
தமிழில் லேடி சூப்பர் ஸ்டாராக நயன்தாரா வலம் வருகிறார். தமிழ் மொழியை கடந்து தெலுங்கு, ஹிந்தி என்று அனைத்து மொழியிலும் கலக்கி வருகிறார். நயன்தாரா மீது ஆரம்பத்தில் இருந்து பல விமர்சனங்கள் வந்திருந்தும் அதை பெரியதாக எடுத்துக்கொள்ளவில்லை. சினிமாவில் ஆற்வம் காட்டி வந்தார் அவருக்கு ரசிகர்களே லேடி சூப்பர் ஸ்டார் என்ற பட்டத்தை கொடுத்தனர். இந்நிலையில் நயன்தாரா இணையத்தில் போட்ட பதிவு சிந்திக்க வைத்துள்ளது.
இயக்குனர் விக்னேஷ் சிவனை ஏழு வருடங்களாக காதலித்து வந்த நயன் இரண்டு வருடங்களுக்கு முன்புதான் அவரை கரம் பிடித்தார். அதன் பிறகு இரண்டு குழந்தைகளுக்கு தாயாக நயன்தாரா இருந்து வருகிறார். சினிமா ஒரு பக்கம் இருந்தாலும் தனது குழந்தைகளுக்கு தாயாக நேரத்தை செலவிட்டு வருகிறார். விக்னேஷ் சிவன் நீண்ட இடைவெளிக்கு பிறகு இப்போதுதான் ஒரு படத்தை இயக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார். முன்னதாக விக்னேஷ் சிவன் மீதும் ஒரு விமர்சனம் வந்தது சென்னியில் நடைபெற்ற செஸ் போட்டி விழாவிற்கு இயக்குனராக நியமிக்கப்பட்டிருந்தார். தமிழக அரசு எதற்காக விக்னேஷ் சிவனை நியமித்து வருகிறது அவர் என்ன பெரிய இயக்குனரா என கேள்வி எழுந்தது.
விக்னேஷ் சிவன் அஜித்தை வைத்து ஒரு படத்தை இயக்குவதாக கூறப்பட்டது. ஆனால், தல அஜித் கதை கேட்காமல் பைக் ரெய்டுகளில் பிஷியாக இருப்பதாக தகவல் வந்ததால் அந்த படமும் ட்ராப் செய்தார் விக்னேஷ் சிவன். அந்த கதையை இயக்குனரும் நடிகருமான பிரதீப் ரெங்கநாதனை வைத்து எல்.ஐ.சி என்ற பெயரில் படத்தை வெளியூரில் மும்முரமாக இயக்கி வருகிறார். இதற்கிடையில் திடீரென நயனும் விக்னேஷ் சிவனும் விவாகரத்து செய்ய இருப்பதாக சில செய்திகள் வைரலானது. அதாவது, நயன்தாரா இணையத்தில் விக்னேஷ் சிவனை ப்ளோ செய்வதில்லை அதனால் அவர்களது உறவில் பிரச்சனை ஏற்பட்டு விட்டதாக கூறப்பட்டது.
இந்த விஷயம் பெரியதாக நயன்தாரா மீண்டும் விக்கியின் பக்கத்தை ஃபாலோ செய்ய தொடங்கினார். ஆனால் எதோ இருவருக்கும் பிரச்சனை என பேசப்பட்ட நிலையில், இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக விக்னேஷ் சிவனும் சமீபத்தில் தனது இணையதள பக்கத்தில் நயனுடன் இருக்கும் சில புகைப்படங்களையும் வீடியோக்களையும் பகிர்ந்து எங்களுக்குள் அப்படியெல்லாம் ஒன்றும் இல்லை என மறைமுகமாக தெரிவித்திருந்தார். நயன்தாராவோ அப்படி ஏதும் பெரியதாக வெளிக்காட்டி கொள்ளவில்லை எதற்காக விக்னேஷ் சிவனை துண்டித்தார் என்பது குறித்து எந்த வித தகவலும் தெரிவிக்கவில்லை.
இந்நிலையில், மீண்டும் இணையத்தில் நயன்தாரா ஒரு சம்பவத்தை செய்துள்ளார். அதாவது, இன்று தன் இன்ஸ்டா ஸ்டோரியில் திடீரென ஒரு ஸ்டோரி வைத்துள்ளார். அதில், i’m lost என பதிவிட்டிருக்கிறார். இதை பார்த்த ரசிகர்கள் இணையத்தில் தீயாக பரவிவிட்டு வருகின்றனர். ஒரு சிலரோ இதும் முடிந்துவிட்டதா என்கிற வகையில் எது அவரை விட்டு போய்விட்டது என தெரியவில்லையே என புலம்பி வருகிறார்கள்.