தமிழகத்தில் முதல் கட்டமாக நடைபெறும் மக்களவை தேர்தலுக்காக திமுக இண்டியா கூட்டணியுடன் இந்த தேர்தலை சந்திக்கிறது. இதற்காக தேர்தல் அறிக்கையை திமுக வெளியிட்டிருந்தது. அதில் உள்ள வாக்குறுதிகள் அனைத்தும் மாநிலங்களுக்கானது போல் இல்லை என்றும் மொத்த இந்தியாவுக்குமானதாக இருப்பதாக விமர்சனம் எழுந்தது. இந்நிலையில், முதலமைச்சர் ஸ்டாலின் சமீபத்தில் கோவையில் சென்னையை போன்று மைதானம் அமைக்க இருப்பதாக தேர்தல் அறிக்கையில் சேர்த்து அறிவித்திருந்தார்.
தேர்தல் அறிக்கை அறிவித்த பிறகு தமிழக அரசு மீண்டும் ஒரு திட்டத்தை அறிவித்திருப்பது எதற்காக என்று அரசியல் விமர்சகர்கள் கேள்விகளை எழுப்பியிருந்தனர். இந்த சூழ்நிலையில், கோவை தொகுதியில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை போட்டியிடுகிறார். திமுக சார்பாக கணபதி ராஜ்குமார் போட்டியிடுகிறார். கோவை அதிமுகவின் கோட்டையாக இருக்கும் நிலையில் பாஜகவின் வளர்ச்சி அங்கு அதிகரித்துள்ளது. இதனை திமுக தன் வசமாக்க இப்படி அறிவிப்புகளை வெளியிட்டு இருக்கலாம் என்று கூறப்படுகிறது.
ஆனால், கோவையில் அண்ணாமலையை வீழ்த்துவதற்காக சிறையில் இருக்கும் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி தான் கோவையில் திமுக வேட்பாளர்களை நிற்க வலியுறுத்தியதாக கூறப்பட்ட நிலையில், திமுக இப்படி ஒரு அறிவிப்பை விட்டு மக்களிடமும் இளைஞர்களிடமும் வாக்குகளை திமுக பக்கம் வரும் என திமுக நினைத்து வருகிறதாம். அறிவிப்பு வந்தவுடன் பாஜக தலைவரும் கோவை வேட்பாளருமான அண்ணாமலை திமுகவின் இந்த வாக்குறுதியை இந்த ஆண்டின் சிறந்த ஜோக் என விமர்சித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் தெரிவித்தது, கோவையில் முதலில் சாலை வசதிகளை சீர் செய்யுங்கள், தோல்வி பயத்தின் காரணமாக முதலமைச்சர் சென்னையில் இருந்து புதிய திட்டங்களை அறிவித்து வருகிறார் என்றும் சிறையில் இருந்து செந்தில் பாலாஜி கதை, திரைக்கதை கொடுக்க டி.ஆர்.பி ராஜா அதனை செய்து வருகிறார் என விமர்சனம் செய்திருந்தார். இந்நிலையில், இந்த அறிவிப்புக்கு அரசியல் விமர்சகர்களும் ஒரு தேர்தலில் வாக்குறுதி கொடுத்த பிறகு அதில் ஒன்றை சேர்த்துள்ளது வரலாற்றில் திமுக கட்சி தான் என விமர்சனம் வைக்கின்றனர். மேலும், இந்த திட்டத்தை அதிமுக தரப்பில் ஏற்கனவே முயற்சித்ததாகவும் கூறப்படுகிறது. ஆனால், திமுக திடீர் அறிவிப்புக்கு பின்னாடி திமுகவுக்கு தோல்வி பயத்தை உணர்த்தியுள்ளது.
அதன் காரணமாகவே இப்படி அறிவித்து வருகிறது என்றும், சட்டமன்ற தேர்தலில் உதயநிதி ஸ்டாலின் கூறினார் அனைத்து மாவட்டத்திலும் விளையாட்டு மைதானம் அமைக்கப்படும் என்று ஆட்சிக்கு வந்து மூன்று வருடம் ஆகிய நிலையில் அதற்கான செயல்பாடுகளை இதுவரை தொடங்கவில்லை, அறிவித்த வாக்குறுதிகளே இன்னும் மக்களுக்கு முழுமையாக செல்லவில்லை. இதில் இந்த ஒரு திட்டம் ஏதும் கோவையில் எடுப்படாது கோவையில் அண்ணாமலை வெற்றி பெறுவது உறுதியாகிவிட்டது என அரசியல் விமர்சகர்களால் கூறப்படுகிறது.