24 special

அண்ணாமலை காத்திருக்கிறோம் என்று சொல்வதன் மர்மம் என்ன?

Stalin and annamalai
Stalin and annamalai

திமுக அமைச்சர்கள் அலறல் !தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை அவரது ட்விட்டர் பக்கத்தில் மீண்டும் மீண்டும் மூன்று வாசகத்தை உறுதியாக தெரிவித்து இருந்தார், அதாவது திருச்சி சூர்யா கைது செய்யப்பட்ட வழக்கிலும், ஒட்டன் சத்திரம் நிர்வாகிகள் கைது செய்யப்பட்ட வழக்கிலும் அண்ணாமலை  பார்த்து கொண்டு இருக்கிறோம், பொறுமையாக இருக்கிறோம், எங்கள் நேரம் வரும் வரை காத்துகொண்டு இருக்கிறோம் என தெரிவித்து இருக்கிறார்.


அண்ணாமலை காத்துகொண்டு இருக்கிறோம் என தெரிவித்து இருப்பது பல அமைச்சர்களை அலற செய்துள்ளது, எப்போது வேண்டுமானாலும் அடுத்த ஊழல் பட்டியல் வெளியாகலாம் எனவும், அல்லது மத்திய அரசின் ஏஜென்சிஸ் களம் இறக்க படுமோ என்ற அச்சத்தில் இருக்கின்றனராம் அமைச்சர்கள் இது குறித்து அண்ணாமலை முதலில் தெரிவித்த கருத்துக்களை பார்க்கலாம்.

ஒட்டன்சத்திரத்தில், உணவுத்துறை அமைச்சர் திரு சக்கரபாணியின் தூண்டுதலின் பேரில் ஊராட்சி மன்றத் தலைவருக்கான அதிகாரங்கள் பறிக்கப்பட்டதைக் கண்டித்து, திண்டுக்கல் மேற்கு மாவட்ட தலைவர் திரு பழனி கனகராஜ் அவர்களின் தலைமையில் மாபெரும் போராட்டத்தை முன்னெடுத்தது தமிழக பாஜக. 

இந்நிலையில், நியாயமான கோரிக்கைகளை முன்வைத்துப் போராடிய பாஜக நிர்வாகிகள் 15 பேர் மீது வழக்குத் தொடுத்து 6 பேரைக் கைது செய்துள்ளது திமுக அரசு. 

கைது செய்யப்பட்ட நிர்வாகிகளை வெளியே கொண்டு வருவதற்கு அனைத்து முயற்சிகளையும் தமிழக பாஜக செய்து வருகிறது.

எங்கள் நிர்வாகிகள் சிறையிலிருந்து வெளியே வரும்போது அவர்களை வரவேற்க தமிழக பாஜக தயாராக இருக்கும். பார்த்துக் கொண்டிருக்கிறோம்,  பொறுத்துக் கொண்டிருக்கிறோம், எங்கள் நேரம் வரும்வரை காத்துக் கொண்டிருக்கிறோம் என அண்ணாமலை குறிப்பிட்டு இருக்கிறார்.

இதே போன்று திருச்சி சூர்யா கைது செய்யப்பட்ட வழக்கிலும் அண்ணாமலை தெரிவித்தது என்னவென்றால், ஜோடனை செய்யப்பட்ட பொய்யான வழக்குகளைத் தொடுப்பது திமுக அரசுக்குப் புதிதல்ல, அதேபோல் இந்த அரசில் பொய்யான வழக்குகளை வாங்குவதும் பாஜக தொண்டனுக்குப் புதிதல்ல. 

சகோதரர் சூர்யா சிவா அவர்கள் கைது செய்யப்பட்டதை வன்மையாகக் கண்டிக்கிறது தமிழக பாஜக.பொய்யான வழக்குத் தொடுப்பதில் யார் சிறந்தவர் என்று திரு மு க ஸ்டாலின் மற்றும் செல்வி மம்தா பேனர்ஜி ஆகிய இருவருக்கும் கடுமையான போட்டி நிலவி வருகிறது. 

பார்த்துக் கொண்டிருக்கிறோம்,  பொறுத்துக் கொண்டிருக்கிறோம், எங்கள் நேரம் வரும்வரை காத்துக் கொண்டிருக்கிறோம் என அண்ணாமலை குறிப்பிட்டுள்ளார், எங்கள் நேரம் வரும் வரை காத்து கொண்டு இருக்கிறோம் என அண்ணாமலை தெரிவித்து இருப்பது ஆளும் திமுக வட்டாரத்தில் புயலை கிளப்பி இருக்கிறது, இதே போன்று நேரம் வரும் வரை காத்து கொண்டு இருப்போம் என மகாராஷ்டிரா மாநிலத்தில் பாஜக தலைவர் பட்நாவிஸ் குறிப்பிட்டு இருந்தார்.

அவர் சொல்லியது போன்று சரியாக 2.5 ஆண்டுகள் முடிவில் இப்போது சிவசேனா அரசு கவிழும் நிலை உண்டாகி இருக்கிறது, அதே போன்று ஏதேனும் திட்டம் அண்ணாமலை வசம் இருக்கிறதா? என்ற கேள்விகளும் எழுந்துள்ளன, தமிழகத்தின் அண்டை மாநிலமான புதுச்சேரியில் ஆட்சியை பிடித்த பாஜகவால் தமிழகத்தில் நிச்சயம் ஆட்சியை பிடிக்க முடியும் என்று தீவிரமாக பாஜக செயல்பட்டு கொண்டு இருக்கும் சூழலில் வரும் காலத்தில் என்ன வேண்டுமானாலும் நடக்க வாய்ப்புகள் அதிகம் இருப்பதாக தெரிவிக்கின்றனர் அரசியல் வல்லுநர்கள்.

அடுத்த பதிவில் அதிமுக உட்கட்சி விவாகரம் பாஜக எடுக்க போகும் நிலைப்பாடு என்ன என்பது குறித்து பார்க்கலாம் மறக்காமல் TNNEWS24 DIGITAL பக்கத்தை பின்பற்றி கொள்ளவும்.