மஹாராஷ்டிரா : மஹாராராஷ்டிராவில் அடுத்த அரசை அமைப்பதற்கான முயற்சியில் பிஜேபி மற்றும் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனா அதிருப்தியாளர்கள் வெள்ளிக்கிழமை உரிமைகோரலாம் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் சிவசேனா அதிருப்தி எம்.எல்.ஏக்களை பிஜேபி தலைவரும் முன்னாள் முதல்வருமான தேவேந்திர பட்நாவிஸ் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்த்தினார்.
காங்கிரஸ் சிவசேனா தேசியவாத காங்கிரஸ் கூட்டணியான மஹாவிகாஸ் அங்காடி அரசின் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவர சிவசேனா தரப்பில் உச்சநீதிமன்றத்தில் அவசர மனு கொடுக்கப்பட்டது. அந்த மனுவை உச்சநீதிமன்றம் நிராகரித்தது. அதற்கு சற்று முன்னர் உத்தவ் தாக்கரே தனது பதவியை ராஜினாமா செய்தார்.
அதிருப்தி எம்.எல்.ஏக்கள் அடுத்த அரசை அமைக்க பலம் வாய்ந்த பிஜேபியின் பக்கம் தங்களது கவனத்தை திரும்பியுள்ளனர். ஷிண்டே மற்றும் அவரது ஆதரவாளர்கள் மற்றும் பிஜேபி தலைவர்கள் அஸ்ஸாமில் சந்தித்து முதல்வர் ஹிமந்தா தலைமையில் ஆலோசனை நடத்தினர். இந்த கூட்டத்தில் பட்நாவிஸ் முதல்வர் எனவும் ஷிண்டே துணைமுதல்வராவார் எனவும் முடிவெடுக்கப்பட்டிருந்தது.
ஆனால் திடீர் திருப்பமாக நேற்று தனக்கு பதவி மேல் ஆசையில்லை எனவும் ஏக்நாத் ஷிண்டே அவர்களே முதல்வராக தொடரவேண்டும் எனவும் முன்னாள் முதல்வர் தேவேந்திர பட்நாவிஸ் அறிவித்தார். அதைத்தொடர்ந்து ஷிண்டே மஹாராஷ்டிரா முதல்வராக நேற்று பதவியேற்றுக்கொண்டார். பிஜேபி தலைமை மற்றும் ஷிண்டேவின் வலியுறுத்தல் காரணமாக பட்நாவிஸ் துணை முதல்வர் பொறுப்பை அலங்கரிக்க ஒப்புக்கொண்டார்.
இதுகுறித்து நேற்று சிவசேனா தலைவரான சஞ்சய் ராவத் கூறுகையில் " அமையப்போகும் புதிய அரசாங்கம் மக்களுக்காக உழைக்கவேண்டும். மக்களுக்கு அவர்களை பிடிக்கவேண்டும். நாங்கள் சிறந்த எதிர்க்கட்சியாக மக்கள்பணியாற்றுவோம். அரசை வீழ விடமாட்டோம்" என அமலாக்கத்துறை தலைமையகத்தில் ஆஜராக வந்த சஞ்சய் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.