Cinema

உங்க வீட்டுப் பிள்ளையா நினைச்சு விட்ருங்கப்பா...? மாரி செல்வராஜ் சரண்டர் பின்னணி!

Maari selvaraj
Maari selvaraj

தேவர்மகன் சர்ச்சையில் வாயை கொடுத்து வம்பை விலைக்கு வாங்கிய இயக்குனர் மாரி செல்வராஜ்! பரியேறும் பெருமாள், கர்ணன் போன்ற படங்களை இயக்கிய மாரி செல்வராஜ் தற்போது உதயநிதி ஸ்டாலின் மற்றும் கீர்த்தி சுரேஷ் நடிப்பில் மாமன்னர் படத்தை இயக்கியுள்ளார். இப்படத்தின் ஆடியோ வெளியீடு கடந்த சில நாட்களுக்கு முன்பு நடைபெற்றது அது தனியார் தொலைக்காட்சியிலும் ஒளிபரப்பாக்கப்பட்டது இந்த விழாவில் கமலஹாசன் ஒரு சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.


இந்த விழாவில் மாரி செல்வராஜ் கமலஹாசன் முன்னிலையில் தேவர் மகன் திரைப்படத்தை குறித்து பேசியது பெரும் சர்ச்சையாக எழுந்துள்ளது. அதாவது மாமன்னன் படம் உருவாவதற்கு காரணமே தேவர் மகன் படம் தான். தேவர்மகன் படத்தில் பார்க்கும் பொழுது எனக்குள் விளைவுகள் அதிர்வுகள் பாசிட்டிவ் அண்ட் நெகட்டிவ் தாட்ஸ் என்ற எல்லாமே ஏற்பட்டது. எல்லா இயக்குனர்களுமே தேவர் மகன் படத்தை பார்த்து தான் படம் எடுக்க ஆரம்பித்து இருப்பார்கள் நானும் அப்படித்தான், ஆனால் தேவர் மகன் படம் எனக்கு மிகப்பெரிய மனப்பிறழ்வை உண்டாக்கியது. 

என்னதான் அந்த காலத்தில் இப்படித்தான் இருந்தது ரத்தமும் சதையுமாக தான் இருந்தன என்றாலும் இதை எப்படி புரிந்து கொள்வது இந்த படம் சரியா தவறா என்று புரியாமல் அப்படி ஒரு வழி இந்த படத்தை பார்த்த பிறகு எனக்கு ஏற்பட்டது என்று மாரி செல்வராஜ் கமலஹாசன் முன்னிலையில் இந்த கருத்தை தெரிவித்தார். மேலும் இந்த சம்பவத்தை தொடர்ந்து 13 ஆண்டுகளுக்கு முன்பு தேவர் மகன் படத்தை பற்றி எதிர்மறை கருத்தை மாரி செல்வராஜ் கமலஹாசனுக்கு எழுதிய கடிதமும் வைரலானது. இதனால் திரையுலக ரசிகர்கள் பலரும் மாரி செல்வராஜிற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் விமர்சனங்களை முன்வைத்து தங்கள் எதிர்ப்பை தெரிவித்தனர்.

இது பற்றிய விமர்னங்கள் தற்போது சமூக வலைதளங்களில் பேசும் பொருளாகி உள்ளது. அதாவது குறிப்பிட்ட சமூகத்தினரை வைத்து விளம்பரம் தேடிக் கொள்கிறார் என்று கூறி மாரி செல்வராஜை எதிர்க்கும் வகையில் விமர்சனங்களை திரையுலக ரசிகர்கள் எழுப்பி வருகின்றனர். இந்த நிலையில் மாமன்னன் படம் திரைக்கு வெளியாக உள்ள நிலையில் இப்படிப்பட்ட விமர்சனங்கள் அதிக அளவில் எழுவது படத்திற்கு நல்லதல்ல என பயந்து கமலஹாசன் முன்னிலையில் மேடையில் தேவர் மகன் படம் குறித்து மாரி செல்வராஜ், தான் கூறிய கருத்திற்கு தற்போது விளக்கம் அளித்துள்ளார். 

அந்த விளக்கத்தில் கமலஹாசன் போன்ற ஒரு ஆளுமை மாமன்னர் படத்தை பார்த்துவிட்டு அதனைப் பற்றி மேடையில் பேசப் போகிறார் அது எனக்கு மிகவும் எமோஷனலான தருணம்! நான் எவ்வளவு எமோஷன் ஆக இருந்தேன் என்பது அவருக்கு தெரியும். மாமன்னன் படத்தை தமிழ் சினிமாவில் பார்த்த ஒரே ஆள் கமலஹாசன் மட்டும் தான். 13 ஆண்டுகளுக்கு முன்பு நான் எழுதிய கடிதத்தில் அப்போது இருந்த கோபம் மற்றும் மொழி போன்றவற்றால் எழுதியது. கமலஹாசனின் படத்தை பார்த்துவிட்டு என் கைகளைப் பிடித்து பாராட்டினார் அது போதும் அதுவே என் வாழ்க்கையின் மிகப்பெரிய சாதனை.

இத்தனை நாட்களுக்குப் பிறகு அவரை சந்தித்து அவர் முன்பாக மேடையில் பேசும் பொழுது இப்பொழுது பேசாமல் வேறு எப்பொழுது பேசுவது மேலும் நான் பேச தொடங்கும் போதே தெரியும் எங்கேயோ ஆரம்பித்து எங்கேயோ முடித்திருப்பேன். மேடையில் மாமன்னன் படத்தை பற்றி கமலஹாசன் பேசும் பொழுதும் இந்த படம் மாரி அரசியல் மட்டுமல்ல நம் அனைவரது அரசியலும் கூட என்று கூறியிருந்தார் இதற்கு மேல் வேறு என்ன வேண்டும்? இதுதான் என்னுடைய வெற்றி அவரிடம் இருந்து எனக்கு கிடைத்த அன்பையும் அரவணைப்பையும் நான் இழக்க விரும்பவில்லை. என்னுடைய கருத்து யாரிடம் கூறினேன் கலைக்கு நெருக்கமான நம்பிக்கைக்குறிய ஒரு ஆளுமையிடம் கூறினேன் அவரும் அதனை புரிந்து கொண்டு எனக்கு ஆதரவாக பேசினார்.

மேலும் இந்த உரையாடல் அப்பாவிற்கு மகனுக்கும் உள்ள கோபத்தை தான் வெளிப்படுத்தியது. கோபத்தில் அப்பாவை சரியாக புரிந்து கொள்ளாமல் வீட்டை விட்டுச் சென்ற பையன் அப்பாவிடம் பேசியது போன்ற ஒரு தருணமாக தான் இது பார்க்கப்பட்டது, அப்படியே நானும் பார்க்கிறேன் என்று மாரிச்செல்வன் தனது விளக்கத்தை தெரிவித்துள்ளார். 

இதன் பின்னணியில் இயக்குனர் மாரி செல்வராஜ் குறிப்பிட்ட சமூகத்தினரை வைத்து திரைத்துறையில் கல்லா கட்டி வருவதாகவும் விமர்சனங்கள் எழுந்துள்ளது குறிப்பிடத்தக்கது.