24 special

பட்ஜெட்டில் விழுந்த அடி கதறிய திருமா!

nirmalasitharaman, thirumavalavan
nirmalasitharaman, thirumavalavan

மத்தியில் பாஜக கடந்த 10 ஆண்டுகளாக ஆட்சியை நிலைநாட்டி வருகிறது இந்த ஆட்சியில் இந்தியா இதுவரை கண்டிராத பல வெற்றிகளையும் சாதனைகளையும் உலக அரங்கில் படைத்து வருகிறது. இந்த நிலையில் 2024 - 25 ஆண்டிற்கான இடைக்கால பட்ஜெட்டை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நேற்று தாக்கல் செய்தார். இப்படி மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்யப்படும் பட்ஜெட்டில் இது ஆறாவது பட்ஜெட் ஆகும்.இதற்கு முன்பாக முன்னாள் பிரதமர் மொரார்ஜி தேசாயி தொடர்ச்சியாக ஆறு முறை பட்ஜெட்டை தாக்கல் செய்துள்ளதாகவும் தற்போது நிதி அமைச்சர் அவரின் சாதனையை சமன் செய்ய உள்ளதாகவும் செய்திகள் பரபரப்பாக வெளியாகிக் கொண்டிருந்தது. மேலும் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்த இடைக்கால பட்ஜெட்டில்  ஸ்ரார்ட்அப்களுக்கு சில விதிவிலக்குகள் மற்றும் சில சலுகைகளை நீட்டித்தல் - 2025 மார்ச் வரை இறையாண்மை நிதிகள் மற்றும் ஸ்டார்ட்அப்களுக்கான வரிச் சலுகைகள் நீட்டிப்பு, வரி செலுத்துவோர் சேவை - 2009-10 வரையிலான காலத்திற்கு ₹25000 மற்றும் 2014-15 வரையிலான காலத்திற்கு ₹10000 வரையிலான நேரடி வரி கோரிக்கைகளை திரும்பப் பெற்று ஒரு கோடி வரி செலுத்துவோருக்கு உதவியது,  


40,000 சாதாரண ரயில் பெட்டிகள் வந்தே பாரத் தரத்திற்கு மாற்றப்படும், R&Dயை அதிகரிக்க தனியார் துறையை ஊக்குவிக்க 1-லட்சம் கோடி கார்பஸ் 50 வருட வட்டியில்லா கிடைக்கும். சன்ரைஸ் டொமைன்களில் ஆராய்ச்சிக்காக தனியார் துறைக்கு குறைக்கப்பட்ட விகிதக் கடன்களுக்கான கார்பஸ் 1 லட்சம் கோடி, மேற்கூரை சோலாரைசேஷன் மற்றும் இலவச மின்சாரம் மேற்கூரை சூரியமயமாக்கல் மூலம், 1 கோடி குடும்பங்கள் ஒவ்வொரு மாதமும், 300 யூனிட் வரை இலவச மின்சாரம் பெற இயலும், மக்களவை மற்றும் மாநில சட்டசபைகளில் மூன்றில் ஒரு பங்கு பெண்களுக்கு இடஒதுக்கீடு செய்தல், கிராமப்புறங்களில் பிரதமர் ஆவாஸ் யோஜனா திட்டத்தின் கீழ் 70% வீடுகளை பெண்களுக்கு தனி அல்லது கூட்டு உரிமையாளர்களாக வழங்குவது என பல சிறப்பம்சங்கள் மற்றும் ஏழை எளிய மக்கள் அனைவரும் பயன்பெறும் வகையிலான பல நலத்திட்டங்கள் குறித்த புதிய அறிவிப்புகள் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்த பட்ஜெட்டில் இடம் பெற்றிருந்தது. 

இதனால் பலதரப்பிலிருந்து நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்த பட்ஜெட்டிற்கு வரவேற்பு கொடுக்கப்பட்டது அதே சமயத்தில் இந்த பட்ஜெட் தாக்களின் போது குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு அளித்த உரையில், அயோத்தியில் ராமருக்கு கோவில் கட்ட வேண்டும் என்பது நீண்ட வருடங்களாக மக்கள் கண்டு கொண்டிருந்த கனவு அது தற்போது நிறைவேறி உள்ளது அதேபோன்று ஜம்மு காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்தை நீக்க வேண்டும் என்பதும் மக்களின் நீண்ட கால கனவு அதுவும் தற்போது நிறைவேறியுள்ளது என்று நாட்டில் நடந்த இரண்டு முக்கிய வரலாற்று நிகழ்வை புகழ்ந்து பேசி இருந்தார். இதனால் பெரும் அதிர்ச்சியிலும் அடுத்து என்ன செய்வது என்று குழப்பத்திலும் திமுகவும் அதன் கூட்டணி கட்சிகளும் விழித்துள்ளது! இந்த நிலையில், விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் நிதியமைச்சர் தாக்கல் செய்த பட்ஜெட் முற்றிலும் பொய் என்றும் மக்களவையில் தாக்கல் செய்யப்பட்ட ஒன்றிய அரசின் ' இடைக்கால பட்ஜெட் ' முழுக்க முழுக்க பொய்களைக்கொண்டு கோர்க்கப்பட்டிருக்கிறது. மோடி அரசின் தோல்வியை காட்டும் பட்ஜெட் இது! எனவும் ஒரு நீண்ட அறிக்கையை தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இதன் பின்னணி குறித்து விசாரித்தபொழுது ஏற்கனவே தோல்வியின் விளிம்பில் இருக்கிறோம், இடைக்கால பட்ஜெட் வேறு மக்கள் மத்தியில் நன் பெயரை மத்திய அரசிற்கு வாங்கி கொடுக்கிறது இதனால் நமக்கு ஒரு சீட்டு கூட கிடைக்காது என்ற பதட்டத்தில் திருமாவளவன் இது போன்ற நீண்ட பதிவை அறிக்கையாக வெளியிட்டுள்ளார் என்று அரசியல் விமர்சகர்களால் கூறப்படுகிறது.