வெளிநாடுகளில் இருந்து தவறான முறையில் நிதி பெறுவது என குற்ற சம்பவங்களில் ஈடுபடுபவர்களை கண்காணித்து என்ஐஏ சோதனை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் நாடு முழுவதும் பல இடங்களில் சோதனை மேற்கொண்டு குற்றவாளிகளை கைது செய்து வருகிறது. இந்தநிலையில் தமிழ்நாடு முழுவதும் நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள் வீட்டில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். வெளிநாடுகளில் இருந்து நிதிபெற்றது தொடர்பாக சோதனை நடத்தி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
சீமானின் நாம் தமிழர் கட்சியில் சீமானுக்கு நெருங்கிய நண்பரும் பிரபல யூடிப்பருமான சாட்டை துரைமுருகன் தொடர்புடைய வீடு மற்றும் அலுவலகங்களில் காலையில் இருந்து சோதனை புலனாய்வு அதிகாரிகள் சோதனை செய்து வருகின்றனர். அதே போல் கோவை மாவட்டத்தில் உள்ள இரண்டு நாம் தமிழர் கட்சி நிர்வாகி வீட்டில் சோதனை செய்து வருகின்றனர். மேலும், சென்னை, நெல்லை, மதுரை, சிவகங்கை உள்ளிட்ட மாவட்டங்களில் 50-க்கும் மேற்பட்ட தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். இந்த சோதனை தமிழகத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
வெளிநாட்டில் இருந்து பணம் பெற்றதன் அடிப்படையில் சோதனை செய்வதாக கூறப்படுகிறது. மேலும், வெளிநாட்டில் தடை செய்யப்பட்ட அமைப்புகளுடன் ஏதாவது தொடர்பில் இருக்கின்றனர் என்ற கோணத்தில் தேசிய புலனாய்வு அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலின் படி சோதனை செய்து வருகின்றனர். இந்த சோதனையில் அவருக்கான வங்கி கணக்கில் பண பரிவர்த்தனை தொடர்பாக முகாந்திரம் இருந்தால் அவர்களுக்கு சம்மன் அனுப்பி நேரில் விசாரிக்க உள்ளதாக அதிகாரிகளால் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், சுமார் இரண்டு மணிநேரம் சோதனை செய்ததன் பிறகு திருச்சியில் உள்ள நாம் தமிழர் கட்சி நிர்வாகி சாட்டை துரைமுருகன் வீட்டில் NIA அதிகாரிகள் சோதனை செய்ததில் தடை செய்யப்பட்ட இயக்கங்களுடன் தொடர்பில் இருந்த புகாரில் என்ஐஏ அதிகாரிகள் விசாரணைக்கு நேரில் ஆஜராக சம்மன் அனுப்பிள்ளனர். அதேபோல, நாம் தமிழர் கட்சி நிர்வாகியுமான இடும்பாவனம் கார்த்திக்கிற்கு என்ஐஏ சம்மன் அனுப்பியுள்ளதால் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. முன்னதாக, வெளிநாடு மற்றும் இலங்கையில் இருந்து பணம் பெற்று வந்ததாக நாம் தமிழர் கட்சி மீது ஒரு விமர்சனம் வந்தது.
நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வருவதால் மாநில முதலமைச்சர்கள் ஊழல் செய்த வழக்கில் கைது செய்து வரும் நிலையில், தற்போது தமிழகத்தில் நாம் தமிழர் கட்சி மீது என்ஐஏ அதிகாரிகள் சம்மன் அனுப்பப்பட்டு உள்ளதால் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நாடாளுமன்ற தேர்தலிலும் சீமான் தனித்து போட்டியிடுவதாகவும் முதல் கட்சியாக வேட்பாளரை அறிவித்தது என்பது குறிப்பிடத்தக்கது. இது தொடர்பாக இணையத்தில் தமிழகத்தில் இருக்கும் திறமையான இளைஞர்களை தேர்வு செய்து அவர்களை மூளை சலவை செய்து வெளிநாட்டு தீயசக்திகளுடன் தொடர்பை ஏற்படுத்துகிறது சீமான் கட்சி. முதலில் NIA சீமானை விசாரிக்க வேண்டும் அல்லது அவரை மருத்துவமனையில் சேர்க்க வேண்டும் என கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர். இது தொடர்பாக சீமான் என்ன விளக்கம் கொடுக்கிறார் என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.