24 special

தமிழகத்தில் அடுத்தடுத்து நிகழ்ந்த சம்பவம் எங்கே சூர்யா என வெறிகொண்டு தேடும் பாஜகவினர்..!

actor surya
actor surya

தமிழகத்தில் ஜெயராஜ் பெனிக்ஸ் லாக்அப் மரணம் குறித்து கருத்து தெரிவித்த நடுநிலையாளர்கள், சமூக ஆர்வலர்கள் நடிகர்கள் எங்கே என தற்போது இணையத்தளத்தில் பாஜகவினர் விமர்சனம் செய்தி வருகின்றனர்.


திருவண்ணாமலை : தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டுப்போய்விட்டதாக எதிர்க்கட்சிகள் விமர்சித்து வரும் வேலையில் அடுத்தடுத்து நிகழும் காவல்நிலைய மரணங்கள் தமிகத்தில் ஒருவித பயத்தை உண்டாகியிருக்கிறது. தற்போதைய ஆட்சியில் சாதாரண பாமரனின் உயிர் மற்றும் உடமைக்கு பாதுகாப்பு இல்லை என்கிற அச்சம் நிலவிவருவதாக அரசியல் கட்சியினர் குற்றசாட்டை எழுப்பிவருகின்றனர்.

இந்நிலையில் இந்த ஒரே மாதத்தில் இரண்டாவது முறையாக லாக்கப் டெத் நடந்துள்ளது ஆட்சியாளர்கள் மீது அவ நம்பிக்கையை அதிகரித்துள்ளதாக மக்கள் குறைகூறிவருகின்றனர். இதனிடையே திருவண்ணாமலை மாவட்டம் தண்டராம்பட்டு பகுதி தட்டாரணையை சேர்ந்த தங்கமணி என்பவர் கள்ளச்சாராயம் காய்ச்சிய வழக்கில்  போலீசாரால் கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலில் அடைக்கப்பட்டிருந்தார்.

இந்த சூழலில் காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் திடீரென மரணமடைந்துவிட்டதாக போலீசார் கூறியுள்ளனர். இது அந்த பகுதியில் பெரும் பரபரப்பை கிளப்பியுள்ளது. இதுகுறித்து திருமாவளவன் தனது ட்விட்டரில் "திருவண்ணாமலை மாவட்டம் தண்டராம்பட்டு அருகே தட்டரணையைச் சார்ந்த தங்கமணி, நீதித்துறைக் காவலில் கிளைச் சிறையிலிருந்த சூழலில் பலியாகியுள்ளார்.

கள்ளச்சாராய விற்பனை தொடர்பாக கைதுசெய்யப்பட்ட அவர் காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உடனே உயிரிழந்திருக்கிறார். இது அதிர்ச்சி..அளிக்கிறது. அண்மையில்  சென்னை விக்னேஷ் காவல்துறையின் விசாரணையில் பலியான துயரத்தைத் தொடர்ந்து திருவண்ணாமலையில் இந்த சாவு கவலையளிக்கிறது. 

தமிழக அரசு, இதனை 'சிறப்புப் புலனாய்வு விசாரணைக்கு' உட்படுத்த வேண்டுமென விசிக சார்பில் வலியுறுத்துகிறோம். காவல்துறை மற்றும்  நீதித்துறை..கட்டுப்பாட்டில் இத்தகைய சாவுகள் இனி நிகழாமல் தடுத்திட அரசு உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். பலியான தங்கமணியின் குடும்பத்தினருக்கு உரிய இழப்பீடும் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலைவாய்ப்பும் வழங்கிட வேண்டுமென்றும் தமிழக அரசைக் கேட்டுக் கொள்கிறோம்" என பதிவிட்டுள்ளார்.

சாத்தான்குளம் ஜெயராஜ் பெலிக்ஸ் மரணத்தில் ஐநாசபை காதுகளுக்கு எட்டும்வரை கதறிய நடிகர்களோ அரசியல்வாதிகளோ தற்போதைய திமுக அடுத்தடுத்து நிகழும் லாக்கப் மரணங்களை பற்றி வாய்திறப்பதில்லை எனவும் அவர்களுக்கு பக்கபலமாக இருந்து  விஷயங்களை தமிழக மீடியாக்கள் வெளியில்கசியவிடாமல் பார்த்துக்கொள்வதாகவும் பிஜேபியினர் முணுமுணுத்து வருகின்றனர்.

மேலும் ஜெயராஜ் பெலிக்ஸ் மரணத்தில் அறிக்கை வெளியிட்ட சூர்யா இன்னும் பிற நடிகர்கள் தற்போது கள்ளமௌனம் சாதிப்பதாக நடுநிலையாளர்கள் விமர்சித்து வருகின்றனர்.