24 special

கண்டுபிடிக்கப்பட்ட யுரேனிய சுரங்கம்..! வாய்பிளக்கும் உலகநாடுகள்..!

Uranium
Uranium

ராஜஸ்தான் : உலகத்தில் அரியவகை கனிமங்களில் ஒன்றாக கருதப்படும் யுரேனியம் இந்தியாவில் இரண்டு மாநிலங்களில் மட்டுமே கண்டுக்கப்பட்டது. முதலில் ஜார்கண்ட் மாநிலத்திலும் பின்னர் ஆந்திரப்பிரதேசத்திலும் கண்டெக்கப்பட்டு சுரங்கங்கள் செயல்பாட்டில் உள்ளது. தற்போது மூன்றாவதாக ராஜஸ்தானில் யுரேனிய சுரங்கம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.


ராஜஸ்தான் மாநிலத்தின் தலைநகரான ஜெய்ப்பூரில் இருந்து சரியாக 120 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ள சிகார் மாவட்டத்தில் உள்ள கண்டெலா தேஹ்சில்  இடத்தில் யுரேனியம் அதிகமாக இருப்பதாக கண்டறியப்பட்டதுடன் யுரேனிய உலக வரைபடத்திலும் இடம்பெற்றுள்ளது. ராஜஸ்தான் மாநில அரசனு யுரேனியம் சுரங்கத்துறையின் யுரேனியம் கார்ப்பரேஷன் ஆப் இந்தியாவிற்கு ஒரு கடிதத்தை அனுப்பியுள்ளது.


மாநிலத்தில் கண்டறியப்பட்ட யுரேனியம் தாதுக்களை அகழ்வாராய்ச்சி செய்ய டிஹெவியாக்யான நடவடிக்கை சம்பிரதாயங்களை மேற்கொள்ள அந்தக்கடிதம் கோரிக்கை எழுப்பியுள்ளது. இந்த அறிய கனிம சுரங்கம் விரைவில் தொடங்கப்படும் என அரசு தரப்பு தெரிவித்துள்ளது. இதுகுறித்து பேசிய பெட்ரோலியத்துறை அமைச்சரான பிரமோத் ஜெயின் பயா இந்த யுரேனியம் அகழ்வாராய்ச்சி மாநில சுரங்கத்துறையின் மிகப்பெரிய சாதனை என குறிப்பிட்டுள்ளார்.

மாநில முதல்வர் அசோக் கெலாட் சுரங்கத்துறை உயர்மட்ட அதிகாரிகள் கூட்டத்தில் கனிம ஆய்வுகள் மற்றும் சுரங்கம் அமைப்பதற்கான நடவடிக்கைகளை விரிவுபடுத்துமாறு வலியுறுத்தியுள்ளார். மாநில சுரங்கத்துறை மதிப்பீடுகளின்படி தோராயமாக 12 மில்லியன் டன் யுரேனிய படிவுகள் இருக்கலாம் என கருதப்படுகிறது. உலகில் யுரேனியத்தை அதிகம் உற்பத்தி செய்யும் நாடுகள்,

கஜகஸ்தான், அமெரிக்கா, உக்ரைன், நமீபியா உஸ்பெகிஸ்தான், கனடா மற்றும் ஆஸ்திரேலியா, நைஜீரியா, ரஷ்யா ஆகிய நாடுகள் பெரும் உற்பத்தியாளராக உள்ளன. ராஜஸ்தான் மாநில யுரேனிய சுரங்கம் செயல்பாட்டிற்கு வந்தால் இந்தியாவும் இந்த பட்டியலில் முக்கிய இடம்பெறும். இந்த யுரேனியம் அணுசக்தி, மருந்துகள், பாதுகாப்பு உபகரணங்கள், புகைப்பட எடுத்தல், மின்சார உற்பத்தி ஆகியவற்றிற்கு பயன்பட்டு வருகிறது. 

ராஜஸ்தான் சுரங்கத்துறை தனது பணியை விரைவில் ஆரம்பிக்கும்பட்சத்தில் வேலைவாய்ப்புக்கள் பெருகுவதோடு பொருளாதாரமும் குறிப்பிட்ட வளர்ச்சியை பெறும் என அதிகாரிகள் வட்டாரம் தெரிவிக்கிறது.