24 special

சூப்பர் ஸ்டார் வந்தபோது இல்லாத அட்டுழியம்..! கேப்டன் இடத்தில் வாசன் செய்த செயலால் பரபரப்பு!

TTF
TTF

சினிமாவில் உள்ள நடிகர்களை விட பிரபலமானவர் டிடிஎப் வாசன் இவர் தற்போது உள்ள 2கே ஹிட்ஸுகளுக்கு நெருக்கமானவர், இவர் பிறந்தநாளில் எதிர்பார்த்ததை விட ரசிகர்கள் கூட்டம் அதிகமாக சூழ்ந்ததால் காவல்துறையே கட்டுப்படுத்த முடியாமல் இருந்தனர். இவரின் வளர்ச்சி எந்த அளவிற்கு  இருந்ததோ தற்போது அந்த அளவுக்கு பிரச்சனை சூழ்ந்துள்ளது. வெகு நாட்களாக வெளியில் வராமல் இருந்த வாசன் நேற்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் நினைவிடத்தில் மரியாதை செலுத்த வந்த வாசனை பார்த்து தொண்டர் கேட்ட கேள்வியால் விழி பிதுங்கி அமைதியாக சென்ற வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.


கோயம்பத்தூர் பகுதியை சேர்ந்தவர் டிடிஎப் வாசன் இவர் பைக் மூலம் தன்னை அறிமுகப்படுத்தினார். பைக்கில் செண்டு வீடியோ போடுவது வெளி மாநிலத்திற்கு பைக்கிலே செல்வது போன்ற வீடியோவை பதிவிட்டு வளர்ந்து வரும் இளைஞர்கள் வாசனுக்கு ரசிகர்கர்களாக மாறினார். கடந்த ஆண்டு காஞ்சிபுரம் அருகே பைக்கில் அதிவேகத்தில் சென்றபோது விபத்து ஏற்பட்டு, 5 பிரிவுகளில் வழக்கு பதியப்பட்ட்டது. பின் அவருடைய லைசென்ஸ் 10 ஆண்டுகளுக்கு தடை விதிக்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். வெளியில் வந்த அவர் பைக்கை பார்த்து செல்வதோடு சரி அதில் பயணம் செய்வதை முழுமையாக தெவிருந்து வீட்டார் என்று சொல்லலாம். 

இவர் நடித்து வந்த மஞ்சள் வீரன் படமும் தொடங்கியதும் நின்றது, அதன் பிறகு இணையவாசிகளால் சரமாரியாக ட்ரோல் செய்து வந்தனர். இதற்கிடையில் தேமுதிக தலைவரும் சினிமா துறையில் பிரபலமானவரும் கேப்டன் விஜயகாந்த் கடந்த மாதம் உடல்நல குறைவு காரணமாக இறந்தார். கடந்த ஆண்டுகளாக உடல் நல பிரச்னை ஏற்பட்டு சினிமாவில் நடிப்பதும் அரசியல் பிரச்சாரத்திலும் ஈடுபடுவதை தவிர்த்து வந்தார். அந்த வகையில் கடந்த மாதம் உடல்நிலை தொய்வு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், அங்கு சிகிச்சை பலனின்று இறந்தார். அவரது உடலும் இரண்டு இரண்டு நாட்களாக மக்கள் அஞ்சலி செலுத்த வைத்திருந்தனர். அதன் பின் அரசு மரியாதையுடன்  அவரது உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது. 

அவரது உடலுக்கு தினமும் சினிமா துறையை சேர்ந்த பிரபலங்களும், மக்களும் அவரது உடல் அடக்கம் செய்யப்பட்ட இடத்தில் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். அந்த வகையில் பிரபல யூடியூப்பரான டிடிஎப் வாசன் மட்டும் அவர் நடிக்கும் மஞ்சள் வீர படத்தின் படக்குழுவினரும் அஞ்சலி செலுத்த வந்தனர்.  இதையடுத்து வெளியே வந்த டிடிஎப் வாசனை பார்த்த பொதுமக்கள் அவருடன் செல்பி எடுத்தனர். இதை அங்கிருந்தபடியே விஜயகாந்தின் ரசிகர் ஒருவர் பார்த்துக் கொண்டிருந்தார். உடனே கடுங்கோபமடைந்த அவர், செல்பி எடுக்குற இடமா இது, யாரா இருந்தாலும் அடிச்சிடுவேன் பாத்துக்கோங்க என கத்தினார். இதை பார்த்ததும் டிடிஎப் வாசன் ஒன்றும் தெரியாதது போல் ஷூ வை மாட்டிக் கொண்டு அங்கிருந்து நழுவினார்.

இந்த வீடியோ இணையத்தில் வைரலாக நெட்டிசன்கள் பலரும் என்ன எந் பக்கம் திரும்பினாலும் அடி விழுகிறது என கலாய்த்து வருகின்றனர்.  மேலும், விஜய் மீது செருப்பு பறந்து வந்தது ஆனால், டிடிஎப் வாசன் எல்லாம் ஒரு ஆளே கிடையாது அங்கு வந்து இது போல் செயலுக்கு இடம் கொடுத்தால் அவரை தொண்டர்கள் சும்மா விட்டதே பெருசு எனவும் தெரிவித்து வருகின்றனர்.