
தமிழ்நாட்டில இருக்குற பல நடிகர், நடிகைகள் பல கட்சிகளில செயல்பட்டு வர்ராங்க. இது தவிர நடிகர் விஜயகாந்த் தேமுதிகவையும், சரத்குமார் சமத்துவ மக்கள் கட்சியையும், கமல்ஹாசன் மக்கள் நீதி மய்யம் கட்சியையும் தொடங்கி நடத்திட்டு வர்ராங்க.
நடிகர் ரஜினி அரசியலுக்கு வருவார் னு காலம்காலமாக எதிர்பாத்து வந்த நிலைல அவர் தன்னோட உடல் நலதா கருத்துல வச்சு அரசியலுக்கு வரலைன்னு அறிவிச்சாரு. இந்த நிலையில தான் நடிகர் ரஜினிக்கு பிறகு நடிகர் விஜய் மீதான எதிர்பார்ப்பு தான் அதிகமாயிருக்கு.
நடிகர் விஜய் தன்னுடைய 70-வது திரைப்படத்தை முடித்துக் கொண்டு அவர் அரசியல் கட்சியை தொடங்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. சீக்கிரமாவே அரசியலுக்கு வருவார் னு தொடர்ந்து அரசல் புரசலா பேச்சுக்கள் உள்ள நிலையில, அவரோட சமீப நடவடிக்கைகளும் அரசியலை முன்நோக்கியே இருப்பதா அரசியல் விமர்சகர்கள் சொல்றாங்க . கடந்த ஆண்டு நடந்த நகர்புற உள்ளாட்சி தேர்தலில் விஜய் மக்கள் இயக்கத்தினர் போட்டி போட்டு சில இடங்களில் வெற்றி பெற்றது, விஜய் மக்கள் இயக்கத்தை இன்னும் வலு சேர்க்கும் விதமா ஆன்லைன் உறுப்பினர் சேர்க்கையை அதிகப்படுத்துவது மாதிரியான விஷயங்கள் அரசியலுக்கான முயற்சியாக பார்க்கப்படுது.
இதுதவிர தமிழ்நாட்டில இருக்குற 234 தொகுதிகள் ளையும் தொகுதி வாரியாக இருக்குற வாக்காளர்களினுடைய எண்ணிக்கை, கடந்த 5 தேர்தல்களில் வெற்றி பெற்ற வேட்பாளர்களினுடைய விபரங்கள், அவர்கள் சார்ந்த கட்சிகள், அவர்கள் பெற்ற ஓட்டுகள் போன்றவற்றை விஜய் மக்கள் இயக்கத்தினர் சேகரித்து வருவது விஜய் அரசியலில இறங்குவதற்கான அச்சாரமா பார்க்கப்படுது.
இது வரை தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தான் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களை அப்பப்போ சந்திச்சு, 10th, 12th நீட் மற்றும் இன்னும் பிற போட்டி தேர்வுகள் எழுதிய மாணவர்களை சந்திச்சு ஊக்கமளிப்பதும் அவர்களுக்கு நம்பிக்கை ஊட்டும் விதமாக பேசுவதும் வழக்கம் தான்...
இதை தொடர்ந்து நாம் தமிழர் கட்சியின் சீமான் தனது வாக்காளர்கள் இப்போ தான் பள்ளிக்கூடங்களில் படித்துக்கொண்டிருக்கிறார் என ஒருபுறம் பிரச்சாரம் செய்து கொண்டிருக்க
நடிகர் விஜய் 234 தொகுதிகளை சேர்ந்த மாணவர்களை நடிகர் விஜய் ஜூன் 3ம் தேதி சென்னை மதுரவாயலில் உள்ள தனியார் மண்டபத்தில் சந்திக்க திட்டடமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. நடந்து முடிந்த பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற்ற 10 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களை, ஒரு தொகுதிக்கு 6 பேர் னு மொத்தம் 234 தொகுதிகளை சேர்ந்த 1,444 பேரை சந்திச்சு வாழ்த்து தெரிவித்து பாராட்ட உள்ளதாகவும், மேலும் அவர்களுக்கு உதவிகள் வழங்க உள்ளதாகவும் தகவல்கள் வெளிவருகின்றன.
இதுதொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாக உள்ளது என்ற தகவலும் தற்போது வெளியாகி உள்ளது. இந்த சந்திப்பின்போது மாணவ-மாணவிகள் மட்டுமின்றி அவர்களின் பெற்றோரும் பங்கேற்க வாய்ப்பு ஏற்படுத்தி கொடுக்கப்பட உள்ளது. இதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகிறது.
இப்படி என்னதான் விஜய் கணக்கு போட்டு மாணவர்களை மாத்தி சந்திச்சாலும் அப்பனுக்கு பாடம் சொன்ன வாத்தியாரு மாதிரி நம்ம அண்ணாமலை தாங்க அப்போ இருந்தே மாணவர்களை சந்திக்கிற trend அ ஆரம்பிச்சது....