
எல்லா வற்றிற்கும் முதல்வரும் எந்த செயலை தொடங்குவதற்கு முன்பு அவரை நினைக்காமல் தொடங்கப்படுவதில்லை அவர்தான் விநாயகர். இவரது பிறப்பும் அதற்குப் பிறகு இவரது கிடைத்த உருவமுமே ஒரு வேறுபட்ட புராணக் கதை. மற்ற தெய்வங்களின் கதைகளை விட முற்றிலும் மாறுபட்டது! அதோடு கணபதி என்றும் கணங்களின் தலைவன் என்றும் அழைக்கப்படுபவர்! பெரும்பாலான கடவுள் நம்பிக்கை கொண்டவர்களுக்கு விநாயகர் மீது அதிக நம்பிக்கையும் பக்தியையும் கொண்டுள்ளனர். மேலும் விநாயகர் சதுர்த்தி என்பது நாடு முழுவதும் மிகவும் விமர்சியாக கொண்டாடப்படுவது. இந்த மூன்று நாட்களுமே விநாயகரின் சிலை நாட்டில் உள்ள மூளை முடுக்கெல்லாம் நிறுவப்பட்டு ஆடல் பாடலுடன் கொண்டாடி மூன்றாம் நாள் இறுதியில் கடலுக்குள் விநாயகரின் சிலையை கரைப்பர். இப்படி விநாயக சதுர்த்தி விழா மட்டுமின்றி அனைத்து விழாக்களிலும் முதலில் விநாயகரை வணங்கி விட்டு தான் அடுத்த காரியத்தை செய்ய தொடங்குவார். இந்த நிலையில் விநாயகர் குறித்த மற்றுமொரு சுவாரசியமான தகவல் வெளியாகி உள்ளது.
மதுரை அருகே உள்ள திருமங்கலத்தில் இருந்து பேரையூர் செல்லும் வழியில் இருக்கிறது மாத்தங்கரை என்ற கிராமம் இங்குள்ள ஆலயத்தில் எழுந்தருளியிருக்கும் விநாயகர் வித்தியாசமான தோற்றத்தில் காட்சியளிக்கிறார். பெரும்பாலும் அனைத்து ஆலயங்களிலும் விநாயகப்பெருமான் அமர்ந்த கோலத்தில் தான் காணப்படுவார். ஆனால் இந்த ஆலயத்தில் வலக்கரத்தில் கோடரியை தாங்கிய நிலையில் நின்ற கோலத்தில் அருள்பாலிக்கிறார். இது ஒரு அபூர்வ தோற்றமாக பக்தர்கள் கூறுகின்றனர் புத்திர பாக்கியம் கிடைக்க வேண்டி இந்த விநாயகரை பக்தர்கள் வழிபட்டு வருகின்றனர்...கேட்ட வரம் தரும் காரிய சித்திமாலை விநாயகர் சதுர்த்தியன்று விநாயகர் அகவல், விநாயகர் கவசம், காரிய சித்திமாலை பாடல்களைப் பாடி விநாயகப் பெருமானை வழிபடலாம் இதில் எடுத்த செயல் வெற்றி பெறச் செய்யும் தனிச்சிறப்புடையது. காரிய சித்திமாலை கேட்ட வரம் தரும் தனிச்சிறப்புடைய இந்தத் துதியை விநாயகர் முன்பு அமர்ந்து உள்ளம். ஒன்றிப் பாராயணம் செய்தால், மன விருப்பம் எளிதில் நிறைவேறும்.
இந்த துதியை எட்டு நாட்கள் பாடி வந்தால், மனதில் மகிழ்ச்சி உண்டாகும். சங்கடஹர சதுர்த்தி திதிகளில் (தேய்பிறை சதுர்த்தி) எட்டுமுறை ஓதினால், அஷ்டமாசித்தி கைகூடும். தினமும் 21 முறை இப்பாடலைப் பாராயணம் செய்வோரின் சந்ததி கல்வியிலும், செல்வத்திலும் மேம்பட்டுத் திகழும். திருநாகை நீலாயதாக்ஷி அம்மன் ஆலய சிம்ம வாகன ஸ்ரீ பஞ்சமுக விநாயகர். இவ்விநாயகர் ஆனவர் ஆண்டுக்கு ஒரு முறை விநாயகர் சதுர்த்தி அன்று மட்டும் ராஜதானி மண்டபம் எழுந்தருளி கணபதி ஹோமத்துடன் விசேஷ அபிஷேகம் கண்டு அருளுவார். பத்துக் கரங்களுடன் நான்கு திசைகளிலும் நான்கு முகம் மேலே ஒரு முகம் தாங்கி சிம்ம வாகனத்தில் அருள்பாலிக்கின்றார். இப்படி விநாயகர் குறித்த சுவாரசியமான தகவல் இணையங்களில் வெளியாக இருப்பது பல இணையவாசிகளின் கவனத்தைப் பெற்றுள்ளது.
மேலும், இதனை பலரும் சமூக வலைதளத்தில் பகிர்ந்ததோடு பலரை வியப்பில் ஆழ்த்தியுள்ளது. ஏனென்றால் பார்வதியின் ரோமத்திலும் பார்வதியும் மூச்சிலும் பிறந்த விநாயகர் சிவனால் தலை வெட்டப்பட்டு பிறகு யானையின் தலையால் பொருத்தப்பட்டு கணபதி என்ற பெயரையும் பெற்று வழக்கத்தை விட மதுரை திருமங்கலம் பகுதியை சேர்ந்த ஒரு கோவிலில் நின்றபடி விநாயகர் காட்சி கொடுப்பது குறித்த தகவல் விநாயகரின் அற்புதத்தையும் மகிமையையும் வெளிக்காட்டுகிறது. அதோடு இந்த கோவிலை சுற்றியுள்ள பகுதிகளில் வசிக்கும் மாணவ மாணவிகள் தேர்விற்கு தயாராகுபவர்கள் என அனைவருமே நின்றபடி காட்சி கொடுக்கின்ற இந்த விநாயகரை தரிசித்து விட்டு வழிபட்ட பிறகு தங்களது தேர்வை எதிர்கொள் செல்வதாகவும் கூறப்படுகிறது.