வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக சென்னையில் நேற்று முதல் மழை பொலிந்து வருகிறது. இதனால் சாலைகளில் மழைநீர் தேங்கி நிற்கும் அவலம் ஏற்பட்டுள்ளது மழைநீர் தேங்காத அளவுக்கு 90 சதவீதம் பணிகள் முடிவடைந்து விட்டதாக மேயர் பிரியா மற்றும் அமைச்சர்கள் கூறி வந்தனர். ஆனால் சென்னை சுற்றியும் மழைநீர் சூழ்ந்ததால் வெள்ளம் போல் காட்சியளிக்கிறது. இந்நிலையில் அமைச்சர் உதயநிதி கடந்த ஆட்சி காலத்தில் குறை சொல்லி சமூக தளத்தில் ட்வீட் போட்ட பதிவு தற்போது வைரலாகி வருகிறது.
கடந்த அதிமுக ஆட்சியில் இதுபோல கனமழையால் சென்னை மிதந்தபோது, திமுக தலைவர் ஸ்டாலினின் மகனான உதயநிதி விமர்சித்திருந்தார். அவர் எக்ஸ் தளத்தில் பதிவிட்டிருந்ததாவது: வீடு - சாலை எங்கும் வெள்ளம். ஒரு நாள் மழைக்கே சென்னை மிதக்கிறது. உள்ளாட்சித் துறையை ஊழலாட்சித் துறை ஆக்கிவிட்ட வேலுமணியும், அவரது டெண்டர் பார்ட்னர் எடப்பாடியும் அவதூறு போஸ்டர் ஒட்டிய நேரத்தில் கொஞ்சமாவது வடிகால்களை தூர்வாரியிருந்தால் இந்த நிலை வந்திருக்காது. 2015 வெள்ளத்திலிருந்து பாடம் கற்கவில்லை. வெள்ளத்தடுப்பு பணிக்கான நிதியை வேலுமணியின் ஏழு கம்பெனி பினாமிகள் - மாநகராட்சி ஊழல் பெருச்சாளிகள் விழுங்கியதே இந்த அவலத்துக்கு காரணம் மக்கள் இதனை மறக்க மாட்டார்கள் என விமர்சித்திருந்தார்.
அதிமுக காலத்தில் தான் அமைச்சர்கள் ஊழல் செய்து மக்களுக்கு எந்த பணியும் செய்யவில்லை என குற்றம் சுமத்தினர். இப்போது கடந்த சில தினங்களுக்கு முன் பெய்த மழையின் போது மேயர் பிரியா உள்ளிட்ட அமைச்சர்கள் இரண்டு பேர் களத்தில் இறங்கி நாங்களும் இருக்கோம் என்பதை தெளிவு படுத்தினார்கள் ஆனால், அப்போது நீங்கள் எங்கே சென்றிர்கள்? நாளைக்கு நீங்கள் துணிய முதலமைச்சர் பதவி சூட்ட காத்திருக்கும் நேரத்தில் மக்களுக்கு பனி ஏதும் செய்யாமல் வீட்டின் உள்ளே இருந்து கொண்டு ஆட்சியில் இருப்பவர்களை சுட்டிக்காட்டும் வெளியில் ஈடுபடுவது சரியில்லை என இணையவாசிகள் குற்றம் சாட்டுகின்றனர்.
கடந்த ஆட்சியில் நீங்கள் எம்.எல்.ஏவாக கூட இல்லை அப்போது மக்கள் மேஈது இருந்த பற்று இப்போது இல்லையா எனவும் தற்போது அமைச்சர் பதவியில் இருக்கும் நீங்கள் அதே மக்கள் மீது இப்போது ஏன் பற்று இல்லை. இதுவரை என்ன செய்திருக்கிறீர்கள் மக்களுக்கு அதே நிலைமை நீடிக்கும் இப்போது எந்த பதிலும் கூறாமல் மவுனம் காப்பதாக பலரும் விமர்சித்து வருகின்றனர்.... அதோடு அந்த 4000 ஆயிரம் கோடி என்ன ஆச்சு என்றும், அமைச்சர் மா. சுப்பிரமணி எவ்வளவு மழை பெய்தாலும் சென்னையில் தண்ணீர் தேங்காத அளவிற்கு எல்லாம் வேலைகளும் முடித்துவிட்டதாக கூறிய அவர் இப்பொது ஏன் மவுனம் காத்து வருகிறார் என முதலமைச்சர் முதல் மொத்த திமுக கூடாரத்தையும் இணையவாசிகள் விமர்சித்து வருகின்றனர்.