
2013 ஆந்திர பிரதேசத்தில் இருந்து தெலுங்கானா தனி மாநிலமாக அறிவிக்கப்பட்ட பிறகு அதன் முதல் முதல்வராக தேர்ந்தெடுக்கப்பட்டவர் கே. சந்திரசேகர் ராவ்! முதல்வராக தேர்ந்தெடுக்கப்பட்டதிலிருந்து தெலுங்கானா மாநிலத்தில் பல நலத்திட்டங்கள் மற்றும் உதவி திட்டங்களை செயல்படுத்தி வந்தார். ஆனால் ஆட்சியில் இருக்கும் பொழுது ஜோதிடம், எண் கணிதம் மற்றும் வாஸ்து ஆகியவற்றில் தீவிர நம்பிக்கை கொண்டிருந்த சந்திரசேகர ராவ் அர்ச்சகர்களின் ஆலோசனையின் படியே அனைத்து செயல்களையும் மேற்கொள்வார் என்று கூறப்படுகிறது. மேலும் எப்பொழுதுமே நிமிர்ந்து நடை மற்றும் கம்பீரமான ஒரு தோற்றத்துடன் வலம் வரும் கேசி ஆர் பிரதமர் நரேந்திர மோடியை எப்பொழுதுமே விமர்சனம் செய்து வருபவர். மேலும் மத்திய அரசை நேரடியாக எதிர்த்தும் மத்திய அரசால் கூட்டப்படும் எந்த ஒரு கூட்டத்திலும் கலந்து கொள்ளாமல் புறக்கணித்து வந்த கேசிஆர் தனது மக்களை பற்றி கவனிக்காமல் அரசியலில் பாஜகவை எதிர்ப்பதையே நோக்கமாகக் கொண்டார்.
அதே சமயத்தில் கே சி ஆர் தெலுங்கானா மாநிலத்தின் ஆட்சி அமைத்திருக்கும் பொழுது மக்கள் நலத் திட்டங்கள் என்ற பெயரில் தொடங்கப்பட்ட திட்டங்களால் தெலுங்கானா மக்கள் கடும் அதிருப்தி அடைந்தனர். ஏனென்றால் ஒரு சில குறிப்பிட்ட வகுப்பினருக்கு மட்டும் இந்த திட்டங்கள் பயனளித்ததாகவும் மற்றவர்களுக்கு பயன் கொடுக்கவில்லை என்றும் மக்களின் கோபத்தை ஏற்படுத்தும் அளவில் கே சந்திரசேகர் ராவின் இந்த திட்டங்கள் அமைந்தது! முன்னதாக தெலுங்கானாவை ஆண்டு வந்த பி ஆர் எஸ் கட்சியின் தலைவரும் முதல் வருமான சந்திரசேகர் ராவ் ஒரே மாதிரியான குடிமைச் சட்டத்தை எதிர்ப்பதாக தெரிவித்ததோடு பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அரசு பல வழிகளில் மக்கள் மத்தியில் பிரச்சனைகளை தூண்டி வருகிறது என கூறியதற்கு விமர்சனங்களை பெற்றார். இந்த நிலையில் டெல்லியில் துணை முதல்வர் மணிஷ் சிசோடியா கைதிற்கு முக்கிய காரணமாக அமைந்த மதுபான ஊழல் புகாரில் பாரத ராஷ்டிகள் கட்சி தலைவர் சந்திரசேகர் ராவ் மகள் கவிதா மீதும் மதுபான ஊழல் வழக்கில் குற்றம் சாட்டப்பட்டது.
இப்படி தொடர் பின்னடைவுகளை சந்தித்து வந்த சந்திரசேகர ராவ் 2014 ஆம் ஆண்டில் தெலுங்கானா மாநிலம் உருவான போதிலிருந்தே அங்கு ஆட்சி அமைத்துக் கொண்டிருந்த பாரதிய ராஷ்ட்ரிய ஷமிதி சமீபத்தில் நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சியிடம் தோற்றது. அதனால் சந்திரசேகர் தனது பதவியை ராஜினாமா செய்தார். இப்படி சந்திரசேகர ராவ் தேர்தலிலும் தோல்வியடைந்து தனது பதவியையும் ராஜினாமா செய்த நிலையில் எதிர்பாராத விதமாக அவர்கள் வீட்டில் கால் இடறி கீழே விழுந்ததாக கூறப்படுகிறது. இதனை அடுத்து அவர் ஹைதராபாத்தில் உள்ள யசோதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார், அவரை பரிசோதித்த மருத்துவர்கள் இடுப்பு பகுதியில் முடிவு ஏற்பட்டுள்ளதாகவும் அதனால் அவருக்கு அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்றும் தெரிவித்தனர்.
தெலுங்கானாவின் மிகப் பெரிய ஆளுமையாக இருந்த சந்திரசேகர் ராவின் உடல்நிலை குறித்த தகவல்கள் வெளியானதை அடுத்து பிரதமர் மோடி உள்ளிட்ட பல தலைவர்களும் அவரது உடல் நலம் குறித்து விசாரித்தனர். இந்த நிலையில் தற்போது அவரது அறுவை சிகிச்சைகள் முடிக்கப்பட்டு நடப்பதற்கு பயிற்சி எடுக்கும் வீடியோக்கள் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது, மேலும் இதுதான் கர்மா என்றும் ஆட்சியில் இருக்கும் போது தொடர்ந்து பிரதமரை விமர்சித்து வந்த சந்திரசேகர் ராவ் ஆட்சியையும் இழந்து தனது பதவியையும் இழந்து தற்போது உடலிலும் பெருமளவில் பாதிப்புகளை சந்தித்துள்ளார் ஆனால் பிரதமர் இன்னும் அதிக அதிகாரம் மற்றும் அடுத்த வெற்றியை நோக்கி பயணித்துக் கொண்டிருக்கிறார் என்று விமர்சனங்கள் முன்வைக்கப்படுகிறது.