மணல் லாரியை ஏற்றி vao வை கொலை செய்ய முயன்ற வழக்கில் அண்ணாமலையோ என்ன குற்றசாட்டு தெரிவித்து இருந்தாரோ அது அப்படியே நடந்து இருக்கிறது.நேற்று எப்படி அண்ணாமலை திமுகவை குறை கூறலாம் என குதித்த உடன் பிறப்புகள் சத்தம் இல்லாமல் அடங்கி இருக்கிறார்கள்.
திண்டுக்கல் மாவட்டம் பழனியை அடுத்துள்ளது ஆயக்குடி பேரூராட்சி. இந்த பேரூராட்சிக்கு உட்பட்ட பொன்னிமலை சித்தர் கரடு அருகே சட்டவிரோதமாக மணல் அள்ளுவதாக புகார் எழுந்தது. இதை அடுத்து கிழக்கு ஆயக்குடி கிராம நிர்வாக அலுவலர் கருப்புசாமி, வருவாய் ஆய்வாளர், கிழக்கு ஆயக்குடி கிராம நிர்வாக அலுவலர் உள்ளிட்ட அதிகாரிகள் பொன்னிமலை சித்தர் கரடு பகுதியில் ஆய்வு செய்தனர்.
அப்போது எதிரே மணல் ஏற்றிக்கொண்டு லாரி ஒன்று வந்தது. லாரியை பார்த்த வருவாய்த்துறையினர், அதனை தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர். அந்த லாரியில் டிரைவர் மற்றும் ஒருவர் இருந்தார். பின்னர் அவர்களிடம் மணல் அள்ளுவதற்கான அனுமதி சீட்டை வாங்கி வருவாய்த்துறையினர் ஆய்வு செய்தனர்.அதில், பழனி அருகே தாதநாயக்கன்பட்டியில் மணல் அள்ளுவதற்கான அனுமதி சீட்டை பயன்படுத்தி, சட்டவிரோதமாக பொன்னிமலை பகுதியில் மணல் அள்ளியது தெரியவந்தது.இதையடுத்து லாரியை ஆயக்குடி போலீஸ் நிலையத்துக்கு கொண்டு செல்லும்படி லாரி டிரைவரிடம், வருவாய்த்துறையினர் தெரிவித்தனர்.
அதன்படி, லாரி முன்னால் செல்ல அதன்பின்னால் கருப்புசாமி மற்றும் வருவாய்த்துறையினர் டூவீலரில் பின்தொடர்ந்து சென்றனர். சிறிது தூரம் சென்ற நிலையில் லாரியில் இருந்தவர்கள் திடீரென்று லாரியை நிறுத்தி பின் கதவை திறந்து மணலை கொட்ட முயன்றனர். அப்போது கிராம உதவியாளர் மகுடீஸ்வரன், டூவிலரை நிறுத்தி கொண்டார். அதேபோல் கருப்புசாமி, இலாகிபானு ஆகியோரும் சுதாரித்து கொண்டு நின்றனர்.அங்கிருந்து லாரி வேகமாக சென்றது. இதனால் தப்பிச்செல்லும் லாரியை மடக்கி பிடிப்பதற்காக கருப்புசாமி உள்பட 3 பேரும் டூவிலரில் பின்தொடர்ந்து சென்றனர். அப்போது லாரி டிரைவர், பின்னால் வருவாய்த்துறையினர் வந்த டூவிலர் மீது மோதுவது போன்று சென்றதுடன், அவர்களை முன்னால் செல்லவிடாமலும் தடுத்தார்.
இருப்பினும் வருவாய்த்துறையினர் லாரியை தேடி பழனி நோக்கி சென்றனர். அதற்குள் லாரியில் வந்தவர்கள், மணலை பழனி இடும்பன்கோவில் அருகே சாலையோரத்தில் கொட்டிவிட்டு தப்பி சென்று விட்டனர்.மேலும் பொலிரோ வாகனத்தில் வந்த நபர்கள் இருசக்கர வாகனத்தின் மீது மோதும் வகையில் அச்சுறுத்தி அதிகாரிகளை திசை திருப்பியதாகவும், லாரியை அதிவேகமாக ஓட்டி காவல் நிலையத்திற்கு செல்லாமல் தப்பித்து சென்றுவிட்டதாகவும் புகார் தெரிவிக்கப்பட்டது.
இது குறித்து அண்ணாமலை முதல் நபராக தனது கண்டனத்தை பதிவு செய்ததுடன் திமுகவை விமர்சனம் செய்து இருந்தார். அண்ணாமலை தெரிவித்த கருதாவது,பழனி அருகே, மணல் கடத்தலைத் தடுக்கச் சென்ற கிராம நிர்வாக அலுவலர் திரு. கருப்புசாமி மற்றும் அவரது உதவியாளர், காவலர் என நான்கு பேர் மீது லாரி ஏற்றிக் கொல்ல முயற்சித்த செய்தி அதிர்ச்சி அளிக்கிறது.திமுக ஆட்சிக்கு வந்தால், மணல் கடத்தலைத் தடுக்கும் அதிகாரிகள் இருக்க மாட்டார்கள் என்று கூறி ஆட்சிக்கு வந்த திமுக, அதன்படியே, மணல் கடத்தலைத் தடுக்கும் அதிகாரிகளைக் கொலை செய்வதும், அவர்கள் மீது கொலைவெறித் தாக்குதல் நடத்துவதும், தொடர்கிறது. கிராம நிர்வாக அலுவலர்கள், தற்பாதுகாப்புக்கு துப்பாக்கி வைத்துக் கொள்ள அனுமதி கேட்கும் அளவுக்கு சட்டம் ஒழுங்கு சீர்குலைந்து இருக்கிறது.
ஆனால், சட்டம் ஒழுங்கு பற்றியோ, அரசு அதிகாரிகள் பாதுகாப்பு பற்றியோ எந்தக் கவலையும் இல்லாமல், திமுகவினர் பணம் சம்பாதிக்க எந்த எல்லைக்கும் செல்லலாம் என்ற நிலைப்பாட்டில் இருக்கிறது திமுக அரசு. திமுகவின் போலி வாக்குறுதிகளை நம்பி ஏமாந்த பொதுமக்களைப் போல, போராட்டத்தில் ஈடுபட வேண்டிய கட்டாயத்திற்கு அரசு அதிகாரிகளையும் தள்ளிக் கொண்டிருக்கிறது இந்த விடியாத அரசு என கடுமையாக கண்டித்து இருந்தார் அண்ணாமல.இதனை அடுத்து ஆயக்குடி காவல் நிலையத்தில் வருவாய் துறை அதிகாரிகள் புகார் அளித்தனர். அதனையடுத்து பழனி வட்டாட்சியர் அலுவலக முகப்பு வாயிலில் கிராம நிர்வாக அலுவலரை கொலை செய்யும் நோக்கில் லாரி ஒட்டிய குண்டர்களை கைது செய்ய வேண்டி கிராம நிர்வாக அலுவலர்கள் சங்கம் சார்பில் பழனி தாலுகா பகுதிக்கு உட்பட்ட அனைத்து கிராம நிர்வாக அதிகாரிகளும் அலுவலக உதவியாளர்களும் கலந்து ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
புகாரின் அடிப்படையில் திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாஸ்கரன் உத்தரவின் பேரில் கொலை முயற்சியில் ஈடுபட்ட நபர்கள் மீதும், கொலை செய்யும் வகையில் லாரியை இயக்கிய நபர்கள் மீதும் நடவடிக்கை எடுத்து, உடனடியாக லாரியை பறிமுதல் செய்ததுடன், ஓட்டுநரிடம் விசாரித்ததின் பேரில் மணல் திருட்டை தடுக்க முயன்ற கிராம நிர்வாக அலுவலர்கள் மற்றும் அதிகாரிகள் மீது லாரியை ஏற்றி கொலை செய்ய முயன்றதாக, பழனி, பாலசமுத்திரம் பகுதியில் சேர்ந்த திமுக நிர்வாகிகளான சக்திவேல் மற்றும் பாஸ்கர் என்கிற இருவர் மீதும் ஆயக்குடி காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
நேற்று அண்ணாமலை மணலை கடத்தியது திமுகவினர் என எப்படி சொல்லலாம் என உடன் பிறப்புகள் குதி குதி என குதித்த நிலையில் தற்போது காவல் நிலையத்தில் திமுக நிர்வாகிகள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு இருப்பதன் மூலம் அண்ணாமலை திமுக மீது வைத்த குற்றசாட்டு உறுதியாகி இருக்கிறது.தமிழகத்தில் பல அரசு அதிகாரிகள் இந்த முறை திமுகவிற்கு எதிரான நிலைப்பாட்டை வருகின்ற நாடாளுமன்ற தேர்தலின் போது எடுக்க இருப்பதாக கூறப்படுகிறது.