனாதன ஒழிப்பு மாநாடு நடைபெற்றுள்ளது. அதில் கலந்து கொண்டு வாழ்த்துரை தெரிவித்த அமைச்சர் உதயநிதி ஸ்டாலினின் கருத்துக்கள் அவருக்கு தற்போது சர்ச்சையாக எழுந்துள்ளது. மாநாட்டின் தலைப்பு என்னை மிகவும் ஈர்த்துள்ளது மலேரியா டெங்கு கொரோனா போன்றவற்றை எதிர்க்கக் கூடாது ஒழித்தே ஆக வேண்டும் அதேபோன்று சனாதன எதிர்ப்பு மாநாடு என்று வைக்காமல் சனாதன ஒழிப்பு மாநாடு என்று வைத்திருக்கிறீர்கள் அதுவே பாராட்டக்கூடியது! சமஸ்கிருதத்திலிருந்து வந்த பெயர் தான் சனாதனம் இது சமத்துவத்திற்கும் சமூக நீதிக்கும் எதிரானது, ஆரம்பத்தில் கலை மற்றும் எழுத்துகளுக்கு சனாதன கருத்துக்களை திணிக்கவே பயன்படுத்தினார்கள்! திராவிட மாடல் அரசு மக்களை முன்னேற்றுவதற்கான திட்டங்களை நிறைவேற்றுகிறது அதே நேரத்தில் மக்களை பின்னோக்கி தள்ள ஒன்றிய அரசு திட்டங்களை வகுக்கிறது!
பொய்யான செய்திகளை பரப்புவதிலும் கலவரத்தை உண்டாக்குவதிலும் தான் சனாதனம் உள்ளது என்று சனாதனத்தை பற்றி தாறுமாறான கருத்துக்களை முன் வைத்தார். இந்த விழாவில் உதயநிதி முன்வைத்த கருத்துக்களால் பல சர்ச்சைகள் எழுந்து வருகிறது தற்போது டெல்லி வரை இவரது கருத்து சென்று அங்கேயும் எதிர்ப்புகளை பெற்று வருகின்ற சமயத்தில் இந்த விழாவில் உதயநிதி பேசுவது இந்து மதத்தை குறிப்பிட்டு அல்ல என்று திமுக சமாளித்து கொண்டிருக்கும் பொழுதே இதே விழாவில் கி வீரமணி பேசிய வீடியோவும் வைரலானது. அதாவது கொசுவை அழிப்பது போல சனாதனத்தை ஒழிப்பதும் தான் சரியானது சரியான தேவையானது, சனாதனம் தான் இந்து மதம், இந்து மதம் தான் சனாதனம் சமஸ்கிருதத்தில் இருந்து வந்த சனாதனம் என்ற பேச்சு தான் இந்து என்று உருவெடுத்துள்ளது என கி வீரமணி பேசிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானதோடு இந்து அமைப்புகளிடமிருந்து பல எதிர்ப்புகள் கிளம்பி உள்ளது.
மேலும் தமிழக முதல்வரின் மகனும் அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் மலேரியா டெங்குவை போலவே சனாதனத்தை ஒழிக்க வேண்டும் என்று கூறுகிறார் இதன் மூலம் அவர் பாரதத்தின் எண்பது சதவீத மக்களை இனப்படுகொலை செய்ய அவர் விரும்புகிறார் அதற்கான அழைப்பை விடுக்கிறார் என்று பாஜக தேசிய தகவல் தொழில்நுட்ப பிரிவு ஒருங்கிணைப்பாளரான அமித் மால்வியா தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு தனது கண்டனத்தை தெரிவித்துள்ளார். அதோடு இந்த நாட்டின் அடித்தளமாக சனாதனம் உள்ளது, சனாதன தர்மம் என்பது வாழ்க்கையை எப்படி வாழ வேண்டும் என்பதற்கான தத்துவம். மேலும் சனாதனத்திற்கு எதிராக யார் அவதூறாக கூறினாலும் அவர்களுக்கு சனாதனத்தை பற்றிய புரிதல் இல்லை என்பது தான் அர்த்தம்! என இந்தியா கூட்டணியில் உள்ள சிவசேனா உத்தவ் தாக்கரே கட்சியை சேர்ந்த பிரியங்கா சதுர்வேதி சனாதன தர்மத்திற்கு ஆதரவாக பேசி உதயநிதி கருத்திற்கு பதிலடி கொடுத்துள்ளார்.
இது மட்டுமல்லாமல் உதயநிதி ஸ்டாலினின் கருத்திற்காக எழுந்த எதிர்ப்பு வழக்கு வரை சென்றுள்ளது பீகாரில் முசாபார்பூர் மாவட்ட முதன்மை நீதிபதி முன்னிலையில் சனாதனத்திற்கு எதிராக பேசிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மீது வழக்கு பாய்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது. திமுக இந்து மதத்தை நாங்கள் கூறவில்லை சனாதனத்தை பற்றி தான் கூறினோம் என்று சமாளித்து வந்த பொழுது வீரமணி தெள்ளத்தெளிவாக சனாதனம் என்றால் இந்து மதம் இந்து மதம் என்றால் சனாதனம் என்று போட்டு உடைத்ததால் இத்தனை அவஸ்தைகளை உதயநிதி பட்டு வருகிறார், கி வீரமணியின் கருத்தே உதயநிதிக்கு வினையாக மாறிவிட்டது, உதயநிதி அழைத்து பேச வைத்தது மட்டுமல்லாமல் இப்படி திமுகவிற்கு வாழ்நாள் சோதனையை இழுத்து விட்டாரே வீரமணி என அறிவாலயங்களில் வசைப்பாடுகள் எழுகிறது. குறிப்பாக முதல்வரின் மனைவியும், உதயநிதியம் தாயாருமான துர்கா ஸ்டாலின் உதயநிதிக்கு பிரகாசமான அரசியல் எதிர்காலத்தை ஏற்படுத்தலாம் என திட்டமிட்டால் இப்படி இருளில் தள்ளியது போல் வீரமணி செய்துவிட்டாரே என கோபத்தில் இருப்பதாக சில விமர்சனங்கள் எழுந்துள்ளது...