திமுக தமிழகத்தில் ஆட்சிக்கு வந்ததிலிருந்தே, தேர்தல் வாக்குறுதிகளை திமுக நிறைவேற்றவில்லை என்ற குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டு தமிழக முழுவதும் போராட்டங்கள் நடந்து வருவது குறிப்பிடத்தக்கது. அதிலும் குறிப்பாக நாங்கள் திராவிடர்கள் ஒடுக்கப்பட்ட மற்றும் தாழ்த்தப்பட்ட மக்களுக்காகவே நாங்கள் வாழ்ந்து வருகிறோம் என்று பலவாறு பேசியவரும் திராவிட முன்னேற்றக் கழகத்தின் ஆட்சியிலே தாழ்த்தப்பட்ட மற்றும் தலித் சமூகத்தை சேர்ந்த மக்களுக்கு பல வகையான எதிர்ப்புகள், வன்முறைகள் மற்றும் அசம்பாவிதங்கள் நடந்திருப்பது தமிழக முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. முதலாவதாக புதுக்கோட்டை மாவட்டம் வேங்கை வயல் பகுதியில் பட்டியலின மக்கள் வசிக்கும் இடத்தில் அமைக்கப்பட்டிருந்த மேல்நிலை நீர் தேக்க தொட்டியில் மலம் கலக்கப்பட்ட சம்பவம் பெருமளவில் சர்ச்சையானது ஆனால் இந்த சம்பவம் நடந்து கிட்டத்தட்ட பல மாதங்களாகியும் வேங்கை வயலில் ஏற்பட்டுள்ள அசம்பாவிதத்திற்கு யார் காரணம் என்பது குறித்து ஒரு முடிவும் அசம்பாவிதத்தை செய்த குற்றவாளிகளும் இதுவரை பிடிபடாமல் இருப்பது திமுக அரசு வாழ்வதே பட்டியலின மக்களுக்காக என்று கூறிக் கொள்வதில் அலட்சியம் இருப்பது தமிழக மக்கள் மத்தியில் தெரிய வந்தது.
இதனைத் தொடர்ந்து நாங்குநேரி பகுதியில் ஒரு தலித் மாணவனை தன்னுடன் பள்ளியில் படித்த சக மாணவர்களின் சாதி ரீதியாக தொடர்ந்து தீண்டி வந்ததும், அதைத் தெரிந்து ஆசிரியை அந்த மாணவரை சீண்டிய மற்ற மாணவர்களை கூப்பிட்டு கண்டித்துள்ளார் அதனால் கோபம் அடைந்த அந்த மாணவர்கள் புகார் கொடுத்த சகோதரியையும் அந்த தலித் மாணவனையும் வீட்டிற்குள்ளே புகுந்து சரமாரியாக அறிவாளால் வெட்டிய செய்தி இதுவரை எந்த ஒரு பகுதியிலும் நடை பெறாத ஒன்று! ஆனால் தமிழகத்தில் திமுக ஆட்சியில் நடைபெற்றது. இதனால் திமுகவை ஆதரித்து வந்த பெரும்பாலான பத்திரிகையாளர்கள் தற்பொழுது அதில் பின்வாங்க தொடங்கியுள்ளனர், மேலும் திமுகவை எதிர்க்கவும் தொடங்கியுள்ளனர். அந்த வகையில் தற்பொழுது பெண் பத்திரிகையாளரான சாலின் மரியா லாரன்ஸ் தனியார் youtube சேனல் ஒன்றிற்கு அளித்த பேட்டியில், டெல்லியில் தலித் பெண்ணிற்கு நடந்த வன்முறையில் குற்றவாளிகள் உடனடியாக கண்டறியபடுகிறார்கள் இவர்தான் அந்த குற்றவாளி என்று செய்திகளும் வெளியாகிறது அவரை சிறையிலும் அடைத்து விடுகிறார்கள் ஆனால் தமிழகத்தில் இது போன்ற சம்பவம் நடந்து புகார் அளிக்கப்படும் அதற்கான நடவடிக்கைகள் ஏன் இன்னும் எடுக்காமல் இருக்கிறார்கள்!
இதில் எந்த விதத்தில் நீங்கள் பிஜேபியை விட வித்தியாசமாக இருக்கிறீர்கள், இங்கு குற்றவாளிகள் தப்பி சென்று ஆடியோ வெளியிடும் அளவிற்கு குற்றவாளிகளுக்கு தைரியம் இருக்கிறது, குற்றவாளிகளின் மொபைல் போனை போலீசார் டிராக் செய்ய வேண்டும் ஆனால் அவர்கள் ஆடியோவை வெளியிடுகிறார்கள் அப்படியும் காவல்துறையால் அவர்களை கண்டுபிடிக்க முடியவில்லை என்றால் இங்கு முதல்வரில் இருந்து அனைவருமே கூட்டு களவாணிகள் தானே! மேலும் முதல்வர் இது குறித்து இன்னமும் வாயே திறக்காமல் இருக்கிறார் வட மாநிலங்களில் நடக்கும் பிரச்சனைகளுக்கு குரல் கொடுக்கும் இவர் தன் சொந்த மாநிலத்தில் நடக்கும் பிரச்சனைகளுக்கு ஏன் குரல் கொடுக்காமல் இருக்கிறார்! ஆனால் தலித் மக்களுக்காக அதை செய்வோம் பட்டியலின மக்களுக்காக இதை செய்தோம் என்று கூறிக் கொள்கிறார்கள்! என்று ஆவேசமாக பேசியுள்ளார். இது அறிவாலயத்திற்கு அதிர்ச்சியை அளித்துள்ளது ஏனென்றால் அறிவாலயம் மொத்தமுமே தாழ்த்தப்பட்ட மக்களுக்கு சமூக நீதியை நாங்கள் தான் வழங்கி தருவோம் என்று கூறிக் கொண்டிருக்கிற நிலையில் அதே சமூகத்தைச் சேர்ந்த ஒரு பத்திரிக்கையாளரான ஒரு பெண் இப்படி நேர்காணலில் திமுகவை குறித்து பேசி இருப்பது அறிவாலய தரப்பை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.