தமிழ்நாட்டில் பல அற்புதங்களும், மர்மங்களும் நிறைந்த கோவில்கள் நிறைந்த கோவில்கள் அதிகம் உள்ளன. அதில் சில கோவில்கள் இன்று மிகப்பெரிய அளவில் பராமரிக்கப்பட்டு அதிக அளவில் மக்கள் வந்து செல்லும் கோவிலாகவும் இருந்து வருகிறது. மேலும் சில கோவில்கள் வரலாற்று சான்று உடையதாகவும், மிகவும் சக்தி வாய்ந்ததாகவும் இருந்து வருகிறது. இந்த நிலையில் தமிழ் கடவுளான முருகப்பெருமானின் திருக்கோவில்கள் இல்லாத இடமே இல்லை என்று கூறும் அளவிற்கு தமிழ்நாட்டில் பல இடங்களில் முருகப் பெருமானின் திருக்கோவில்கள் இடம் பெற்றுள்ளது. இந்த வகையில் தற்பொழுது மற்றுமொரு வரலாற்று பின்னணி மற்றும் சக்தி வாய்ந்த அற்புதங்களை நிகழ்த்தியுள்ள கோவில் ஒன்று தமிழ்நாட்டில் அமைந்திருப்பதாக தெரிய வருகிறது. கோவில் குறித்த பழைய அதிசயங்கள் தற்போது தெரிய வருகிறது. அது குறித்து விரிவாக காணலாம்!!
தமிழ்நாட்டின் திருநெல்வேலி மாவட்டத்தில் கடையம் புறநகர் பகுதிக்கு அருகில் உள்ள ஒரு மிகப்பெரிய மலை தான் தோரணமலை!! இந்த மலையானது தென்காசி பகுதியில் இருந்து கடையம் நோக்கி செல்லும் வழியில் அமைந்துள்ளது. இந்த மலையானது நான் முன்னோர்கள் காலத்தில் தமிழர்களின் மருத்துவ சாலையாக விளங்கியதாகவும், முதல் முறையாக உலகில் கபால சிகிச்சை ஆனது இங்குதான் நடைபெற்றதாகவும் கூறப்படுகிறது. சிவபெருமான் மற்றும் பார்வதி தேவி ஆகியோரின் திருமணமானது இமயமலையில் நடக்கும் சமயத்தில் பல தேவர்கள் அதனை பார்ப்பதற்காக அங்கு கூறினார்களாம்!! இதனால் பூமியின் எடையானது ஒரு பக்கம் அதிகமாகவும் ஒரு பக்கம் தாழ்ந்த நிலையிலும் ஏற்பட்டுள்ளது.
அதனை சரி செய்வதற்காக சிவபெருமான் ஒருமுனை அகத்தியரை பூமியின் பெண் பகுதிக்கு அனுப்பியதாகவும் அங்கிருந்தே தனது திருமணத்தை பார்க்க முடியும் என்று உறுதி அளித்ததாகவும், அதனை நம்பி முனிவரும் தோரண மலைக்கு வந்ததாகவும் கூறப்படுகிறது. அதன் பிறகு அங்கு உள்ள முருகப்பெருமானிடம் தமிழ் மொழியை கற்று அகத்தியன் என்ற பெயரை பெற்றார் என்று புராணங்கள் கூறுகிறது. அப்போது தோரண மலையை சுற்றி அமைந்திருக்கும் மூலிகை செடிகளை கண்டு வியந்து அங்கே தங்கி தவம் புரிந்து வந்ததோடு மட்டுமல்லாமல் சித்த மருத்துவத்தில் ஈடுபட தொடங்கி தனது சீடர்களுக்கும் அதைப் பற்றி கற்றுக் கொடுக்க ஆரம்பித்தார்.
இவரிடம் மருத்துவத்தை பயில்வதற்கு என்று உலகின் பல்வேறு இடங்களில் இருந்து சீரகம் வர ஆரம்பித்தனர். அப்படிப்பட்ட சமயத்தில் காசி வர்மன் என்ற மன்னனுக்கு தீராத தலைவலி இருப்பதாகவும், அதற்காக சிகிச்சை எடுத்துச் சொல்வதற்காக வந்த பொழுது அவர் கபாலத்தில் இருக்கும் பிரச்சனையை அறிந்து கொண்டு எந்த முறையாக இந்த இடத்தில் தான் கபால சிகிச்சை அளிப்பதாகவும் கூறப்படுகிறது. இதற்கு உறுதுணையாக இருந்த ராம தேவர் அகத்தியரிடம் பாராட்டுக்களை பெற்று இவர்கள் இருவரும் முருக பெருமானே விக்ரகத்தை வைத்து வழிபட்டு வந்துள்ளனர். ஆனால் இவரின் மறைவிற்குப் பிறகு முருகப்பெருமானின் வழிபாடு குறைந்துவிட்டது.
அதன் தொடர்ச்சியாக பல ஆண்டுகளுக்குப் பிறகு பெருமாள் என்ற பக்தனின் கனவில் தோன்றிய முருகன் சுனையும் இருக்கும் விக்ரகத்தை எடுத்து வழிபடுமாறு கூறியதை தொடர்ந்து முருகப்பெருமானுக்கு கோவில் எழுப்பப்பட்டது. இதனை தொடர்ந்து தலைமுறை தலைமுறையாக இந்த கோவிலிலே தற்பொழுது பராமரித்து வருகின்றனர். வட்டாரத்தில் இருக்கும் மக்கள் மட்டும் இன்றி உலகின் பல்வேறு இடங்களில் இருந்து கூட இந்த கோவிலுக்கு அதிக அளவில் பக்தர்கள் அவ்வபோது என்று சொல்கின்றனர். நீண்ட நாட்களாக ஏதேனும் நோயினால் அவதிப்பட்டு வருபவர்கள் இந்த கோவிலுக்கு வந்து வழிபட்டு சென்றால் அவர்களுக்கு எப்பேர்பட்ட நோயாக இருந்தாலும் சரியாகிவிடும் என்பது அசைக்க முடியாத நம்பிக்கையாக உள்ளது. இத்தகைய மருத்துவ குணம் நிறைந்த இடத்தில் அமைந்திருக்கும் முருகப்பெருமானை இன்னும் தரிசனம் செய்யாதவர்கள் விரைவில் சென்று வாருங்கள்!!