24 special

வெளிச்சத்திற்கு வந்த விஜய்யின் சுயரூபம் கர்நாடக காங்கிரஸிடம் சரணாகதியா தவெக அரசின் சுயநல அரசியல் ஆட்டம் அம்பலம்

VIJAY
VIJAY

தமிழ்நாட்டின் உயிர்நாடியாக விளங்கும் காவிரி நதிநீர் விவகாரத்தில், தவெகவின் சுயநல அரசியலும், அதன் பின்னணியில் இருக்கும் காங்கிரஸ் கட்சியின்  துரோகமும் தற்போது ஒட்டுமொத்த தமிழக மக்களிடையேயும் வெட்டவெளிச்சமாகியுள்ளது. தமிழகத்தில் எப்படியாவது ஆட்சிக்கட்டிலில் அமர்ந்துவிட வேண்டும், அதிகார நாற்காலியைப் பிடித்துவிட வேண்டும் என்ற ஒற்றை சுயநலத்திற்காக, தமிழகத்தின் ஒட்டுமொத்த உரிமைகளையும் காங்கிரசிடம் தாராளமாகப் பங்கு கொடுத்து, இந்தத் தமிழ் மண்ணையே விஜய் விற்றுவிட்டார் என்றே தோன்றுகிறது. கர்நாடக துணை முதல்வரும் நீர்வளத்துறை அமைச்சருமான டி.கே.சிவக்குமார், மேகதாது அணை கட்டுவதை எதிர்க்க தமிழகத்திற்கு எந்த உரிமையும் இல்லை என்று கொக்கரிப்பதோடு, பூமி பூஜை போடும் வரை துணிச்சலாகப் பேசுகிறார் என்றால், அதற்கு இந்தத் தவெக அரசு ஒரு கண்டனத்தை கூட தெரிவிக்கவில்லை. .


மாநிலத்தின் உரிமைகளையும், காலங்காலமாக மண்ணை நம்பி வாழும் டெல்டா விவசாயிகளின் வாழ்வாதாரத்தையும் விட, தங்களுக்கு ஆட்சி அதிகாரமும், முதல்வர் பதவியும், அரசியல் லாபமும் தான் முக்கியம் என்று விஜய் நினைக்கிறாரோ என விமர்சனங்கள் எழுந்துள்ளது. காவிரியின் குறுக்கே அணை கட்டுவதற்கு அதனால் பயன்பெறும் கீழ்மடை மாநிலமான தமிழகத்தின் அனுமதி கட்டாயம் தேவை என உச்ச நீதிமன்றம் தெளிவான உத்தரவுகளைப் பிறப்பித்துள்ளது. மேலும், தமிழகத்திற்கான உரிய நீரை உரிய நேரத்தில் தடையின்றி வழங்க வேண்டும் என காவிரி மேலாண்மை ஆணையம் பலமுறை அறிவுறுத்தியும், அதனை முற்றிலும் மதிக்காமல் தான்தோன்றித் தனமாக நடந்து கொள்ளும் கர்நாடக காங்கிரஸ் அரசுக்கு, தமிழகத்தில் தங்களால் ஆட்டுவிக்கப்படும் ஒரு பொம்மை அரசுதான் ஆட்சியில் இருக்கிறது என்ற மமதையும் தைரியமும் தலைக்கேறியுள்ளது.

ஆட்சி அதிகாரத்திற்காகக் கடந்த கால ஆட்சியாளர்கள் கர்நாடக காங்கிரஸ் அரசாங்கத்திடம் தமிழகத்தின் உரிமைகளை அடகு வைத்திருந்தது போல, தற்போது காங்கிரஸ் கட்சியின் தயவுடன் ஆட்சியமைத்திருக்கும் தவெக அரசும் அதன் முதலமைச்சரும் தன்னுடைய பதவியையும், அதிகாரத்தையும் தக்க வைக்க மீண்டும் ஒருமுறை காவிரி விவகாரத்தில் மாநிலத்தின் உரிமைகளை முழுமையாக அடகு வைத்து விடுவார்களோ என்ற நியாயமான சந்தேகமும் அச்சமும் தமிழக விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் ஆழமாக எழுந்துள்ளது. காவிரியை நம்பி வாழும் 20-க்கும் மேற்பட்ட மாவட்ட மக்களின் குடிநீர் ஆதாரத்தையும், டெல்டா பகுதிகளைப் பாலைவனமாக்கும் சதியையும் கைகட்டி வேடிக்கை பார்க்கும் இந்த தவெக அரசு, கர்நாடக காங்கிரஸ் அரசை எதிர்த்து ஒரு துளி கூட திடமான நிலைப்பாடு எடுக்கத் துணியாமல் மௌனம் காப்பது ஒட்டுமொத்த தமிழகத்தையும் கொந்தளிக்கச் செய்துள்ளது.

மேகதாதுவில் அணையைக் கட்டி தமிழகத்தின் டெல்டா பகுதிகளைப் பாலைவனமாக்கும் கர்நாடக காங்கிரஸ் அரசாங்கத்தின் இம்முயற்சியை அரசியல் ரீதியிலும், சட்ட ரீதியிலும் ஆரம்ப நிலையிலேயே தடுத்து நிறுத்த தவெக அரசு உடனடியாக வீரியமான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.