24 special

வீரமணிக்கு பயந்த விஜய் இந்து சமய அறநிலையத்துறை ஐ.ஏ.எஸ் அதிகாரி சுவர்ணா இடமாற்றம் கிழித்து தொங்கவிட்ட வானதி

VIJAY,VANATHISRINIVASAN
VIJAY,VANATHISRINIVASAN

தமிழக அரசியலில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்துவார் என்ற எதிர்பார்ப்புடன் களமிறங்கிய விஜய், ஆரம்ப வேகத்திலேயே நிர்வாக தடுமாற்றங்களில் சிக்கியுள்ளார் . மக்கள் மத்தியில் “மாற்றத்தின் முகம்” என்ற இமேஜை உருவாக்க முயன்றாலும், நடைமுறையில் கூட்டணி கட்சிகளின் அழுத்தத்திற்கும்  அரசியல் சூழ்ச்சிக்கும் இடையில் சிக்கி செயல்படுகிறார் என்ற விமர்சனங்கள் தற்போது அதிகரித்து வருகின்றன.மேலும் ஜான் ஆரோக்யசாமி  அவர்களின் வழிகாட்டுதலில் தவறான பாதையில் செல்கிறார் என  அக்கட்சி வட்டாரங்கள் புலம்ப ஆர்மபித்துள்ளார்கள்.


அதற்கான முதல் எடுத்துக்காட்டாக அவரது நியமன அரசியலே மாறியுள்ளது. அவர் அறிவித்த தனிச்செயலாளர்  ஜோதிடர்  ரிக்கி ரத்தன் நியமனம் கூட்டணி கட்சிகள் மற்றும் திமுகவின் எதிர்ப்புகள் காரணமாக  எந்தவித விளக்கமும் இல்லாமல் அந்த முடிவிலிருந்து பின் வாங்கினார். சின்ஹட்ட நிலையில் அடுத்த சம்பவம் ஒன்று அரங்கேறி உள்ளது.  கி.வீரமணியின் பேச்சை கேட்டு அடுத்த நியமனத்தை மாற்றியுள்ளார் விஜய் இது குறித்து பாஜக தேசிய மகளிரணி தலைவர் வானதி விஜயை கிழித்து தொங்கவிட்டுள்ளார். 

ஆட்சிக்கு வந்ததும் ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்து வரும் முதலமைச்சர் ஜோசப் விஜய் அவர்கள், ஹிந்து சமய அறநிலையத் துறை செயலாளராக ஐ.ஏ.எஸ். அதிகாரி சுவர்ணா அவர்களை நியமித்தார். அவர் எந்த சமூகத்தைச் சேர்ந்தவர் என்பது யாருக்கும் தெரியாத நிலையில் அவரது ஜாதியை கண்டுபிடித்த திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அவர்கள், பிராமண சமுதாயத்தைச் சேர்ந்தவரை ஹிந்து சமய அறநிலையத் துறை செயலாளராக நியமிப்பதா என கேள்வி எழுப்பியிருந்தார்.

அதைத் தொடர்ந்து ஹிந்து சமய அறநிலையத்துறை அமைச்சராக ரமேஷ் பதவியேற்றார். அவரது ஜாதியையும் ஆராய்ச்சி செய்து கண்டுபிடித்த கி.வீரமணி அவர்கள், ஹிந்து சமய அறநிலையத்துறை அமைச்சர், செயலாளர் என இரு பதவிக்கும் பிராமணர்களை எப்படி நியமிக்கலாம் என மிரட்டல் தொனியில் அறிக்கை விட்டிருந்தார்.இந்நிலையில் இன்று ஹிந்து சமய அறநிலையத்துறை செயலாளர் பொறுப்பிலிருந்து சுவர்ணா அவர்கள் விடுவிக்கப்பட்டு, சுற்றுலாத் துறை செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார். 

ஹிந்து மத வெறுப்பாளரான கி.வீரமணியின் மிரட்டலுக்கு முதலமைச்சர் ஜோசப் விஜய் அவர்கள் பணிந்து விட்டாரோ என்ற சந்தேகம் எழுகிறது. முதலமைச்சராகப் பதவியேற்றதும், சென்னை வேப்பேரியில் உள்ள திராவிடர் கழக தலைமை அலுவலகத்திற்கு சென்று கி.வீரமணி அவர்களை ஜோசப் விஜய் சந்தித்ததால் இந்த சந்தேகம் வலுப்படுகிறது.கி.வீரமணியின் மிரட்டலுக்கு பணிந்து ஒரு ஐ.ஏ.எஸ் அதிகாரி மாற்றப்பட்டுள்ளதால், அதிகாரிகள் இடையே ஜாதி பற்றிய தாக்கத்தைதான் ஏற்படுத்தும். இனி ஜாதி, மத அடிப்படையில்தான் நியமனங்கள், இடமாறுதல்கள் நடக்குமோ என்ற அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. ஹிந்து மத வெறுப்பாளர் கி.வீரமணி அவர்களின் மிரட்டலுக்கு முதலமைச்சர் ஜோசப் விஜய் பணிந்திருப்பது கடும் கண்டனத்திற்குரியது என  வானதி  அவர்கள் அறிக்கை வெளியிட்டுள்ளார்