24 special

ஐரோப்பிய நாடுகளுக்கு ஷாக் கொடுத்த மத்திய அமைச்சர்..!

minister Jaishankar
minister Jaishankar

புதுதில்லி : GLOBESEC மாநாட்டில் கலந்துகொண்ட மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் ஐரோப்பாவை கடுமையாக எச்சரித்தார். மேலும் தங்கள் விவகாரங்களில் தலையிட வேண்டாமெனவும் நீங்கள் அதை பின்பற்றுகிறீர்களா எனவும் இதுவரை பார்த்திராத இந்தியாவை ஐரோப்பிய நாடுகளுக்கு காண்பித்தார். அவரது ஒவ்வொரு பேச்சும் அரங்கமெங்கும் சரவெடியாய் வெடித்தது.


"  இந்தியாவின் வெளியுறவுக்கொள்கை சில நாடுகளுக்கு ஒத்துப்போகவில்லை என்பதால் நாங்கள் வேலியில் உட்கார்ந்திருக்கிறோம் என்பது பொருளல்ல. நாங்கள் எங்கள் மண்ணிலேயே உட்கார்ந்திருக்கிறோம். நான் பரிவர்த்தனை செய்கிறேன். அதனால் நான் மோதலுக்குவருகிறேன். சீனாவுடனான பல பிரச்சினைகள் ரஷ்யா மற்றும் உக்ரைனுடன் தொடர்பில்லாதவை. 

ஐரோப்பா பேசாத பல பிரச்சினைகள் உள்ளன. அதைப்பற்றி பேசுங்கள். முதலில் ஐரோப்பாவின் பிரச்சினை உலகின் பிரச்சினை. ஆனால் உலகின் பிரச்சினை ஐரோப்பாவின் பிரச்சினை அல்ல என்ற மனநிலையில் இருந்து வெளியே வாருங்கள். இந்தியாவிற்கும் சீனாவிற்கும் ஒரு நட்பு இணைப்பு உருவாக்கப்பட்டு வருகிறது.

இதை ஒரு புத்திசாலித்தனமான வாதமாக நான் பார்க்கவில்லை. இன்று இந்த உலகம் எதிர்கொள்ளும் அனைத்து கடுமையான சவால்களுக்கும் இந்தியாவிலிருந்தே தீர்வுகள் வருகின்றன.

இந்தியா ரஷ்யாவிடமிருந்து எண்ணெய் வாங்குவதன் மூலம் நிதியளிப்பதாய் கூறுகிறீர்கள். பாருங்கள். நான் வாதிட விரும்பவில்லை. ரஷ்யாவின் எரிவாயு ஐரோப்பவிற்கு வரவில்லையா. எல்லாமே சமமாக இருக்கவேண்டும் என்பதை நினைவில்கொள்ளுங்கள். உக்ரைன் மோதலில் என்ன நடக்கிறது என்பதில் நாங்கள் தெளிவாக உள்ளோம். நீங்கள் புதின் மற்றும் ஜெலன்ஸ்கியின் தொலைபேசி அழைப்புகளை புறக்கணிக்கவில்லை என்றால் நாங்கள் புறக்கணித்தோம் என்று அர்த்தமல்ல. 

நாங்கள் உலக மக்கள்தொகையில் ஐந்தில் ஒருபங்காக இருக்கிறோம். நாங்கள் எங்கள் பக்கம் நிற்க எங்களுக்கு உரிமை இருக்கிறது. எங்களின் நலனை கருத்தில்கொண்டே எங்கள் செயல்பாடுகள் இருக்கும். எங்களது தேர்வுகள் சிடுமூஞ்சித்தனமாக இருக்காது. உலகின் மற்ற நாடுகள் அவற்றின் நலன்களை புறக்கணிக்க தயாராக இல்லை. அதேபோல தான் நாங்களும்" என ஐரோப்பா கண்டத்தை ஒருவழியாக்கிவிட்டார் மத்திய அமைச்சர் ஜெய்சங்கர்.