
தமிழகத்தின் புகழ்பெற்ற அறுபடை வீடுகளில் முதலாவதாக போற்றப்படும் திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில், ஆண்டுதோறும் நடைபெறும் கார்த்திகை தீபத்தை எங்கு ஏற்ற வேண்டும் என்பது குறித்த விவகாரம் இந்த ஆண்டு பெரிய விவாதத்தை ஏற்படுத்தியது.தமிழகத்தில் இந்து கோவில்கள் மட்டுமே அரசின் கட்டுப்பாட்டில் உள்ளது. மற்ற மதம் சர்ச்சுகள் மற்றும் மசூதிகள் அவரவர்கள் கட்டுப்பாட்டில் உள்ளது. தமிழக கோவில்களில் வரும் வருமானம் தமிழக அரசுக்கு முதுகெலும்பாக உள்ளது.சமூக நீதி பேசும் முக ஸ்டாலின் கிருஸ்த்துவ பண்டிகை,இஸ்லாமிய பண்டிகை என அனைத்துக்கும் முதல் ஆளாக வந்து வாழ்த்துகள் சொல்வர் ஆனால் இந்துபி பண்டிகைக்கு வாழ்த்துக்கள் சொல்ல மாட்டார். இவரிடம் எப்படி இந்துக்கள் நியாயம் கேட்க முடியும் என கேட்க ஆரம்பித்துளார்கள்.
மேலும் திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத்தூணில் இந்தாண்டு கார்த்திகை தீபம் ஏற்ற வேண்டும் என்று மதுரை உயர்நீதிமன்றம் மூன்று முறை உத்தரவிட்டும், அது நடைமுறைப்படாததை தொடர்ந்து மாநில அரசுக்கு எதிரான அதிருப்தி மாநிலம் முழுவதும் அதிகரிக்க தொடங்கியுள்ளது. தீபம் ஏற்ற வேண்டுமெனக் கோரி பல்வேறு இந்து அமைப்புகளும், சமூக மற்றும் குடியிருப்போர் சங்கங்களும் மதுரை கலெக்டர் அலுவலகத்தில் மனுக்கள் அளித்து வருகின்றன.
உயர்நீதிமன்ற தீர்ப்பை செயல்படுத்தாமல் இருக்கிறது எனக் குற்றம் சாட்டிய அமைப்புகள், மாநில அரசு தற்போது உத்தரவை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் அப்பீல் சென்றிருப்பதையே மேலும் திமுக அரசு எதிர்ப்பை சம்பாத்தித்துள்ளது. மன்னர் காலத்திலிருந்தே மலை உச்சியில் தீபம் ஏற்றப்பட்ட பாரம்பரியம் நீண்ட கால வரலாற்றைக் கொண்டது என்று தமிழ்நாடு பிராமணர் சங்கம் தனது மனுவில் தெரிவித்துள்ளது. சமய நல்லிணக்கம் காக்கப்பட வேண்டும்; நீதிமன்ற தீர்ப்பை மாவட்ட நிர்வாகம் நடைமுறைப்படுத்த வேண்டும் எனவும் அவர்கள் மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை வைத்தனர்.
இதற்கு இணையாக தென்னிந்திய பார்வர்ட் பிளாக், வைகைநதி மக்கள் இயக்கம், சுதேசி சமூகநல பண்பாட்டு இயக்கம், வெள்ளாளர் முன்னேற்ற சங்கம், தொழிலாளர் முன்னேற்ற சங்கங்கள், யாதவ மகாசபை, சைவ வேளாளர் சங்கம், பிள்ளைமார்-முதலியார் சங்கங்கள் உட்பட பல்வேறு சமூக மற்றும் கலாசார அமைப்புகள் மனுக்கள் அளித்தன. தீபத்தை மறுப்பது இந்து சடங்குகளைக் கேள்விக்குறியாக்குகிறது, பாரம்பரியத்திற்கு விரோதமாக உள்ளது என்று பல அமைப்புகள் தெரிவித்தன.
மதுரை ஹார்விப்பட்டி ஆன்மீக இறையன்பர்கள் குழு, தீபம் ஏற்ற கோரிக்கையை வலியுறுத்தி கையெழுத்து இயக்கத்தையும் துவக்கியுள்ளது. மனு, கையெழுத்து இயக்கம், ஆர்ப்பாட்டம், உண்ணாவிரதம் என அரசு மீது அழுத்தம் பல்வேறு வடிவங்களில் அதிகரித்து வருகிறது.சில அமைப்புகள், உயர்நீதிமன்ற தீர்ப்பை வழங்கிய நீதிபதியைப் பற்றிய தனிப்பட்ட மற்றும் ஜாதி சார்ந்த விமர்சனங்கள் நடந்ததாக குற்றம் சாட்டி, இது ஏற்றுக்கொள்ள முடியாதது என்று தெரிவித்தன. சட்டத்தை மதித்து தீர்ப்பை நடைமுறைப்படுத்த வேண்டும் என்பதே மக்கள் எதிர்பார்ப்பு எனவும் கூறினர்.
திருப்பரங்குன்றம் மலை உச்சியில் தீபம் ஏற்றப்பட்டால் மதுரை, புறநகர் கிராமங்கள் என பல இடங்களிலும் அது தென்படும்; முருகனின் அருள் அனைவருக்கும் கிடைக்க வேண்டும் என்ற நம்பிக்கையுடன் தீபம் ஏற்ற அனுமதி வழங்கப்பட வேண்டும் என மனுதாரர்கள் வலியுறுத்துகின்றனர்.ஒரு தரப்பு, அரசின் முடிவு மதச்சார்பற்ற நிலைப்பாடு அல்ல, அரசியல் லாப நோக்கமென குற்றம் சாட்ட, அரசு இந்த விவகாரத்தில் எடுக்கும் அடுத்தடுத்த நடவடிக்கைகளை தமிழகம் முழுவதும் உன்னிப்பாக கவனிக்கப்படுகிறது. அணைத்து இந்து சமூக அமைப்புகளும் திமுகவுக்கு எதிராக நகர ஆரம்பித்துள்ளார்கள், இதே போக்கு திமுக சென்றால் இந்து சமுதாயத்திற்கான அங்கீகாரம் போய்விடும் என கருதுகிறார்கள்.
