24 special

சர்வே கல் என வாயை விட்ட கனிமொழி..! அடுத்த நொடி கையில் ஆதாரங்களுடன் போட்ட போடு... மிரண்ட திமுக

KANIMOZHI
KANIMOZHI

திருப்பரங்குன்றம் மலை உச்சியில், ஆயிரம் ஆண்டுகளாக ஒளி பரப்பி வந்த ஒரு தீபத்தின் வரலாறு… இன்று மீண்டும் பேசத் தொடங்குகிறது…


திருப்பரங்குன்றம் — முருகனின் முதல் படை, தமிழரின் ஆன்மிக மூச்சு, முருக பக்தர்களின்  இதயத்தில் உயர்ந்து நிற்கும் அந்த மலை… அதன் உச்சியில் எழுந்திருந்த தீபத்தூண்… ஒரு சாதாரண கல் அல்ல… ஒரு எல்லைக்கல்லும் இல்லை… இது நம் சமுதாயத்தின் ஆயிரம் ஆண்டுச் சாட்சி.ஆகும் 

உத்தர காமிகம், உத்தரகாரணாகமம் போன்ற ஆகம நூல்களில் கூ  கோவில், கோபுரம், வீடு, ஊர் மையப்பகுதி, மலை உச்சிஇவையெல்லாம் தீபம் ஏற்ற வேண்டிய இடங்கள் என்று தெளிவாக சொல்லப்பட்டிருக்கிறது. இதன் அடிப்படையில்தான் திருப்பரங்குன்றம் மலை உச்சியில் இந்த தூண் அமைக்கப்பட்டது. பழங்காலத்தில், உலகப் போர்கள் தொடங்குவதற்கு முன்னரிலிருந்து தீப தூணில்  தீபம் ஒளிர்ந்துள்ளது. 

ஆனால் இன்று ? சிலர், செவி வழிக் கதைகளை வைத்து, “இது தீபத்தூண் இல்லை… ஆங்கிலேயர் காலத்து நில அளவை கல்…” என்று சொல்ல முயல்கிறார்கள். குறிப்பாக எம்.பி கனிமொழியம் சர்வே கல் என குறிப்பிட்டிருந்தார். இது மேலும் சர்ச்சையை ஏற்படுத்தியது. கனிமொழி இந்துமதத்தை எப்படி விமர்சிப்பர் என்ற அனைவரும் அறிந்ததே. திமுகவுக்கு இந்து மதத்தை தவிர வேறு எந்த மதமும் தெரியாது.

இந்த நிலையில் 1981ல் தமிழ்நாடு அரசின் தொல்லியல் துறை வெளியிட்ட ‘குன்றத்து கோயில்கள்’ நூல்… 129ஆம் பக்கத்தில் மிகவும் தெளிவாக எழுதப்பட்டுள்ளது—“இது நாயக்கர் காலத்து தீபத்தூண்… கார்த்திகை தோறும் ஊர் மக்கள் விளக்கேற்றி வந்தனர்.”இதன் மீது கல்வெட்டும் இருக்கிறது. இதைவிட பெரிய அரசு அங்கீகாரம் வேறு என்ன வேண்டும்?

ஆனால் சர்ச்சை இங்கேதான் நின்றுவிடவில்லை.மலை உச்சியில் தீபம் ஏற்ற அனுமதி குறித்து வழக்கு நீதிமன்றம் வரை சென்றது. மதுரை உயர்நீதிமன்ற கிளை தெளிவான உத்தரவு கொடுத்தது கார்த்திகை நாளில் தீபத்தூணில் தீபம் ஏற்றலாம்.”ஆனால் உத்தரவை செயல்படுத்த மறுத்தது அறநிலையத்துறை.நீதிமன்றம் மறுநாள் கூட அனுமதி தந்தபோதும் அரசுப் பக்கம் தயக்கம் காட்டியது. அந்த தயக்கத்தை சிலர் தவறாக எடுத்துக்கொண்டு “மறுநாள் தீபம் ஏற்ற நீதிமன்றத்திற்கே உள்நோக்கம் இருக்கிறது” என்று பேசினர்.ஆகம விதி என உருட்ட ஆரம்பித்தது திமுக

ஆனால் கார்த்திகை மாதம் முழுவதும் தீபம் ஏற்றலாம். கார்த்திகை நட்சத்திரம் சேர்ந்த நாட்களில் ஏற்றலாம். தீபம் ஏற்றுவதற்கு யார் வேண்டுமானாலும் உரிமையிருக்கிறது. இது ஆகமத்துக்கு எதிரானதல்லஆகமமே இதற்குத் தகுதிச் சான்று. ஆகமத்தில் இன்னும் ஒரு வரி இருக்கு… :

“தீபம் ஏற்றுபவரை ஊரார் முன்பு கோவில் கவுரவிக்க வேண்டும்.”இதுதான் இந்த பாரம்பரியத்தின் பெருமை.

இன்று நாம் பார்க்கும் விவாதங்கள்… சந்தேகங்கள்… அரசியல் விளக்கங்கள்… இவை எல்லாம் சமீபத்தியவை. ஆனால் இந்த ஒளியின் பாரம்பரியம்?

அது நூற்றாண்டுகளுக்கு முன்பே எழுதப்பட்டு, கல்லிலும், கலாசாரத்திலும் பதியப்பட்டு இருக்கிறது.தற்போதும்  பல இடங்களில், குன்றத்தூர் போன்ற ஊர்களில் இன்னும் தீபத்தூண்களில் தீபம் ஏற்றும் பாரம்பரியம் தொடர்கிறது.அது ஒரு வழக்கம் மட்டுமல்ல…ஒரு  அடையாளம்.ஒரு ஆன்மிக மரபு.ஒரு தலைமுறையின் நம்பிக்கை ஆகும். அதை அழிக்க முயலும் குழப்பங்களுக்கும், தவறான கருத்துகளுக்கும் முன்ஆகமமும், தொல்லியலும், வரலாறும்—ஒற்றை வார்த்தையில் உண்மையை சொல்கின்றன:“இந்த தூண் தீபத்தூண்… இதுவே பரம்பரை… இதுவே நம் பாரம்பரியம். என தகவல்கள் தெரிவிக்கிறது.