இன்றைய சமூகத்தில் வயதில் பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை அனைவருமே பேமஸ் ஆக வேண்டும் என்று நினைத்து பல செயல்களை செய்து வருகின்றனர். அதற்கு ஏற்றது போல இன்றைய உலகில் உள்ள சமூக வலைதளங்களும் பெரிதும் உதவிகரமாக இருந்து வருகிறது. ஃபேமஸ் ஆக வேண்டும் என்று நினைப்பவர்கள் தங்களுக்கு தெரிந்த மற்றும் தங்களிடம் உள்ள திறமைகளை வீடியோவாக எடுத்து அதனை இணையதளங்களில் பதிவு செய்து வருகின்றனர். ஒரு பதிவு செய்யும் வீடியோக்களை பார்ப்பவர்களும் அந்த வீடியோக்களுக்கு லைக் செய்து அவர்களுக்கு தெரிந்தவர்களுக்கு பகிர்வு செய்கின்றனர்.
இதன் மூலம் அந்த வீடியோவில் இருப்பவர்கள் ஃபேமஸ் ஆகி விடுகின்றனர். சிலருக்கு டான்ஸ் ஆடுவது பாட்டு பாடுவது போன்ற திறமைகள் இருந்தால் அவர்கள் அவற்றை செய்து பேமஸ் ஆகின்றனர். மேலும் சிலர் அவர்களின் தினசரி வாழ்க்கையை வீடியோவாக பதிவு செய்து அவற்றையும் இணையதளங்களில் பதிவு செய்கின்றனர். சிலர் ஏதாவது கருத்துக்களை கூறுவது போன்ற வீடியோக்களை பதிவு செய்து வருகின்றனர். இதுபோன்று சமூகத்தில் பல்வேறு இடங்களில் நடக்கும் சம்பவங்களையும் தொடர்ச்சியாக கூறுவது போன்ற வீடியோக்களையும் பதிவு செய்வார்கள். இவரு தொடர்ந்து youtube சேனல் மற்றும் இன்ஸ்டாகிராம், பேஸ்புக் போன்ற இணையதளங்களில் பயனாளர்களின் எண்ணிக்கை தற்பொழுது அதிகரித்துக் கொண்டே வருகிறது.
இந்த இணையதள பக்கங்களின் மூலம் ஒரு சிலர் எந்தவித வேலைகளுக்கும் செல்லாமல் இதில் வீடியோக்களை பதிவிட்டு அதன் மூலம் வருமானம் ஈட்டும் அளவிற்கு முழு நேரமாக நேரத்தை இதிலேயே செலவழித்து வருகின்றனர். அந்த வகையில் குறிப்பாக டிடிஎஃப் வாசன் பைக் ஓட்டுவது போன்ற வீடியோக்களை எடுத்து அதிக அளவில் சப்ஸ்கிரைபர்களையும் பாலோ அவர்களையும் கொண்டுள்ளார். அவர் மட்டுமல்லாமல் அமலா ஷாஜி, மதன் கௌரி போன்ற பல youtuber இன்று பெருமளவில் பேமஸ் ஆகியுள்ளனர். என்னை தொடர்ந்து ஒரு பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் கூட அதிக அளவில் instagramயில் ரீல் செய்து அதிக லைக்குகளை பெற வேண்டும் என்ற மோகத்தில் இருந்து வருவதை நம்மால் பார்க்க முடிகிறது.
தனியாக சினிமா பாடல்களுக்கு ரீல்ஸ் செய்வது, தன்னுடன் சேர்ந்து படிக்கும் நண்பர்களுடன் பாடல் மற்றும் காமெடிகளுக்கு சூப்பராக ரிலீஸ் செய்து வருகின்றனர். இந்த நிலையில் சிலர் தங்களுக்கு உள்ள கட்டுப்பாட்டையும் மீறி பல ஆபத்தான இடங்களில் கூட நின்று ரீல் செய்து அவற்றை இணையத்தில் பதிவு செய்து அதிக அளவில் லைக் வாங்க வேண்டும் என்று இருந்து வருகின்றனர். அதிலும் குறிப்பாக பள்ளி மாணவர்கள் பேக்ரவுண்டில் மாஸ் சாங் ஒன்றினை போட்டுக்கொண்டு அதில் மது அருந்துவது மற்றும் சிகரெட் போன்ற தீய பழக்கங்களை மிகவும் மாஸ் என்று நினைத்துக் கொண்டு வீடியோவாக பதிவு செய்து இணையத்தில் வெளியிட்டு வருகின்றனர். இது போன்ற நிகழ்வுகளும் தற்பொழுது நடந்து வருகிறது.
இந்த நிலையில் தற்பொழுது வெஸ்ட் பெங்காலில் சாலையில் ஒரு பெண் மாசான பேக்ரவுண்ட் பாடலுக்கு கெத்தாக சிகரெட் பிடித்துக் கொண்டு நடந்து செல்வது போன்ற வீடியோவை இணையத்தில் பதிவு செய்துள்ளார். இந்த வீடியோ அனைவராலும் பார்க்கப்பட்டு அதிக லைக்குகளையும், ஷேரும் செய்யப்பட்டு வந்துள்ள நிலையில் அந்தப் பெண்ணின் வீட்டார் அதை பார்த்து கடுப்பான நிலையில் அப்பெண்ணை பெல்ட் வைத்து தரமாக அடித்த வீடியோவும் தற்பொழுது வெளியாகி வருகிறது. இது குறித்த வீடியோ தற்பொழுது இணையத்தில் வைரலாகி அனைவரின் கவனத்தையும் பெற்ற வருகிறது.