ட்ரைலர் வெளியாகி பரபரப்பை உண்டு செய்த "நிலை மறந்தவன்" திரைப்படத்தின் தேதியை தமிழகத்தில் வெளியிடும் தர்ம விஸ்வல் கிரேஷன் அதிகார பூர்வமாக அறிவித்து இருக்கிறது, பகத் ஃபாசில், நஸ்ரியா, கவுதம் வாசுதேவ் மேனன், திலீஷ் போத்தன், செம்பான் வினோத், விநாயகன் உட்பட பலர் நடித்த மலையாள படம், ’டிரான்ஸ்’. இந்தப்படத்தை பிரபல இயக்குநர் அன்வர் ரஷீத் தயாரித்து இயக்கி இருந்தார்.
மதத்தின் பெயரைச் சொல்லி பிழைப்பு நடத்தி அப்பாவி மக்களின் தெய்வ நம்பிக்கையை தங்களுக்கு சாதகமாக்கி அவர்கள் உயிருடன் விளையாடுகிறது ஒரு போலி கும்பல்.இந்தப் படத்துக்கு அமல் நீரத் ஒளிப்பதிவு செய்துள்ளார். ஜாக்ஸன் விஜயன், சுஷின் ஷியாம் இசை அமைத்துள்ளனர். இந்தப் படம் தமிழில் ‘நிலை மறந்தவன்’என்ற பெயரில் வெளியாக இருக்கிறது.
தர்மா விஷுவல் கிரியேஷன்ஸ் இந்தப் படத்தை தமிழில் வெளியிடுகிறது. இந்நிலையில் திரைப்படம் 'நிலைமறந்தவன்' திரைப்படம் "ஜூலை 15" வெள்ளிக்கிழமை திரையரங்குகளில் வெளியிடப்படும் என நிறுவனம் சார்பில் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.
ட்ரைலர் வெளியான போதே சமூகவலைத்தளத்தில் பெரிய மாற்றத்தை உண்டாக்கிய நிலையில் முழு திரைப்படமும் வெளியாகி எது போன்ற விவாதத்தை உண்டாக்க போகிறது என்ற எதிர்பார்ப்பு அதிகரித்து காணப்படுகிறது.
ஏற்கனவே நிலை மறந்தவன் திரைப்படம் வெளியனால் தியேட்டர் முன்பு தீ குளிப்போம் என பாதிரியார் ஷாம் இயேசுதாஸ் குறிப்பிட்டு இருந்த சூழலில் அவர் என்ன செய்ய போகிறார் என்ற கேள்வியையும் நெட்டிசன்கள் எழுப்பி வருகின்றனர்.