பழனி முருகன் கோவிலில் வைக்கப்பட்டு இருந்த இந்துக்கள் மட்டுமே தரிசனம் செய்ய அனுமதிக்கபடுவார்கள் என்ற பலகை நீக்கப்பட்டதும், முஸ்லீம் குடும்பத்தினர் சுற்றுலா தளம் என கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்ட சம்பவம் ஒட்டுமொத்த முருக கடவுள் பக்தர்களையும் அதிர செய்து இருக்கிறது
திண்டுக்கல் மாவட்டம் பழனி தண்டாயுதபாணி சுவாமி கோவிலுக்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தரும் நிலையில் சில ஆண்டுகளுக்கு முன்பு பழனி கோவிலுக்கு ஹிந்துக்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள் என்று பதாகைகள் வைக்கப்பட்டிருந்தது.
சில மாதங்களுக்கு முன்பு கும்பாபிஷேக பணிகளுக்காக பேனர்கள் அகற்றப்பட்டு, பராமரிப்பு வேலைகள் நடைபெற்ற நிலையில் கடந்த ஐந்து நாட்களுக்கு முன்பு பழனி பேருந்து நிலையம் அருகில் பழக்கடை வைத்துள்ள சாகுல் என்பவர் உறவினர்களை அழைத்து வந்து டிக்கெட் பெற்றார்.
பின்பு அவர்கள் புர்கா அணிந்தனர். அதன் பின்பு மாற்று மதத்தினர் கோவிலுக்குள் அனுமதிக்கப்படுவதில்லை என கூறி டிக்கெட் வழங்கியதை திரும்ப பெற்றனர். அப்போது சாகுல் ஹமீது உறவினர்களுடன் மின் இழுவை ரயில் கண்காணிப்பாளரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இது சுற்றுலா தளம் என்றும் ,நீங்கள் இந்துக்கள் மட்டுமே அனுமதிக்கபடுவார்கள் என பதாகைகள் வைத்திருந்தால் நாங்கள் ஏன் உள்ளே வரப் போகிறோம் என்றும் கேள்வியை எழுப்பினார், நான் வேண்டுமென்றால் சொந்த செலவில் பதாகையில் வைத்து தர வேண்டுமா? என கூறி வாக்கு வாதம் செய்தார்.
அப்போது ஒன்று கூடிய ஹிந்து அமைப்பினர் இந்துக்களுக்கு மட்டுமே அனுமதி என்ற பதாகைகள் ஏன் கும்பாபிஷேகத்திற்கு பின்பு வைக்கப்படவில்லை என்றும் கேள்வி எழுப்பினர். பின்னர் இன்று ஹிந்துக்கள் மட்டுமே உள்ளே அனுமதிக்கப்படுவார் என்று பதாகைகள் வைக்கப்பட்டது, வைக்கப்பட்ட சில மணி நேரத்திலேயே பாதகைகள் அகற்றப்பட்டது.
இது பக்தர்கள் இடையே கடும் அதிர்ச்சியை உண்டாக்கியது, பேனர் அகற்றப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஹிந்து அமைப்பினர் ஒன்று கூடி மின் இழுவை ரயில் முன்பாக குவிந்து போராட்டத்தில் ஈடுபட்டனர், மேலும் இச்சம்பவம் குறித்து மைதீன் பாட்ஷா என்பவர் தனது முகநூல் பக்கத்தில் மதகலவரத்தை தூண்டும் வகையில் பதிவு செய்வதாக கூற அவரை கைது செய்ய வேண்டும் எனவும் போராட்டம் செயதனர்.
தொடர்ந்து மூன்று மணி நேரத்திற்கும் மேலாக நடைபெற்ற போராட்டம் ,தாசில்தார் பழனிச்சாமி பேச்சுவார்த்தையில் திங்கள் கிழமை அதிகாரிகளுடனான பேச்சுவார்த்தைக்கு ஏற்பாடு செய்வதாக கூறியதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர்.
தமிழ் கடவுள் முருகன் தளம் என்ன சுற்றுலா தளமா? மாற்று மத கடவுள்கள் குறித்து இப்படி ஒருவர் பேசி இருந்தால் அரசாங்கம் விட்டு இருக்குமா? என்ன இது முருகனுக்கு வந்த சோதனை என பக்தர்கள் வேதனை அடைந்து இருக்கின்றனர். தொடர்ச்சியாக இது போன்ற சம்பவங்கள் மேலும் அரங்கேறாமல் இருக்க என்ன செய்ய போகிறது தமிழக இந்து சமய அறநிலையத்துறை என்பதே தற்போது தமிழர்களின் கேள்வியாக இருக்கிறது