24 special

பட்டியலினத்தவருக்கு அரங்கேறிய ஒரு சம்பவம் நடவடிக்கை என்ன..?

Stalin
Stalin

தமிழகத்தில் தொடர்கதையாக மாறிவிட்டது பட்டியலின இளைஞர்கள் மீது தாக்குதல். குறிப்பாக தென் மாவட்டத்தில் இச்சம்பவம் தொடர்கதையாக மாறிவிட்டது. இது வரை தமிழகத்தில் உள்ள அரசு எந்த வித நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை வெறும் வேடிக்கையாக பார்த்து வருகிறது. தற்போது திருச்சி தமிழ்நாடு தேசிய சட்டப் பல்கலைக்கழகத்தில் பட்டியலின மாணவர்களுக்கு நடந்த துயரம் தான் பேசப்பட்டு வருகிறது. இத்தகு பல அரசியல் தலைவர்களும் எதிர்ப்பு தெரிவித்தாலும் ஆளும் அரசு வெறும் வேடிக்கை மட்டுமே பார்த்து வருகிறது.


கடந்த 6ம் தேதி திருச்சி - திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ள தமிழ்நாடு தேசிய சட்டப் பல்கலைக்கழகம் உள்ளது. இந்த பல்கலைக்கழகத்தின் இளங்கலை இறுதியாண்டு படித்து வரும் தலித் மாணவருக்கு அவருடன் படித்து வந்த நண்பர்கள் 2 பேர் குளிர் பானத்தில் சிறுநீர் கலந்து கொடுத்ததாகவும், மறுநாள் நண்பர்கள் மத்தியில் சிறுநீர் கலந்த குளிர்பானத்தை குடித்ததாக கேலி செய்ததாகவும் தகவல் வெளியானது. அடுத்த நாள் தான் இது பட்டியலின மாணவனுக்கு தெரிந்துள்ளது. 

இது குறித்து பாதிக்கப்பட்ட மாணவன், ஆசிரியர்களிடம் புகார் அளித்துள்ளார். இதையடுத்து, பட்டியலின மாணவரின் புகார் மீது நடவடிக்கை எடுக்க, 3 உதவிப் பேராசிரியர்களைக் கொண்ட ராகிங் தடுப்புக் குழு அமைக்கப்பட்டுள்ளதாக பல்கலைக்கழக தரப்பில் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் 18ம் தேதி அறிக்கை மூலம் நடந்ததை தெரிவிக்க அவகாசம் கேட்ட நிலையில், தனது நண்பர்கள் மீது தந்த புகாரை பட்டியலின மாணவன் திரும்ப பெற்று விட்டதாக பல்கலைக்கழக வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் அந்த மாணவனை வற்புறுத்தி வாபஸ் பெற சொன்னதாக சக மாணவர்கள் தெரிவிக்கின்றனர்.

கடந்த சில மாதங்களுக்கு முன்புதான் நாங்குநேரியில் பட்டியலின பள்ளி மாணவர் ஒருவர் சக மாணவர்களால் ஆயுத தாக்குதலுக்கு உள்ளாக்கப்பட்டார். அதற்கு முன்னதாக  பட்டியலின மக்கள் குடிக்கும் குடிநீரில் மலம் கலந்து ஒருவருடம் நிறைவேறாமல் இருந்து வருகிறது. அதே போன்று ஈரோடு மற்றும் திருநெல்வெளி மாவட்டத்தில் பட்டியலின இளைஞர்கள் மீது தாக்குதல் நடைபெற்றது. திமுக அரசு என்ன நடவடிக்கை எடுத்துள்ளது என்ற கேள்வியை மக்கள் முன்வைக்கின்றனர். ஆகவே, கல்வி நிலையங்களில் முடிவில்லாமல் தொடரும் இத்தகைய வன்கொடுமைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் தமிழக அரசு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.