Cinema

தளபதியை வைத்து வெங்கட்பிரபு என்ன கிண்டுறாரோ....? கொந்தளிப்பில் ரசிகர்!

Vijay
Vijay

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகரான தளபதி விஜய் வருடத்திற்கு ஒருமுறை படத்தை கொடுத்தாலும் அந்த படம் மொத்த படக்குழுவுக்கும் வருமானம் ஈட்டும் வகையில் விடுமுறை நாட்களை கணக்கில் கொண்டு கூட்டத்தை தியேட்டருக்கு கூட்டுவார். நடிகர் விஜய்க்கு இந்த ஆண்டு ஏற்றாற்போல் படம் பெரிதாக  அமையவில்லை பொங்கலுக்கு துணிவு படத்துடன் வாரிசு படம் இறங்கி வாரிசு படம் மிக பெரிய தோல்வியாக அமைந்தது. அதனை தொடர்ந்து ஆயுத பூஜைக்கு வெளியான லியோ படம் தனியாக களம் கண்டது அந்த படமும் கலவையான விமர்சனம் பெற்றது.


விஜய் அரசியலுக்கு வருவது குறித்து அவ்வப்போது செய்யும் செயல் மக்கள் இடத்தில் கவனிக்க ஆரம்பித்தனர். ஆரம்பத்தில் மாணவர்களுக்கு கல்வி விருதுகள் மற்றும் ஊக்கத்தொகையை நடிகர் விஜய் கொடுக்கும் போது இருந்த அவருடைய லுக் இப்போ இல்லையே ஏன் என்கிற கேள்வி ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது. அந்த நேரத்தில் லியோ படத்தில் இருந்த விஜயின் கெட்டப் அன்னைவரையும் கவர்ந்தது. ஆனாலும், அந்த படம் எதிர்பார்த்த அளவிற்கு வெற்றி வாகை சூட்டவில்லை. படம் வெளியான நாளே 100 கோடி வசூல் செய்ததாக படக்குழு அறிவித்தது.

லியோ படம் தோல்விக்கு பிறகு விஜய் வெங்கட்பிரபு கூட்டணியில் இணைந்து தனது ரசிகர்களுக்கு வெற்றி படமாக கொடுக்க மும்முரம் காட்டி வருகிறார். இப்போது வரை தளபதி 68 படம் குறித்து எந்த வித தகவலும் அதிகாரபூர்வமாக இல்லை. படத்திற்கான டைட்டில் உள்ளிட்ட ஏதும் தெரிவிக்காமல் படக்குழு சைலண்டாக படம் அடுத்த கட்டத்தை நோக்கி சென்று கொண்டிருக்கு. இந்நிலையில், கேப்டன் விஜயகாந்த் உயிரிழந்ததற்கு இரங்கல் தெரிவிக்க வந்த விஜய் ஆளே அடையாளம் தெரியாமல் இருந்துவந்தார். இந்நிலையில், நெல்லை மக்களுக்கு நிவாரண உதவிகள் வழங்கும் விழாவிலும் விஜய்யின் லுக் இப்படி இருக்கிறதே என பலவிதமான கமெண்ட்டுகள் குவிந்து வருகின்றன.

தற்போது நடிகர் விஜய்யின் புதிய தோற்றம் அந்த அளவுக்கு சூப்பராக இல்லையே என்றும் மீசையை ரொம்ப ட்ரிம் செய்து விட்டு இருக்கிறார் என்றும் இளமையான தோற்றத்திற்காக இப்படி மாறியிருக்கிறாரா என்கிற கேள்வியை ரசிகர்கள் எழுப்பி உள்ளனர். மேலும், தொடர்ந்து நடிகர் விஜய் பார்க்க ரொம்ப டல்லா இருக்காரே ஏன் என்ன ஆச்சு என்கிற கேள்விகளும் கிளம்பி உள்ளன. மேலும், விஜயை வைத்து வெங்கட்பிரபு என்ன கூக் பன்றாரோ என ரசிகர்கள் கமெண்டுகளை பதிவிட்டு வருகின்றனர். புத்தாண்டுக்கு தளபதியயை பார்த்ததே போதும் என ரசிகர்கள் மகிழ்ச்சியில் இருக்கின்றனர். வரும் நாட்களில் தளபதி 68 படம் குறித்து புது தகவல் வரக்கூடும் என ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்கின்றனர்.