24 special

முதல்வர் செய்ய வேண்டியதை டெல்லியில் நிகழ்த்திய அண்ணாமலை... ஒரே கல்லில் இரண்டு மாங்காய்...!

Annamalai and stallin
Annamalai and stallin

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தமிழக ஆளுநர் ஆர். என். ரவியை சந்தித்த பிறகு நேரடியாக டெல்லி சென்று முக்கிய அமைச்சர்களை சந்தித்து அவர்களிடம் முக்கிய கோரிக்கைகள் வைத்துள்ளார் அதில் முக்கியமானது பட்டாசு தொழிலாளர்கள் வாழ்வாதாரம் குறித்த சந்திப்பு.


மற்றொன்று அரசியல் ரீதியிலான சந்திப்பு, தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பட்டாசுகள் வெடித்து கொண்டாடுவது இந்தியாவில் பல்வேறு ஆண்டுகள் நடைமுறையில் உள்ள நடைமுறை இந்த சூழலில் சுற்று சூழலை காரணம் காட்டி நீதிமன்றங்கள் பட்டாசு வெடிக்கும் நேரத்தை குறைத்தன.

அத்துடன் பல்வேறு மாநில அரசுகள் பட்டாசு வெடிப்பதற்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதித்து வருகின்றன இந்த சூழலில் பட்டாசு தொழிலை நம்பியிருக்கும் சிவகாசி மக்களின் வாழ்வாதாரம் பெரிதும் பாதித்தது இந்நிலையில் பட்டாசு தொழிலாளர் உற்பத்தியாளர் சங்க நிர்வாகிகளை அழைத்து கொண்டு அண்ணாமலை டெல்லி சென்றார்.

மேலும் பட்டாசு வெடிப்பதற்காக இரண்டு நாட்கள் விதி விலக்கு தரவேண்டும் எனவும் ஆஸ்திரேலியா நாட்டில் புத்தாண்டு கொண்டாட்டம் அன்று பட்டாசு வெடிக்க விதிவிலக்கு இருக்கிறது அதே போல் அமெரிக்காவிலும் உண்டு எனவே இந்தியர்களின் பண்டிகைகான தீபாவளி அன்று இந்தியாவிலும் அதனை சாத்தியமாக்க கோரிக்கை வைத்தார்.

இது ஒருபுறம் என்றால் ஆளுநரிடம் தமிழகத்தில் சமர்ப்பிக்கப்பட்ட தமிழக அமைச்சர்களின் ஊழல் பட்டியல் குறித்த தகவலை உள்துறை செயலாளரிடம் அண்ணாமலை விரிவாக 60 நிமிடங்கள் விலக்கியதாகவும், துபாய் செல்லும் தமிழக முதல்வர் பயணத்தை ஆராய வேண்டும் எனவும் அண்ணாமலை பல்வேறு தரவுகளை கொடுத்துள்ளார்.

அதாவது தமிழக பட்டாசு தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க தமிழக முதல்வர் எடுக்க வேண்டிய நடவடிக்கையை அண்ணாமலை டெல்லியில் நிகழ்தியுள்ளார் அதே நேரத்தில் தமிழக அமைச்சர்கள் மீதான ஊழல் பட்டியல் குறித்தும் டெல்லியில் தெரிவிக்க வேண்டியவர்கள் மத்தியில் தெரிவித்து இருப்பதால் டெல்லி பயணத்தின் மூலம் ஒரே கல்லில் இரண்டு மாங்காய் அடித்துள்ளார் அண்ணாமலை என்றே நமக்கு நெருக்கமான டெல்லி தகவல்கள் தெரிவிக்கின்றன.