தமிழகத்தில் மீண்டும் ஆட்சி அமைத்த திமுகவில் இரண்டு நியமனங்கள் பெரிய முக்கியத்துவம் வாய்ந்ததாக அமைந்தது. ஒன்று தமிழக ஆட்சியின் உட்சபட்ச அதிகாரமான தலைமை செயலாளர் பொறுப்பிற்கு இறையன்பு IAS தேர்வு செய்யபட்டது, மற்றொன்று தமிழகத்தில் சட்டம் ஒழுங்கை கட்டி காப்பாற்ற வேண்டிய முக்கிய பொறுப்பான சட்டம் ஒழுங்கு டிஜிபியாக சைலேந்திர பாபு IPS தேர்வு செய்யப்பட்டது.
இந்த இரண்டு பொறுப்புகளிலும் தமிழர்கள் இருவரும் இடம்பெற்றது தமிழக அரசியலின் புதிய தொடக்கம் என்று கூறப்பட்டது, இப்படி இரு பெரும் முக்கிய பொறுப்புகளில் தற்போது சட்டம் ஒழுங்கு டிஜிபி சைலேந்திர பாபுவின் மீது ஒரு சில விமர்சனங்கள் வைக்கப்பட்டு வருகின்றன.
அரசு அதிகாரிகள் ஆளும் அரசின் அதிகாரத்தை மீறி செயல்பட முடியாது என்பது அரசியல் மற்றும் ஆட்சியில் இருந்த அனைவருக்கும் தெரிந்த விஷயம், ஆளும் கட்சியை சேர்ந்தவர்கள் மீது எதிர்க்கட்சியை சேர்ந்தவர்கள் புகார் கொடுத்தால் நடவடிக்கை எடுக்காத காவல்துறை, எதிர்கட்சியை சேர்ந்தவர்கள் மீது ஆளும் கட்சி புகார் கொடுத்தால் உடனடியாக நடவடிக்கை எடுக்கும் இது அனைத்து மாநிலங்களிலும் நடைபெறுவது வழக்கம்.
ஆனால் தமிழகத்தில் தற்போது சமூக வலைத்தளங்களில் அவதூறு பரப்பும் யூடுப்பர்ஸ் மீது நடவடிக்கை எடுக்க முடியாத அளவிற்கு தமிழக டிஜிபியின் கைகள் கட்டப்பட்டு இருக்கிறதா என்ற சந்தேகம் வலுத்து வருகிறது, பிரதமர் மோடி குறித்து போலியாகவும் அவதூறாகவும் கருத்து பதிவு செய்த துணை நடிகை ஷர்மிளா மீது பல்வேறு புகார்கள் கொடுக்கப்பட்டது, அந்த புகார்களில் முகாந்திரம் இருந்த காரணத்தால் கைது செய்யலாம் என காவல்துறை களத்தில் இறங்கிய போது சிலரின் தலையீடு காரணமாக அது தள்ளி போனதாக கூறப்படுகிறது.
இவற்றை எல்லாம் தாண்டி எப்போதும் அவதூறுகளை மட்டும் பரப்பும் சிலர் குறிப்பாக தற்போது சிதம்பரம் நடராஜர் குறித்து அவதூறாக பேசிய யூடுப்பர் மீது நடவடிக்கை எடுக்க கோரி பல்வேறு புகார்கள் குவிந்து வரும் சூழலில் அந்த நபர் மீது நடவடிக்கை எடுக்க முடியாமல் காவல்துறை திணறி வருவதாக குற்றசாட்டு எழுந்துள்ளது.
மத மோதல்களை உண்டாக்வண்ணம் வெளிப்படையாக பேசிய நபரை சட்டத்தின் முன்பு நிறுத்தவில்லை என்றால் இனி தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு எப்படி பாதுகாக்கபடும் என்ற கேள்வி அதிகரித்து காணப்படுகிறது, கடந்த அதிமுக ஆட்சியில் கறுப்பர் கூட்டம் என்ற அமைப்பை சேர்ந்த ஒருவர் இதே போன்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டார்.
அதே அதிமுக ஆட்சியில் பெரியார் சிலைக்கு காவி சாயம் பூசியதாக கைது செய்யப்பட்ட இளைஞர் ஒருவர் மீது தேசிய பாதுகாப்பு சட்டத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார் இப்படி கடந்த அதிமுக ஆட்சியில் புகார் எழுந்த நபர்கள் மீது இரண்டு தரப்பிலும் நடவடிக்கை எடுக்கப்பட்டது, ஆனால் திமுக ஆட்சியில் கிஷோர் கே.சுவாமி, மாரிதாஸ் சாட்டை துரைமுருகன்., கல்யாண் ராமன் என எதிர் சித்தாந்தம் கொண்டவர்கள் மீது மட்டும் நடவடிக்கை எடுப்பதாகவும்.
சமூக வலைத்தளங்களில் அவதூறாக பேசிவரும் u2brutus, சுந்தரவள்ளி, ஷர்மிளா இன்னும் பிற நபர்கள் மீது திமுக அரசு நடவடிக்கை எடுக்கதாது தமிழகத்தில் ஆட்சியில் இருக்கும் திமுக அரசை தாண்டி சட்டம் ஒழுங்கு காவல்துறை தலைவராக இருக்கும் சைலேந்திர பாபு மீது விமர்சனங்கள் அதிகரித்து வருகின்றன.
டிஜிபியாக பொறுப்பேற்றது முதல் சமூக வலைத்தளங்களில் அவதூறு பரப்புவோர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என சைலேந்திர பாபு தெரிவித்தாரே தவிர செயலில் செய்தாரா? இந்து கடவுள் நடராஜரை மோசமாக விமர்சனம் செய்த மைனர் என்பவர் மீது இது வரை வழக்கு பதிவு செய்து கைது செய்யாதது ஏன் என்ற கேள்வி எழுந்துள்ளது.
தமிழகத்தை சேர்ந்த மூத்த பத்திரிகையாளர் மணி போன்றோர் கூட தமிழகத்தில் திமுக அரசிற்கு எதிராக மக்கள் அதிருப்தி அதிகரிக்க தொடங்கியுள்ளது என எச்சரிக்கை மணி அடித்த நிலையில், இனியும் மத மோதல்களை தூண்டும் விதமாக கருத்து பதிவு செய்யும் நபர்களை கைது செய்யவில்லை என்றால் காவல்துறை மீதும் ஆளும் அரசாங்கம் மீதும் மக்களுக்கு நம்பிக்கையற்ற நிலை உண்டாகும் என்பதே தமிழக அரசியலை உன்னிப்பாக கவனித்து வரும் நபர்களின் கருத்தாகும்.