24 special

தேர்தல் டியூட்டி போடுவீங்கள அப்ப வச்சுக்கிறோம் கச்சேரியை...! ஆசிரியர்கள் போட்ட போடு...!

mk stalin
mk stalin

தமிழகத்தில் கடந்த ஆட்சியான அதிமுக ஆட்சி நிகழ்ந்த பொழுது சமூகத்தில் ஏற்பட்ட சில சர்ச்சைகளுக்கு ஆசிரியர்கள் தரப்பிலிருந்தும் நடிகர்கள் தரப்பில் இருந்தும் பல கண்டனங்கள் முன்வைக்கப்பட்டது. அதாவது எதிர்க்கட்சியாக திமுக இருந்த பொழுதும் அதற்கு ஆதரவான கருத்துக்களை ஆசிரியர்கள் மற்றும் நடிகர்கள் தெரிவித்து வந்தனர் அது மட்டும் அல்லாமல் ஆசிரியர்கள் சங்கம் பெரும்பாலும் திமுகவிற்கு சாதகமாக செயல்பட்டு வந்தனர் என அரசியல் பார்வையாளர்களே வெளிப்படையாக கூறும் அளவிற்கு  ஆசிரியர்கள் செயல்பாடுகள் இருந்தது. 


அதற்கேற்றார் போல் ஆசிரியர் சங்கத்தினர் அனைவரையும் திருப்திப்படுத்தும் வகையில் அப்போதைய எதிர்க்கட்சி திமுக தனது தேர்தல் வாக்குறுதியில் ஆசிரியர்களுக்கான பல நலத்திட்டங்களை வாக்குறுதியாக அளித்தது அதாவது பள்ளி கல்வி துறையின் கீழ் பகுதி நேர ஆசிரியர்களாக பணியாற்றும் உடற்பயிற்சி, ஓவியம், தையல் போன்ற ஆசிரியர்களின் பணி நிரந்தரம் செய்யப்படும் என்றும் கல்லூரி அளவில் பணியாற்றும் பட்டதாரி ஆசிரியர்களான பகுதி நேர ஆசிரியர்களும் நிரந்தரம் செய்யப்படுவார்கள் என்னும் சில வாக்குறுதிகளை திமுக அளித்திருந்தது. அந்த வாக்குறுதிகளை நம்பி ஆசிரியர்களின் முழு வாக்கு வங்கியையும் திமுக பெற்றது என கருத்துக்கணிப்பு நிலவரங்கள் கூறுகின்றன. ஆனால் திமுக ஆட்சி அமைத்து கிட்டத்தட்ட  3 வருடங்கள் ஆகியும் ஆசிரியர்களுக்கு கொடுத்த தேர்தல் வாக்குறுதி மட்டுமல்ல திமுகவால் கொடுக்கப்பட்ட வாக்குறுதிகளில் பெரும்பாலானவை இன்னும் நிறைவேற்றப்படாமல் நிலுவையில் இருந்து விமர்சனங்களை பெற்று வருகிறது. இந்த காரணத்தினாலே தற்போது திமுகவிற்கு எதிரான மற்றும் பின்னடைவை ஏற்படுத்தும் கருத்துக்கள் மக்கள் மத்தியில் நிலவுகிறது என்ற தகவலும் கிடைத்துள்ளது. 

இதன் காரணமாக ஆசிரியர்கள் தரப்பில் அவ்வப்போது போராட்டங்கள் நடத்தப்பட்டது உண்ணாவிரத போராட்டங்களும் நடத்தப்பட்டு கடந்த மாதத்தில் தீவிரமடைந்தது அதற்கு பிறகு அமைச்சர்கள் மறுபடியும் வாக்குறுதி கொடுக்க அதையும் நிறைவேற்றாமல் காலம் தாழ்த்தி வருவதாக கொந்தளித்த ஆசிரியர்கள் தரப்பு தற்போது உண்ணாவிரத போராட்டத்தை நடத்தியுள்ளது. சென்னை நுங்கம்பாக்கம் கல்லூரி சாலையில் அமைந்துள்ள DPI வளாகத்தில், பள்ளி கல்வித்துறையில் அனைத்து அலுவலகங்களும் இருக்கும் இடத்தில் ஆசிரியர்கள் உண்ணாத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அதுவும் நேற்று தினத்தில் நடைபெற்ற உண்ணாவிரத போராட்டத்தில் இடைநிலை பதவி மூப்பு ஆசிரியர்கள் இயக்கம், அரசு உயர்நிலை மேல்நிலைப் பள்ளிகளில் பணியாற்றும் பகுதிநேர சிறப்பாசிரியர்களின் இயக்கம், தமிழக பகுதிநேர சிறப்பாசிரியர் சங்கம் மற்றும் ஒருங்கிணைந்த சிறப்பாசிரியர்கள் சங்கம் போன்ற நான்கு ஆசிரியர்கள் சங்கமும் ஒன்றிணைந்து இந்த போராட்டத்தில் ஈடுபட்டது டிபிஐ வளாகத்தை போராட்ட களமாக மாற்றியது. 

இந்த உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்ட ஆசிரியர்கள் அனைவரும் தங்களது குடும்பத்தினரோடு ஈடுபட்டனர். மேலும் சம வேலைக்கு சம ஊதியம், பகுதிநேர சிறப்பாசிரியர்களை பணி நிரந்தரம் செய்தல், பதவி மூப்பு அடிப்படையில் நியமனம் மற்றும் டெட் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு மற்றுமொரு போட்டி தேர்வு கூடாது ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த போராட்டம் நடைபெற்றுள்ளது. இதில் மிகவும் கவனிக்கப்பட வேண்டியது என்னவென்றால்!  தற்போது ஆசிரியர்கள் அனைவரும் கோரிக்கையாக முன்வைத்துள்ள நிபந்தனைகள் அனைத்துமே வாக்குறுதிகளாக திமுக அளித்தது அதை நிறைவேற்றி இருந்தாலே இந்த போராட்டத்தில் ஆசிரியர்கள் இறங்கி இருக்க வேண்டிய அவசியமே வந்திருக்காது என தகவல்கள் தெரிவிக்கின்றன.இதனால் கோபமடைந்து போராட்டத்தில் ஈடுபட்டுக் கொண்டிருந்த ஆசிரியர்களிடம் கேட்ட பொழுது தேர்தல் நேரத்தில் எங்களிடம் தான் தேர்தல் பணிகளை கொடுப்பார்கள் அப்போது நாங்கள் பார்த்துக் கொள்கிறோம் என்றும் தெரிவித்துள்ளனர். இதன்மூலம் திமுக அரசுக்கு எதிராக ஒரு பெரும் வாக்குவங்கி திரும்பியுள்ளது என விமர்சனங்கள் எழுந்துள்ளது..