24 special

வேலூர்: பிரதமர் மோடி காலை தொட்டு வணங்கிய பாஜக பெண் நிர்வாகி..!

PM Modi
PM Modi

தமிழகத்தில் நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலுக்காக ஏண்டிஏ கூட்டணி வேட்பாளருக்காக தமிழகம் வந்த பிரதமர் மோடி. இன்று வேலூர், அரக்கோணம், திருவண்ணாமலை, தர்மபுரி, சிதம்பரம், உள்ளிட்ட 6 நாடாளுமன்ற தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து பொதுக்கூட்டத்தில் பேசினார் பிரதமர் மோடி. அப்போது, மேடையில் நடந்த சம்பவம் அனைவரையும் நெகிழ்ச்சி அடைய வைத்துள்ளது.



பாஜகவுடன் கூட்டணி மேற்கொண்டு வந்த அதிமுக கடந்த ஆண்டு செப்டம்பரில் அதிமுக தேசிய கூட்டணியில் இருந்து வெளியேறியது. அதனால் இந்த நாடாளுமன்ற தேர்தலில் பாஜக தலைமையிலான கூட்டணியை வலுப்படுத்தியுள்ளது. 40 தொகுதிகளிலும் கவன செலுத்தி வரும் பாஜக வேட்பாளர்கள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில், 2 நாள் சுற்றுப்பயணமாக பிரதமர் மோடி நேற்று சென்னை வந்தார். சென்னையில் உள்ள 3 தொகுதிகளின் வேட்பாளர்களை ஆதரித்து பிரதமர் மோடி நேற்று ரோடு ஷோ நடத்தினார். அதற்கு மக்களும் கூட்டமாக கலந்து கொண்டு வரவேற்பு அளித்தனர். 


அதனை தொடர்ந்து, சென்னையில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் வேலூர் சென்றார் பிரதமர் மோடி, வேலூர் கோட்டை மைதானத்தின் மேடையில் இருந்த நிர்வாகிகளை பிரதமர் மோடி வணங்கியபடி நடந்து சென்றார். அப்போது பெண் நிர்வாகி ஒருவர் திடீரென்று கீழே குனிந்து பிரதமர் மோடியின் காலை தொட்டு வணங்கினார். இதனை சற்றும் எதிர்பாராத பிரதமர் மோடி உடனடியாக அந்த பெண் நிர்வாகிகளை நோக்கி கைககளை கும்பிட்டப்படி தலைக்குனிந்து 2 முறை வணங்கினார். பிரதமர் மோடியின் இந்த செயலால் நிர்வாகிகள் வியந்துபோயினர். மேலும் பெண் நிர்வாகியை நோக்கி பதிலுக்கு பிரதமர் மோடி தலைக்குனிந்து வணங்கியபோது அங்கிருந்த நிர்வாகிகள் ‛‛மோடி.. மோடி..'' என கோஷமிட்டு மேடையை அதிர வைத்தனர்.


இது தொடர்பான வீடியோ இணையத்தில் வெளியாகி கவர்ந்து வருகிறது. மேலும், இந்த நிகழ்ச்சியில் பாரத பிரதமர் மோடி அவர்களுக்கு நிர்வாகிகள் செங்கோலை கொடுத்து வரவேற்றனர். வேலூர் பொது கூட்டத்தை முடித்த நிலையில், கோவையில் பிரதமர் மோடி பாஜக வேட்பாளர் அண்ணாமலை, நீலகிரி தொகுதி எல். முருகன் உள்ளிட்டவர்களை ஆதரித்து பிரதமர் மோடி வாகு சேகரித்து பொது கூட்டத்தில் பேசி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.