இஸ்ரேல் - ஹமாஸ் அமைப்பினர் இடையே ஒரு மாதத்திற்கும் மேலாகப் போர் நடைபெற்று வரும் நிலையில், நிலைமை நாளுக்கு நாள் மோசமாகி வந்தது. இந்த போரை இரு நாடும் இடைக்காலமாக நிறுத்தி பிணைக்கைதிகளை விடுவித்தனர். தற்போது இந்த போருக்கு அமெரிக்க அதிபர் அறிவுரை கூறியுள்ளார். இதன் மூலம் போர் முடிவுக்கு வருகிறாதா? என்ற சந்தேகம் எழுந்துள்ளது. இஸ்ரேல் அருகில் உள்ள பலஸ்தீனதின் ஒரு பகுதியாக காஸா உள்ளது. காஸாவில் உள்ள ஹமாஸ் அமைப்புக்கும் இஸ்ரேல் நாட்டுக்கும் ஒரு மோதல் போக்கு நிலவி வந்தது. இந்த மோதல் போக்கு கடந்த செப்டம்பர் மாதம் இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் அமைப்புகளுக்கு இடையே போராக மாறியது. இந்த மோதலில் இரு நாட்டில் இருந்தும் உயிரிழப்புகள் 10 ஆயிரத்தையம் கடந்தது.
இரு நாடுகளிலும் போரின் போது மக்களை பிணைக்கைதிகளாக கைது செய்தது அவர்களை விடுவிக்க போருக்கு இடைக்கால தடை விதித்தது இரு நாட்டு அரசும். இடைக்கால தடை முடிந்து மீண்டும் போர் தொடங்கியது. இப்போது, இஸ்ரயேல் அரசு ஒரு முடிவை எடுத்துள்ளது உலக நாடுகளை வியக்க வைத்துள்ளது. அதாவது, "பாலஸ்தீனத்தின் ஹமாஸ் தீவிரவாதிகளுக்கு எதிரான போர் முடிந்த பிறகு, இஸ்ரேல் முன்னாள் பிரதமர் கோல்டா மீரின் வழியைப் பின்பற்ற இப்போதைய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு விரும்புவதாகக் கூறப்படுகிறது. இதன்படி, இஸ்ரேல் எதிரிகள் (ஹமாஸ் தலைவர்கள்) எந்த நாட்டில், எந்த கண்டத்தில் இருந்தாலும் தேடிக் கண்டுபிடித்து கொலை செய்ய ‘ஆபரேஷன் ராத் ஆப் காட்’ போன்ற திட்டத்துக்கு ஒப்புதல் அளிக்கவும் திட்டமிட்டுள்ளதாக" தெரிகிறது.
குறிப்பாக துருக்கி, லெபனான் மற்றும் கத்தாரில் உள்ள ஹமாஸ் தலைவர்களை ஒழிப்பதற்கான திட்டத்தை இஸ்ரேலின் உளவு அமைப்பான மொசாட் வகுத்து வருவதாகக் கூறப்படுகிறது. ஆனால், இந்த திட்டம் மோசமான பின்விளைவுகளை ஏற்படுத்தும் என்று மொசாட் அமைப்பின் முன்னாள் இயக்குநர் இப்ரெய்ம் ஹலெவி கவலை தெரிவித்துள்ளார். இப்போது அந்த முக்கிய தலைவர்களின் பெயல் கசிந்துள்ளன,,அதில் ]இஸ்மாயில் ஹனியே (60)பாலஸ்தீன முன்னாள் பிரதமர் (2006)ஆவார். இவர் ஹமாஸ் பொலிட் பீரோதலைவராக 2017-ல் தேர்வானார். இப்போது தாமாக முன்வந்து வெளிநாடுகளில் (கத்தார், துருக்கி) வசிக்கிறார்.
முகம்மது டெய்ப் என்பவர் ஹமாஸ் ராணுவ பிரிவு தலைவர். இவர்தான் இஸ்ரேலின் முதல் எதிரி. இவரை கொலை செய்ய இஸ்ரேல் 6 முறை முயற்சி செய்துள்ளது. இவர் அமெரிக்காவின் சர்வதேச தீவிரவாதிகள் பட்டியலிலும் இடம்பெற்றுள்ளார். இவர் எங்கு இருக்கிறார் என்பது தெரியவில்லை. யாயா சின்வார் ஆகியோரை தீவிரமாக தேட கண்டுபிடிக்க தீவிர முயற்சியில் ஈடுபாடுள்ளதாம். இந்த எதிரிகளை அழிக்க முயலும் போது பிற நாடுகளில் இஸ்ரேலுக்கு எதிராக முரண்பாடு ஏற்படலாம் என கூறப்படுகிறது.
இஸ்ரேல் முன்னாள் பிரதமர் கோல்டா மீரின் நாடுகளுக்கு போர் தொடாது வரும் தீவிரவாதிகளை அழித்து அவர்களுக்கு உறுதுணையாக இருக்கும் தலைவர்களை கொள்வதே போரின் வெற்றி என தெரிவித்தாராம். இதன் அடிப்படையில் தற்போது உள்ள பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு அவரை பின்பற்றி வருகிறாரார் என கூறப்படுகிறது.