தமிழ் மற்றும் தெலுங்கு மொழி திரைப்படங்களில் நடித்து வரும் நிவேதா பெத்துராஜ் 2016 ஆம் ஆண்டு வெளியான ஒரு நாள் கூத்து திரைப்படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானவர். தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்தவர் சிறுவயதிலேயே துபாய் சென்றதால் அங்கே பள்ளி மற்றும் கல்லூரி படிப்பை முடித்துள்ளார். அடுத்து 2016ல் ஒரு நாள் கூத்து, 2017ல் பொதுவாக எம்மனசு தங்கம் என தொடர்ச்சியாக அடுத்தடுத்த வருடங்களில் ஜெயம் ரவியுடன் டிக் டிக் டிக்,. விஜய் ஆண்டனி உடன் திமிரு பிடித்தவன், விஜய் சேதுபதியின் கதாநாயகியாக சங்கத்தமிழன் என நடித்து வந்தார் கடைசியாக 2020 ஆம் ஆண்டு நடைபெறும் நடன இயக்குனருமான பிரபுதேவா உடன் பொன் மாணிக்கவேல் படத்தில் நடித்திருந்தார் நிவேதா பெத்துராஜ். திரைப்படம் தவிர ஃபார்முலா கார் பந்தயத்திலும், பேட்மிட்டன் போட்டியிலும் பங்கேற்று திரை வட்டாரங்கள் மத்தியில் கவனம் பெற்று வருவார். அதுமட்டுமின்றி சமூக வலைத்தளத்தில் படு ஆக்டிவாக இருக்கும் நிவேதா பல நேரங்களில் திடீரென ஒரு போஸ்ட் பதிவிட்டு லைக் மற்றும் பாலோவர்ஸ்களை அள்ளிக் குவிப்பார்.
இந்த நிலையில் தனியார் விளையாட்டு அமைப்பு மூலம் மதுரையில் நடத்தப்பட்ட பேட்மிட்டன் போட்டியில் கலந்து கொண்ட நிவேதா பெத்துராஜ் அதில் சாம்பியன் பட்டத்தையும் பெற்று அந்த பதக்கத்தை முத்தமிடும் புகைப்படங்களை தனது சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார். மேலும் அவர் பெற்ற சாம்பியன் கோப்பையுடனும் புகைப்படங்கள் சமூக வலைதளத்தில் உலா வருகிறது. இதற்கிடையில் நிவேதா பெத்துராஜின் இரண்டாவது திரைப்படமான பொதுவாக எம்மனசு தங்கம் என்ற திரைப்படத்தில் இவருக்கு கதாநாயகனாக நடித்தவர் தற்போதைய விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின். இந்த நிலையில் ஒரு விளையாட்டுப் போட்டிகள் கலந்து கொண்டு வெற்றி கோப்பை பெற்ற நிவேதா பெத்துராஜின் பதிவை மறு பதிவிட்டு அரசு மரியாதைக்கு தகுதியானவர்கள் வாழ்த்துகள் என்று அரசியல் விமர்சகர் சவுக்கு சங்கர் பதிவிட்டு இருப்பது தற்போது விமர்சனங்களுக்கு உள்ளாகியுள்ளது. இதேபோன்று சினிமா வட்டாரங்களில் சில நடிகை நடிகர்கள் விளையாட்டுகளில் கலந்துகொண்டு வெற்றி பெற்று வருகின்றனர் ஆனால் அவர்களுக்கு இது போன்ற வாழ்த்துக்களை சவுக்கு சங்கர் கூறவில்லை ஆனால் நிவேதா பெத்துராஜிற்கு மட்டும் வாழ்த்து கூறியுள்ளார் என்ற விமர்சனங்களும் கேள்விகளும் சமூக வலைதளத்தில் தற்பொழுது எழுந்துள்ளது.
முன்னதாக அமைச்சர் உதயநிதியின் நடிப்பில் கடைசியாக வெளிவந்த படமான மாமன்னன் திரைப்படத்தில் உதயநிதிக்கு ஜோடியாக நடித்த கீர்த்தி சுரேஷிற்கு தமிழ் திரையுலக சங்கம் சார்பில் நடத்தப்பட்ட கலைஞர் நூற்றாண்டு விழாவில் அதிக முக்கியத்துவங்கள் கொடுக்கப்பட்டதாகவும் அதே விழாவில் லேடி சூப்பர் ஸ்டார் என்று புகழ்பெற்றுள்ள நயன்தாரா உதயநிதியின் ஆரம்பகால சினிமா வாழ்க்கையில் தொடர்ந்து இரண்டு படங்களில் நடித்துக் கொடுத்து அதனை வசூல் மற்றும் விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பு பெற்று பெற்றுக் கொடுத்தவரும் கலந்து கொண்டிருந்தார் ஆனால் அவரையே மேடையில் பேசுவதற்கு அனுமதிக்கவில்லை என்றும் ஆனால் கீர்த்தி சுரேஷ் மேடையில் கவிதை கூறுவதற்கு அனுமதிகள் வழங்கப்பட்டதாகவும் விமர்சனங்கள் எழுந்தது. இந்த நிலையில் அரசியல் விமர்சகர் சவுக்கு சங்கர் தொடர்ச்சியாக திமுக மீதும் அமைச்சர் உதயநிதி மற்றும் முதல்வர் மு க ஸ்டாலின் மீது விமர்சனங்களை முன்வைத்து வரும் நிலையில் தற்போது நிவேதா பெத்துராஜை வாழ்த்தியிருப்பது என்ன காரணமாக இருக்கும் என்ற சந்தேகத்துடன் இணையத்தில் தேடல்களுக்கு காரணமாக அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.