24 special

முதல்வர் பதவிக்கே குறி வைக்கும் செந்தில் பாலாஜி

Senthil balaji,mk stalin
Senthil balaji,mk stalin

இன்றுடன் நான்காவது நாளாக தொடரும் வருமானவரித்துறையினர் ரெய்டு அமைச்சர் செந்தில் பாலாஜியை தாண்டி அவர் இருக்கும் கட்சியையும் பாதிக்கும் நிலை தற்போது ஏற்பட்டுள்ளது. அமைச்சர் செந்தில் பாலாஜி கடந்த ஆட்சியிலும் இந்த ஆட்சியிலும் செய்த ஊழல், பண மோசடி காரணமாக எழுந்த புகாரின் அடிப்படையில் வருமானவரித்துறை அதிகாரிகள் அவருக்கு தொடர்புடைய அனைத்து இடங்களிலும் அதிரடி ரெய்டை மேற்கொண்டு வருகின்றனர். இந்த நிலையில் வருமானவரித்துறையினரின் இந்த சோதனைக்கு முக்கிய காரணமாக கூறப்படுவது அவரது சகோதரர் அசோக் என்பவரை. தற்போது மேலும் ஒரு புதிய தகவல் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 


அமைச்சர் செந்தில் பாலாஜியை தொடர்ந்து முதல்வரின் மகன் உதயநிதிக்கு சொந்தமான சில இடங்களில் அமலாக்கத் துறையினர் சோதனை நடத்தி உதயநிதிக்கு சொந்தமான சொத்துக்களை முடக்கியதும் திமுக தலைமையை ஆட்டம் காண வைத்துள்ளது. முதல்வர் தற்போது தமிழகத்தில் இல்லாத சமயத்தில் இப்படி வருமானவரித்துறை மற்றும் அமலாக்க துறையின் சோதனைகள் மற்றும் சொத்து முடக்கம் ஏற்படுகிறதே  என்ன செய்வது என்று குழம்பி போய் இருக்கின்றனர் திமுகவினர். இதுமட்டுமில்லாமல் திமுகவினர் செய்தியாளர்கள் சந்திப்பில் கடும் கோபத்தை வெளிப்படுத்தி வருகின்றனர். திண்டுக்கல் மாவட்டத்தில் நடந்த அரசு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அமைச்சர் கே என் நேரு செய்தியாளர்கள் சந்திப்பில் வைகை அணியின் நீர் போக்கு பற்றி பேசிக் கொண்டிருந்த பொழுது செய்தியாளர்களில் ஒருவர் அமைச்சர் கே என் நேருவிடம் அமைச்சர் செந்தில் பாலாஜி பற்றி கேள்வி எழுப்பி உள்ளார். அவரின் பெயரை கூறியதுமே அமைச்சர் நேருவிற்கு முகம் கோபத்தில் சிவக்க ஆரம்பித்துள்ளது இந்த விவகாரத்தில் நான் என்ன சமாளிப்பு செய்ய வேண்டும் என்று கூறும் அளவிற்கு முக பாவனைகளை காட்டிவிட்டு கோபமாக இருந்தார், பிறகு உடனே சற்றென்று அங்கிருந்து கிளம்பினார் அமைச்சர் கே.என்.நேரு. 

அமைச்சர் செந்தில் பாலாஜியின் விவகாரத்தில் திமுகவின் மூத்த தலைவரும் மற்றும் அமைச்சருமான கே என் நேரு கோபித்துக் கொண்டதற்கு பின்னால் அவர்கள் இருவருக்கும் இடையே ஏற்கனவே இருக்கும் ஒரு உரசல்களை காரணமாக கூறினாலும் திமுகவில் உள்ள மற்ற மூத்த அமைச்சர்களும் அமைச்சர் செந்தில் பாலாஜியின் வருமானவரித்துறை ரெய்டிற்கு எந்த ஒரு பதிலையும் கூற முடியாமல் அமைதி காத்து வருகின்றனர். 

திமுக தமிழகத்தில் ஆட்சி அமைத்து இரண்டு ஆண்டுகள் கடந்துவிட்டன இந்த இரண்டு ஆண்டுகளில் அதிக அவப்பெயர்கள் திமுக மீது ஏற்பட்டு வருகிறது, அதனால் இந்த இரண்டு ஆண்டுகளில் ஏற்பட்ட அவப்பெயர்களை அடுத்த வருடம் நடக்கவிருக்கும் நாடாளுமன்ற தேர்தலுக்குள் ஏதாவது செய்து மாற்றி 2024 ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் நல்ல வாக்குகளை வாங்கிவிடலாம் என்று நினைத்துக் கொண்டிருந்த திமுகவின் மூத்த தலைவர்களான அமைச்சர் கே என் நேரு, துரைமுருகன் போன்றோருக்கு அமைச்சர் செந்தில் பாலாஜி டாஸ்மாக் பாரில் செய்த ஊழல் விவகாரம் அதனால் தற்போது ஏற்பட்டுள்ள வருமானவரித்துறையினர் ரெய்டு போன்றவை திமுக அரசுக்கு இன்னும் பின்னடைவு ஏற்படுத்தும் செயலாக அமைந்துள்ளதாக தெரிகிறது.  இதனால் செந்தில் பாலாஜி மீது அமைச்சர் கே என் நேரு மிகுந்த கோபத்தில் இருந்துள்ளார் அந்த கோபத்தின் வெளிப்பாடு தான்  பத்திரிகையாளர்கள் முன்பு வெளியானது என்று அரசியல் வட்டாரங்கள் கருத்து தெரிவிக்கின்றன. இந்த நிலையில் அரசியல் விமர்சகர் சவுக்கு சங்கர் பிரத்யேக அதிர்ச்சி தரும் தகவல் ஒன்றை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். 

அதில் கிட்டத்தட்ட 70% அதிகாரிகள் செந்தில் பாலாஜி இடம் பணம் வாங்கிக்கொண்டு செந்தில் பாலாஜிக்கு ஆதரவாக இருப்பதாகவும், குறிப்பாக முதல்வர் மு க ஸ்டாலினை பதவியில் இருந்து தள்ளிவிட்டு தான் ஆட்சிப் பொறுப்பை ஏற்க வேண்டும் என்று செந்தில் பாலாஜி திட்டம் திட்டி வருவதாகவும் சவுக்கு சங்கர் அந்த பதிவில் குறிப்பிட்டுள்ளார். சவுக்கு சங்கர் முதல்வர் ஸ்டாலினை பதவியில் இருந்து தள்ளிவிட்டு முதல்வர் பதவியை கைப்பற்றுவார் என கூறியது சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.