
முன்பெல்லாம் வயதிற்கு வந்த பெண்களை வெளியில் அனுப்புவதற்கு மட்டுமே பெற்றோர்கள் யோசித்து வந்தார்கள் ஆனால் இப்பொழுது பெண் குழந்தை படிப்பதற்கு பள்ளிகள் சேர்ந்து பத்திரமாக வீடு திரும்பும் வரை பெற்றோர்கள் நிம்மதியாக இருப்பதில்லை! இதற்கு காரணம் பலரின் தவறான எண்ணமும் தவறான கண்ணோட்டமும்! சிலரின் ஆசை வெறியும்! இதற்காகவே பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை இந்த சமூகத்தை எதிர்கொள்ள கற்றுக் கொடுக்கிறார்கள் அதிலும் குறிப்பாக பெண் குழந்தை என்றால் அவள் ஆணை விட இன்னும் அதிக தைரியத்தையும் தன்னம்பிக்கையும் கொண்டிருக்க வேண்டும் என்பதை உறுதியாக கூறி வருகிறார்கள். அதனால் தன்னை தவறாக நெருங்குபவர்களையும் தொடுபவர்களையும் உணர்ந்து அவர்களைக் குறித்த தகவலை பெற்றோர்களிடமும் கூறுகிறார்கள், இந்த சம்பவத்தில் சில குழந்தைகள் வீடு திருவிழாக்கள் ஆனால் சில குழந்தைகள் இறந்து விடுகிறார்கள் ஏனென்றால் பாலியல் துன்புறுத்தலிலும் ஈடுபடுபவர்கள் அந்த குழந்தைகளை கடத்தி பல நாட்களாக சித்திரவதை செய்து பிறகு தான் மாட்டிக் கொள்ளக் கூடாது என்பதற்காக கொன்று தூக்கி எறிந்து விடுகின்றனர்.
இப்படிப்பட்ட பல செய்திகள் செய்தித்தாள்களிலும் தொலைக்காட்சிகளிலும் பரபரப்பாக வெளியாகி இருப்பது மக்களின் மனதை கவலையில் ஆழ்த்தியது! அதே சமயத்தில் யாரை நம்பியும் பெண் குழந்தைகளை தற்போது அனுப்ப முடியவில்லை ஏனென்றால் உறவினர்களாக இருப்பவர்களும் பாலியல் சீண்டலில் ஈடுபடுகிறார்கள் பள்ளிக்கு செல்லும் இடத்திலும் பெண் குழந்தைகளுக்கு பாதுகாப்பு இல்லை சாதாரணமாக விளையாடச் செல்லும் பெண் குழந்தைகளுக்கும் பாதுகாப்பு இல்லாத நிலையே நிலவே வருகிறது. ஏதாவது பிரச்சனை என்றால் ஆசிரியரிடம் கூறு அவர்கள் பார்த்துக் கொள்வார்கள் என்று பெற்றோர்கள் தன் குழந்தைகளிடம் அறிவுரை கூறும் காலம் போய் எந்த பிரச்சினையாக இருந்தாலும் என்னிடமே கூறு ஆசிரியர் உட்பட உன்னிடம் தவறாக நடந்து கொண்டால் என்னிடம் கூறு என்ற வகையிலான அறிவுரைகளை தற்போது கூறி வருகிறார்கள் அவற்றை தவறு என்று கூறிவிட முடியாது அதற்கேற்ற வகையிலான செய்திகளும் சம்பவங்களுமே தற்போது நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில் இதே போன்ற சம்பவம் செங்கல்பட்டு மாவட்டத்தில் நடந்தது குறித்த செய்திகள் இணையங்களில் வைரலாகி வருகிறது. அதாவது, செங்கல்பட்டு மாவட்டம் கூடுவாஞ்சேரி அருகில் தனியார் பள்ளி ஒன்று இயங்கி வந்துள்ளது அந்த பள்ளியில் ராசையா என்பவர் உடற்பயிற்சி ஆசிரியராக பணிபுரிந்துள்ளார். மேலும் காயேஸ்குமார் என்பவரும் அதே பள்ளியில் மியூசிக்கல் ஆசிரியராக பணிபுரிந்து வந்துள்ளார். இதனை அடுத்து இவர்கள் இரண்டு பேரும் சேர்ந்து அதே பள்ளியில் எல்கேஜி படிக்கும் ஐந்து வயது சிறுமிக்கு கடந்த சில நாட்களாக பாலியல் தொந்தரவு கொடுத்து வந்துள்ளனர். ஒரு கட்டத்தில் தனக்கு நடப்பதை உணர்ந்து கொண்ட சிறுமி தன் பெற்றோர்களிடம் பள்ளியில் ஆசிரியர் தவறாக நடந்து கொண்டதை கூறியுள்ளார். இதனை அடுத்து பெற்றோர்களும் கூடுவாஞ்சேரி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.
மேலும் பள்ளி ஆசிரியர்களான இருவரையும் போலீசார் கைது செய்து தீவிர விசாரணையில் மேற்கொண்டதோடு இருவர் மீதும் போக்சோ வழக்கு பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி அவர்களை சிறையில் அடைத்துள்ளனர். இதனை அடுத்து மாணவிகளுக்கு பாதுகாப்பு இல்லை என்று அந்த பள்ளியில் பயின்று வரும் மாணவிகளின் 300க்கும் மேற்பட்ட பெற்றோர்கள் முற்றுகையிட்டுள்ளார். ஏனென்றால் இப்படி ஒரு சம்பவத்தை இரண்டு ஆசிரியர்கள் செய்ததாக புகார் எழுந்து கைது செய்யப்பட்டுள்ளனர் அதேபோன்று என்னுடைய குழந்தைக்கு நடக்காது என்று என்ன நிச்சயம் என 300ருக்கும் மேற்பட்ட மாணவிகளின் பெற்றோர்கள் பள்ளியை முற்றுகையிட்டு ஆசிரியர்கள் மீது சீறிப்பாய்ந்துள்ளனர்! இந்த செய்தியை தற்போது இணையத்தை படுவைரலாகி வருகிறது