மேற்கு வங்கத்தில் அம்மாநில ஆளுநர் சட்டமன்றத்தை முடக்கி உத்தரவிட்ட சூழலில் அது எது போன்ற தாக்கத்தை ஏற்படுத்தும் என எழுத்தாளர் ஸ்டான்லி ராஜன் சில யூகங்களை பகிர்ந்துள்ளார் அது பின்வருமாறு :-
ஒரு கட்சி என்பது அதன் கொள்கை அதன் சித்தாந்தம் அதன் சொந்த சிந்தனை அடிப்படையில் இயங்க வேண்டுமே தவிர வோட்டு வாங்கி தாருங்கள் காசு தருகின்றோம் என ஒரு தனியார் கம்பெனியிடம் வீழ்ந்தால் அது பெரும் விபரீதத்தில் முடியும்உலகில் சில விஷயங்கள் இப்படியானவை.
உதாரணமாக ஒரு நாடு தன் பாதுகாப்பை இன்னொரு நாட்டின் பாதுகாப்பு நிபுணர்கள் கையில் ஒப்படைக்கும் பொழுதோ இல்லை பொருளாதார ரீதியாக தடுமாறும்பொழுது இன்னொரு நாட்டின் குழுவின் ஆலோசனையினை பெற்றாலோ அது இன்னொரு சக்திக்கு முழு அடிமையாவதற்கு சமம்
இப்படி ஏகபட்ட நாடுகள் சிக்கின, இதே வகையில் கம்பெனிகள் சிக்கின, இன்னொருவனை நம் வெற்றிக்கு அழைக்கும்பொழுது அவன் நம் ரகசியம் பலவீனம் என முழுவதும் அறிந்து சமயம் பார்த்து நம்மை அடித்து வீழ்த்தி அதிகாரத்தை பெறுவான், ஆற்காடு நவாப் ராபர்ட் கிளைவினை அழைத்து ஒரு ராணுவ வெற்றிக்காய் அவன் தயவினை நாடி பின் கிளைவ் ஆங்கில ஆட்சியினை இந்தியாவில் நிலை நிறுத்தியதெல்லாம் இவ்வகை
"திறமையான வேலைக்காரன் எஜமனானை வீழ்த்திவிடுவான்" என்பது பழமொழி, இந்த வரிக்கு இப்பொழுது மிகசரியான உதாரணம் பிரசாந்த் கிஷோர், அவர்தான் இப்பொழுது இந்தியாவில் அன்று ராபர்கிளைவ் செய்த அனைத்து வேலைகளையும் செய்கின்றார், கிளைவ் என்ன செய்வான் என்றால் ஒரு நவாப் குடும்பத்தில் நுழைவான் அங்கு பல கோஷ்டிகள் இருந்தால் ஒரு கோஷ்டி வெல்ல பாடுபடுவான் அப்படியே இவர்களை அதிகாரத்துக்கு கொண்டுவருவான்
அதுவரை அவன் காட்டிய விசுவாசம் இவன் தரப்பு ஆட்சிக்கு வந்ததும் மாறும், அங்கே சில குழப்பங்களை ஏற்படுத்தி மொத்தமாக அவர்களை குழப்பி ஆட்சியினை கிழக்கிந்திய கம்பெனிக்கு மாற்றிவிடுவான், அதே வேலையினைத்தான் பிரசாந்த் கிஷோர் செய்கின்றார், தமிழகம் மட்டுமல்ல மேற்கு வங்கத்திலும் அவர்தான் மம்தா பானர்ஜிக்கு ஆதரவாக வியூகம் வகுத்து பாஜகவினை எதிரியாக பாவித்து மம்தாவினை முதல்வராக்கினார்
இப்பொழுது மம்தாவுக்கும் அவர் குடும்பமும் மம்தாவின் அரசியல் வாரிசுமான அபிஷேக் பானர்ஜிக்கும் முட்டி கொண்டது, இதில் பிரசாந்த் கிஷோர் அபிஷேக் பக்கம் சரிந்தார்
பல சர்ச்சைகள் வெடித்த நிலையில் இப்பொழுது அபிஷேக் பானர்ஜியின் சித்துவிளையாட்டில்தான் கவர்னரும் சேர்ந்து கொண்டு வங்க சட்டசபையினை முடக்கியிருக்கின்றார் என்கின்றன செய்திகள்
ஆக பிரசாந்த் கிஷோர் யாருக்கு சாதகமாகவோ ஆட ஆரம்பித்திருப்பது தெரிகின்றது, சட்டசபையினை முடக்குவது என்பது கலைத்தல் அல்ல மாறாக புதிய அறிவிப்போ கூட்டமோ செய்யவிடாமல் முடக்கி வைப்பது
அபிஷேக் பானர்ஜிக்கு சாதகமாக சில காட்சிகள் நகர, ஆளுநர் ஒருமாதிரி அடம்பிடிக்க மம்தா தரப்பு தமிழக திமுக அரசு பாணியில் ஆளுநரை மாற்றவேண்டும் என கிளம்பிற்று
ஆளுநரோ தன் அதிகாரம் எது என காட்ட 17ம் சட்டபிரிவினை பயன்படுத்தி முடக்கியிருக்கின்றார், இதன் அர்த்தம் மாநில அரசு ஆளுநருக்கு கட்டுபட்டது, மாநில அரசின் அடாவடிக்கெல்லாம் கவர்ணர் அசையமுடியாது என்பது
ஆக ராபர்ட் கிளைவ் வேலையினை பிரசாந்த் கிஷோர் காட்டிய நிலையில் அவரிடம் திமுக வாக்குவங்கி தேர்தல் ரகசியம் என எல்லாமே வலுவாக சிக்கியியிருக்கும் நிலையில் வங்கத்து நிலையினை கண்டு திமுக பெரும் அதிர்ச்சியில் இருக்கலாம்
இனி நீட் தேர்வு, ஆளுநர் மாற்றம் போன்ற குரல்கள் இங்கும் குறையலாம், ஏற்கனவே கொரோனா பரவல் என உள்ளாட்சி தேர்தல் பிரச்சாரங்களுக்கு முழுக்கு போடும் முடிவுக்கு வந்த திமுக இனி நீட் தேர்வு கோஷ்த்துக்கும் ஒரு முழுக்கு போட்டு அமைதியாகலாம்
இங்கே ஆளாளுக்கு மோடி, ஆளுநர் என குதித்த நிலையில் "கொஞ்சம் அங்கே பார் கண்ணா" என அதிரடி காட்டியிருக்கின்றது மத்திய மேலிடம்
அதை தொடர்ந்து "வந்தே மாதரம்" பாட தயாராகிகொண்டிருக்கின்றார்கள் அக்கோஷ்டியினர் என குறிப்பிட்டுள்ளார் ஸ்டான்லி ராஜன்.
More watch videos