24 special

வடிவேலு எல்லாம் மனுஷனே கிடையாது....! மதுரைக்கே அவமானம் திரை விமர்சகர் அதிரடி!

Vijayaknth, Vadivel
Vijayaknth, Vadivel

தேமுதிக தலைவர் விஜயகாந்த் நேற்று முன்தினம் இறந்தது ஒட்டு மொத்த தமிழகத்தையும் சோகத்தில் ஆழ்த்தியது. மொத்தமாக தொண்டர்கள் மக்கள் என லட்சக்கணக்கானோர் கலந்துகொண்டு இரங்கல் தெரிவித்து வந்தனர்,. இதில் குறிப்பாக சினிமா துறையை சேர்ந்த பலரும் அஞ்சலி செலுத்தினர் சில நடிகர்கள் வெளிநாடுகளில் இருந்ததால் அவர்கள் சமூக தளத்தில் வருத்தத்தை தெரிவித்து பதிவிட்டு வந்தனர். இதில் இன்று வரை இணையத்திலும் நடிகர்களும் விமர்சித்து வருவது நகைச்சுவை நடிகர் வடிவேலுவை தான் அவர் வராதது குறித்து பிரபல யூடியபரும், நடிகருமான பயில்வான் ரங்கநாதன் வடிவேலு குறித்து தெரிவித்தது.


சாப்பாடு போடுவதில் புரட்சித்தலைவர் எம்ஜிஆரின் வாரிசாக இருப்பவர் புரட்சிக்கலைஞர் விஜயகாந்த். கேப்டனைப் பொறுத்தவரை கதர் சட்டை, கதர் வேட்டியை அணிபவர். உழவன் மகன் சூப்பர்ஹிட்டானபோது எம்ஜிஆர் தனது ராமாவரம் தோட்டத்துக்கு அழைத்துச் சென்று படக்குழுவினருக்கு விருந்து கொடுத்தாராம். இந்தப் படம் நான் நடிச்ச படம் மாதிரி இருக்கு. என்னை மாதிரியே பண்ணிருக்கேன்னு எம்ஜிஆர் சொன்னாராம். கலைஞருக்கு தங்கப் பேனா கொடுத்தவரும் கேப்டன் தான். வடிவேலுவுக்கும், கேப்டனுக்கும் என்ன சண்டை வந்ததுன்னு நான் அறிவேன். கேப்டனின் அக்கா மறைந்துவிட்டார். அங்கு உறவினர்கள் எல்லோரும் வந்து இருந்தார்கள். அப்போது ஒரு கார் வடிவேலு வீட்டின் முன்னால் நின்றது. 

அப்போது வடிவேலு மது அருந்தி விட்டு என் வீட்டு முன்னால் எப்படி காரை நிறுத்தலாம் என தகராறு செய்தாராம். அப்போது அங்கு வந்தவர்கள் மதுரைக்காரர் என்பதால் கையை நீட்டி விட்டார்களாம். இது ஒரு பெரிய பிரச்சனை இல்லை. கேப்டனும் இதைப் பெரிதுபடுத்த வேண்டாம் என்றார். மதுரையில் திமுகவின் ஆதரவு பேச்சாளராக வடிவேலு நியமிக்கப்பட்டார். அப்போது என்ன பேசுவது என தெரியாமல் மது அருந்தி விட்டு கேப்டனைக் கண்டபடி திட்டி விட்டாராம். தேமுதிகவினர் கோபப்பட்டு அவரை அடிக்க முயன்றனராம். அதை விஜயகாந்த் தான் தடுத்தாராம். அன்று முதல் இறப்பு வரை வடிவேலு என்ற பெயரைக்கூட சொல்லாதவர் கேப்டன். அவ்வளவு பெருந்தன்மையானவர்.

சின்னக்கவுண்டர் படத்தில் நடிக்க விஜயகாந்திடம் கெஞ்சினார் வடிவேலு, உடனே வடிவேலு சின்ன கவுண்டர் படத்தில் வடிவேலுக்கு ஒரு கேரக்டர் கொடுக்க இயக்குனரிடம் பரிந்துரைத்தார். அப்போது கவுண்டமணி வடிவேலுவை பார்த்து இவன் எல்லாம் வேண்டாம் வெளியே போக சொல்லு என சொல்ல அதற்கு இயக்குனரும் 200 ரூபாய் பணம் கொடுத்து வடிவேலுவை வெளியில் அனுப்பினாராம். உடனே வடிவேல் என்ன பண்ணுவது என தெரியாமல் விஜய்காந்த்தின் காலை பிடித்து கொஞ்சி தன்னை நடிக்க வையுங்கள் என கூறியதும் விஜயகாந்த் எனது காட்சிகளில் கோடை பிடிக்க வைத்து கொள்ள ஓகே சொன்னாராம். அப்படி தான் சினிமாவில் வடிவேலு தொடங்கினார். 

விஜயகாந்துக்கு அஞ்சலி செலுத்த வந்து இருக்கணும். பயம் இருந்தா போலீஸ் பாதுகாப்போடயாவது வந்து இருக்கலாம். இல்லேன்னா ஒரு இரங்கலாவது தெரிவித்து இருக்கலாம். அப்படின்னா என்ன தெரியுது. வடிவேலுவிடம் மனிதப்பண்பு இல்லை என்பது தெரிகிறது. எவ்வளவு சண்டைக்காரனா இருந்தாலும் இறப்பிலாவது வந்து கலந்து கொள்ள வேண்டும். இதைப் பார்க்கும்போது அவரது பிறப்பிலேயே சந்தேகம் வந்துவிட்டது. உயிரோடு இருக்கும் போது கேப்டன் மன்னித்து விட்டார். ஆனால் அவரது ஆன்மா வடிவேலுவை மன்னிக்காது என விமர்சனம் செய்துள்ளார்.