தமிழத்தில் விஜய் அரசியலுக்கு வருவது குறித்து தான் ரசிகர்கள் பெரும் எதிர்பார்ப்புடன் பார்த்து வருகின்றனர். விரைவில் கட்சியை பலப்படுத்தும் நிலையில் விஜய் உறுதியாக இருப்பதால் விஜய் அரசியலுக்குய வருவது முற்றிலும் உறுதியாகிவிட்டது. அதற்கான ஏற்பாடுகளை அவசர அவசரமாக செய்து வருகின்றனர். விஜயின் கட்சி தொடர்பான பெயர்கள் கடந்த சில நாட்களாக இணையத்தில் வைரலானது இதனால் விஜய் கடும் அப்செட்டில் இருப்பதாக கூறப்பட்டது. நிர்வாகிகள் கட்சியை பதிவு செய்ய நிர்வாகிகள் டெல்லி புறப்பட்டு சென்றனர். இந்நிலையில் விஜய் நிர்வாகிகளுக்கு சில டார்கெட்டை நிர்ணயித்து செயல்பட உத்தரவிட்டுள்ளாராம்.
கடந்த சில வருடங்களாகவே தமிழகமெங்கும் உள்ள தனது ரசிகர் மன்ற நிர்வாகி்களை நேரில் அழைத்து பேசி வருகிறார் விஜய். ஆனால், இதுவரை கட்சி தொடங்கவில்லை. கட்சி பெயரையும் அவர் அறிவிக்கவில்லை. இணையத்தில் தமிழக முன்னேற்ற கழகம் என்ற பெயரில் தொடங்கவுள்ளதாக சில தகவல் வந்தன இது உண்மையா என்பதை விஜய் தரப்பு இதுவரை விளக்கம் கொடுக்கவில்லை. அன்மையில் பனையூரில் நடந்த ஆலோசனை கூட்டத்தில் இந்த பெயரை விஜய் தேர்தெடுத்து விட்டதாக சில தகவல் வந்தன.
இந்நிலையில், விஜய் தொடங்கவுள்ள அரசியல் கட்சியின் பெயர் இன்று அறிவிக்கப்பட வாய்ப்புள்ளதாக தகவல்கள் வட்டமடித்து வருகின்றன. விஜய்யின் அரசியல் கட்சி பெயர் என சமூக வலைதளங்களில் பெரும் விவாதங்கள் நடந்து வரும் சூழலில், அதிகாரப்பூர்வமாக தாங்களே அறிவிக்கும் முடிவில் விஜய் தரப்பு இருப்பதாக கூறப்படுகிறது. விஜய்யின் கட்சி குறித்து அறிவிப்பு எந்த நேரத்திலும் வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால், அவரது ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பும், உற்சாகமும் ஏற்பட்டுள்ளது. இதனால் மாவட்ட தலைவர்கள் மற்றும் நிர்வாகிகளிடம் பட்டாசு, இனிப்பு ஆகியவற்றை தயாராக வைத்து கொள்ள விஜய் தரப்பு உத்தரவிட்டதாக கூறப்படுகிறது.
விஜய் கட்சி பெயர் வெளியானதும் உறுப்பினர்களை இணைக்க ஒரு டார்கெட்டை கொடுத்துள்ளார் விஜய் என முக்கிய நிர்வாகிகள் சிலர் தகவலை வெளியிட்டு வருகின்றனர். அதாவது, விஜய் பெயரில் ஆண்ட்ராய்டு மொபைல் அப்ளிகேஷன் ஒன்றை வெளியிட்டு அதன் மூலம் உறுப்பினர்கள் இணைந்து கொள்ள தீவிரமான ஏற்பாடுகள் நடந்து வருகிறதாம். எனவே, விஜயின் கட்சியில் இணைய விரும்புவர்கள் அந்த செயலியை டவுண்ட்லோட் செய்து தங்களின் விபரங்களை கொடுத்து தங்களை உறுப்பினராக சேர்த்து கொள்ளலாம். 24 நான்கு மணிநேரத்தில் ஒரு கோடி உறுப்பினர்களை சேர்க்க மைல்கல்லை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. டெல்லி தேர்தல் ஆணையத்தில் விஜய் மக்கள் இயக்க நிர்வாகி புஸ்ஸீ ஆனந்த் கட்சி ஆவணங்கள் கொண்டு பதிவு செய்துள்ளார் இதனால் தமிழகத்தில் ரசிகர்கள் கொண்டாடத்திற்கு தயாராக இருந்தனர்.
இந்த நிலையில் தற்போது விஜயின் கட்சி பெயர் தமிழக வெற்றி கழகம் என அறிவிப்பு வெளியானது. தமிழகம் முழுவதும் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். நாடளுமன்ற தேர்தலில் யாருக்கும் ஆதரவு கிடையாது எண்டுறம் 2026 தேர்தலை நோக்கி தான் உள்ளது என அதிகாரபூர்வமாக தகவல் வெளிவந்துள்ளது.