24 special

வெள்ளியங்கிரி மலையில் தொடர்ந்து நடக்கும் விபரீதங்கள்!!! என்ன நடக்கிறது...

velliyankiri,shivan temple
velliyankiri,shivan temple

இன்றைய காலங்களில் லட்ச லட்சமாக காணிக்கைகள் வந்து குவியும் கோயில்களுக்கு மத்தியில் ஒரு ரூபாய் கூட காணிக்கை வாங்காமல் உள்ள கோவில்களை பார்க்கும் பொழுது மிகவும் வியப்பாகத்தான் இருக்கும்!! இப்படி கூட ஒரு கோவிலா என்று நினைக்கின்றீர்களா??? ஆம் அப்படிப்பட்ட ஒரு கோவிலாக உள்ளது வெள்ளியங்கிரி மலை சிவன் கோவில்!!! அதோடு இந்த கோவில் மற்றுமொரு சம்பவத்திற்கும் தற்போது பெருமளவில் பேசு பொருளாக மாறி உள்ளது. 


 அதாவது வெள்ளியங்கிரி மலையில் அமைந்துள்ள சிவனை தரிசிக்க வேண்டும் என்றால் ஏழு மலைகளை கடந்து செல்ல வேண்டும். மேலும் இந்த கோவில் வருடத்திற்கு மூன்று மாதம் மட்டுமே தெரிந்திருக்கும். அவ்வாறு அந்த மூன்று மாத இடைவெளிக்குள் ஏழு மலைகள் ஏரி அந்த சிவனை தரிசிக்க வேண்டும் என்று நினைப்பவர்கள் ஏராளம்!! 

இந்த வெள்ளியங்கிரி மலையானது  தமிழ்நாட்டின் கோவை மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலையில் அமைந்துள்ளது. இங்கு அமைந்துள்ள சிவன் மிகவும் சக்தி வாய்ந்த சிவன் என்று கூறுகின்றனர். சிவன் எப்போதும் அவர்களின் பக்தர்களுக்கு  நிறைய சோதனைகளை கொடுத்த பின்பு தான் பல நன்மைகளை கொடுப்பார்!! அவ்வாறு சோதனைகள் பல நிறைந்த மலையே இந்த வெள்ளியங்கிரி மலை!! பல சோதனைகளை தாண்டி எப்படியாவது சிவனை பார்த்திட வேண்டும் என்ற குறிக்கோளோடு செல்லும் பக்தர்கள் கடைசியாக ஏழாவது  மலையினை கடைந்து அந்த சிவனை பார்க்கும் பொழுது எல்லா கஷ்டங்களையும் மறந்து மகிழ்ச்சி அடைகின்றனர். 

சிலர் உண்மையாகவே கடவுள் பக்தியுடன் இந்த வெள்ளியங்கிரி மலைக்கு போக நினைக்கின்றனர். ஆனால் தற்போது உள்ள காலங்களில் இந்த வெள்ளையங்கிரி மலை மிகவும் ட்ரெண்டாகிக் கொண்டு வருகிறது!! அங்கு செல்பவர்கள் வீடியோக்களை இணையத்தில் பதிவிடுவதால் இதுவரை செல்லாதவர்கள் அதனை பார்த்துவிட்டு தாங்களும் அங்கு செல்ல வேண்டும் என்று நினைக்கின்றனர். அந்த அழகான இயற்கை சூழலை பார்க்க வேண்டும் ட்ரெக்கிங் போக வேண்டும், அங்கு போய் சாகசங்கள் செய்ய வேண்டும் என்று பலர் ஆர்வம் காட்டி வருகின்றனர். ஆனால் அந்த மலை ஏறி செல்பவர்களுக்கு தான் தெரியும் அது எவ்வளவு கஷ்டம் நிறைந்த மலை என்று!! சமீபத்தில் கூட மகா சிவராத்திரி முடிந்த நிலையில் அதிக சிவன் பக்தர்கள் சிவனே அங்கு காட்சியளிக்கின்றார் என்ற எண்ணத்தில் சென்று வந்தனர். 

மேலும் இதைத் தொடர்ந்து அங்கு செல்பவர்களில் சிலர் ஏற முடியாமல் இறந்து போகின்றனர். சமீபத்தில் கூட 22 வயதில் கிரண் என்ற இளைஞர் ஒருவர் மலையேறும்போது உடல்நல குறைவால் உயிரிழந்துள்ளார். அதற்கு முன்னரே ஒரு முதியோரும் இறந்துள்ளார். இவ்வாறு இந்த இடத்திற்கு செல்பவர்கள் முன்னெச்சரிக்கை ஏதும் இல்லாமல் ஒரு ஆர்வக்கோளாறில் செல்கின்றனர். இதைத்தொடர்ந்து வெள்ளையங்கிரி மலைக்கு செல்ல நினைப்பவர்கள் முன்கூட்டியே எந்தெந்த பொருட்களை எடுத்துச் செல்ல வேண்டும் எவ்வாறு தயாராக வேண்டும் என்பது குறித்த வீடியோக்கள் தற்போது இணையத்தில் அதிக அளவில் பதிவிட்டு வருகின்றனர். 

ஆனால் இந்த நிலையிலும் வெள்ளையங்கிரி மலையில் ஏறிக்கொண்டு உள்ள ஒரு நபருக்கு மூச்சு திணறல் ஏற்பட்டு பாதியிலே மயக்கம் அடைந்து கீழே விழுந்துள்ள வீடியோ ஒன்று இணையத்தில் வைரல் ஆகி கொண்டுள்ளது!! அவரே சுற்றியுள்ளவர்கள் அவருக்கு உதவி செய்ய முயற்சிக்கின்றனர். சிலர் அவருக்கு குளுக்கோஸ் மற்றும் தண்ணீர் கொடுப்பதற்கு முயற்சிக்கின்றனர் ஆனாலும் அவர் எந்த ஒரு அசைவும் இல்லாமல் படுத்த நிலையிலே உள்ளார். ஆகவே வெள்ளியங்கிரி மலை என்பது சாகசத்திற்கான இடம் அல்ல!! என்பது இதன் மூலம் தெரிய வருகிறது. மேலும் சிவனை முழு மனதோடு நினைத்துக் கொண்டு ஏறினால் மட்டுமே அந்த ஏழு மலைகளைக் கடந்து சிவனை அடைய முடியும் என்பது தெரிய வருகிறது.