முன்னாள் ஐபிஎஸ் அதிகாரியான அண்ணாமலை அரசியல் மீது ஒரு ஆர்வம் ஏற்பட்டு தனது பதவியை ராஜினாமா செய்து விட்டு அதன் தொடர்ச்சியாகவே பாஜகவில் சேர்ந்து தமிழக பாஜக மாநில தலைவராக 2021இல் பொறுப்பேற்கப்பட்டார் அதற்குப் பிறகு தமிழகத்தில் பாஜகவின் செல்வாக்கு ஏறிக்கொண்டே செல்கிறது. அப்பொழுது எதிர்கட்சியாக இருந்த அதிமுகவுடன் கூட்டணி அமைத்துக் கொண்டிருந்த பாஜக அதிமுகவை விட அதிக அளவிலான கேள்விகள் மற்றும் விமர்சனங்களை ஆளுங்கட்சிக்கு எதிராக முன்வைத்தது ஆளும் கட்சி தரப்பில் செய்யப்படும் ஏமாற்று வேலைகள் அனைத்தையும் வெளிச்சத்திற்கு கொண்டுவரும் நடவடிக்கைகளில் தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை ஈடுபட்டதும் அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டதும் பரபரப்பாக வெளியானது.
மேலும் திமுகவின் சொத்து பட்டியல்களின் இரண்டு பாகத்தையும் வெளியிட்டார் அண்ணாமலை, மேலும் பி டி ஆர் பழனிவேல் தியாகராஜன் முதல்வரின் மகன் மற்றும் மருமகன் சேர்த்து வைத்திருக்கும் 30,000 கோடி ரூபாய் சொத்து குறித்து கூறிய ஆடியோவை வெளியிட்டதும் தமிழக அரசியல் களத்தை பரபரப்பாக்கியது. அதுமட்டுமின்றி திமுக அரசின் அமைச்சர்கள் தங்கள் பொறுப்பு வகிக்கும் துறைகள் மீது கொண்டிருக்கும் அலட்சியத்தையும் பத்திரிக்கையாளர்கள் முன்னிலையில் முன்வைத்து ஒட்டுமொத்தமாக தமிழக அரசை இயங்க வைக்கும் மறைமுக சக்தியாக செயல்பட்டு வருகிறார். ஆனால் இதே அண்ணாமலையை அவரது கட்சியை சேர்ந்த சிலர் ஏற்காமலும் எதிர்ப்பு தெரிவித்தும் வருகின்றனர். தொண்டர்கள் நலமே நமது நலன் என்றும் தொண்டர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றி பாஜக நிர்வாகிகள் அனைவரையும் அரவணைத்து ஒற்றுமையாக செயல்பட வைக்கும் அண்ணாமலையே சில தரப்பினருக்கு பிடிக்காது என்று கூறும் பொழுதே நகையாகவும் அவர்கள் அனைவருக்கும் அண்ணாமலையை குறித்து இன்னும் முழுமையாக தெரியவில்லை என்று தான் கூறவேண்டும் எனவும் மற்ற சில தரப்பிலிருந்து தெரிவிக்கப்படுகிறது.
அப்படி மாநிலத் தலைவர் அண்ணாமலையை குறித்து அவ்வப்போது விமர்சனங்களையும் அண்ணாமலை தெரிவிக்கும் திட்டங்கள் அனைத்தும் சரிவராது என்று கூறி வருபவர்களில் ஒருவர் எஸ் வி சேகர். இவர் தொடர்ச்சியாக மாநில தலைவராக இருக்கும் அண்ணாமலையை எதிர்த்தும் அவரை விமர்சித்தும் வருகிறார். அவரது சமூக வலைதளம் முழுவதுமே அண்ணாமலைக்கு எதிரான கருத்துக்களை பதிவிட்டு வருவார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் 2024 ஆம் ஆண்டு தேர்தலிற்கு இன்னும் சில மாதங்களில் நடைபெற உள்ளதால் அதற்கான ஆயத்த வேலைகள் ஒவ்வொன்றையும் பாஜக மேற்கொண்டு வருகிறது அதன்படி தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை சமீபத்தில், 25க்கும் மேற்பட்ட தொகுதிகளில் பாஜக வெற்றி பெறும் என்றும் தமிழகத்தில் திமுகவை தோற்கடிக்க கூடிய ஒரே கட்சி பாஜக தான் என்று கூறியதை விமர்சிக்கும் வகையில் எஸ்வி சேகர் தனது எக்ஸ் வலைதள பக்கத்தில் "மாசம் ₹15L + 3.5L rent GST வாங்கிட்டு பிட் படம் எடுக்கிற மேனேஜருக்கு ஹெட் ஆபீசை எப்படி ஏமாத்தணும்னு தெரியாதா.
கர்னாடகத்துல, இப்படி பேசற மாதிரி பேசிதான் ஆட்சியையே காலி பண்ணின சிரிப்பு போலீஸ். மே மாசத்துக்கு அப்புறம் முகமூடி கிழியும். இதை நம்ப ஒரு முட்டாள் கூட்டம். Wait & See" என்று பதிவிட்டுள்ளார். ஆனால் எஸ்வி சேகர் இந்த பதிவிற்கு பாஜகவை சேர்ந்த மற்ற தொண்டர்கள் மற்றும் அண்ணாமலை ஆதரவாளர்கள், நிர்வாகிகள் தற்பொழுது எஸ் வி சேகரை இணையத்தில் விமர்சித்து வருகின்றனர். மேலும் திமுகவினர்தான் இதுபோன்று பேசுவார்கள் அவர்கள் பேசுவது போலத்தான் தற்போது எஸ்.வி.சேகர் பேசிவருகிறார், திமுகவினர்களின் தூண்டுதலின் பெயராலே எஸ்.வி. சேகர் இதுபோன்று பேசி வருகிறார் என விமர்சனங்கள் இணையத்தில் முன்வைக்கப்படுவதும் குறிப்பிடத்தக்கது.